SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பழைய ஈயம், பித்தளைக்கு...

2018-09-07@ 00:25:29

பத்திரிகைகளை திறந்தாலே, ஆயிரம் கோடிக்கு குறையாமல் தான் திட்ட அறிவிப்புகள் காணப்படுகின்றன. எட்டு வழிச்சாலைக்கு 10,000 கோடி, 18 ஆயிரம் கோடியில் புல்லட் ரயில்கள் என்று மத்திய, மாநில அரசுகள், மக்கள் வரிப்பணத்தை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கின்றன.சரி, சொகுசு வசதிகள் கிடைப்பதை தடுப்பானேன் என்று நினைத்துக் கொண்டு சாலையில் நடந்தால், 10 அடிக்கு ஒரு பள்ளம், ஸ்டேஷனில் மணிக்கணக்கில் ரயிலுக்கு காத்திருக்க வேண்டிய ‘அதிர்ஷ்டம்’தான் இந்திய குடிமக்களுக்கு இருக்கிறது. இந்த லட்சணத்தில் எட்டு வழிச்சாலை, புல்லட் ரயில் அறிவிப்புகள்.ஒரு நாள் பெய்த மழைக்கே, மதுரையில் சாலைகள் குண்டும், குழியுமாக, போர்க்களத்தில் சிக்கிய பூமி போன்று காணப்படுகிறது. முக்கொம்பில் ‘கண்திருஷ்டி’ பட்டு, கதவணைகள் உடைந்து போகின்றன. ஆளில்லாத லெவல் கிராசிங்கில், டிரைவரே இறங்கிவந்து கேட்டை பூட்டிவிட்டு, ரயிலை ஓட்டிச்செல்ல வேண்டிய நிலை போன்றவை இந்தியாவில் மட்டுமே காணப்படும் அதிசயங்கள்.

இப்படி ஏற்கனவே இருப்பவையே, தெர்மாக்கோலாக பறந்து சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், வெள்ளைக்காக்காய் பறக்கிறது பார் என்ற பாணியில் இஷ்டத்துக்கு அள்ளிவிடும் ஆட்சியாளர்கள், மக்களை மெத்தபடித்தவர்களின் எதிர்வரிசையை சேர்ந்தவர்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும். ரபேல் போர் விமானம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ₹560 கோடிக்கு வாங்க பேச்சு நடந்ததாக கூறப்படுகிறது. இப்போது அது ஆயிரம் கோடிக்கு மேல் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டால், பதில் சொல்ல ஆளில்லை. 20 சதவீதம் குறைந்த விலையில்தான் வாங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி முழங்குகிறார். அப்படி என்றால் ஒரு விமானம் ₹448 கோடிக்கு வாங்கப்படுகிறதா என்றால், அதற்கு முறைப்புதான் வருகிறது. குறைத்து வாங்குகிறோம் என்று கூறுபவர்கள், அதை வெளிப்படையாக சொல்வதில், என்ன குறை வந்துவிடப் போகிறது?. கேட்டால் எல்லையில் ராணுவ வீரர்கள்... என்று முழங்க ஆரம்பித்துவிடுகிறார்கள் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். அவர்கள் கேட்பதும் சரிதானே? மக்கள் உங்களிடம் கேட்பது, இருக்கும் சாலைகளையே தரமானதாக ஆக்குங்கள். கண்திருஷ்டி படாத அளவுக்கு அணைகளை பலமாக்குங்கள், ரயில்களில் எலிகள் இல்லாமலும், மூட்டை பூச்சி கடிக்காத அளவுக்கும் தரமானதாக ஆக்குங்கள். அதற்கப்புறம், எட்டு வழிச்சாலையையும், புல்லட் ரயிலையும் நாங்களே உங்களிடம் கேட்கிறோம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

 • greenlandicemelt

  கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

 • thirupathilast

  திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்