SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரண்டு போலீஸ் அதிகாரிகளின் பேச்சை கேட்டு அரசு மக்களிடம் செல்வாக்கு இழந்துள்ளது பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2018-09-06@ 01:07:01

‘‘என்ன விக்கி சிபிஐ ரெய்டால மாநிலமே அல்லோகலப்படுது... முதல்வர் மாணவர்களுக்கு பரிசு வழங்கிட்டு இருக்காரே...’’ என்று சிரியஸாக கேட்டர் பீட்டர் மாமா.‘‘ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில போலீஸ் அதிகாரிகளை மட்டுமே வைத்து கொண்டு நடவடிக்கை எடுத்து வந்தார்... அதே பாணியில் தற்போது முதல்வராக உள்ள எடப்பாடியாரிடம் நேரடி ெதாடர்பு உள்ள போலீஸ்  அதிகாரிகள் 2 பேர்தான் உள்ளார்களாம். இவர்கள்தான் நினைத்த நேரத்தில் முதல்வரை நேரடியாக சந்திக்க முடியும்... மற்ற அதிகாரிகளை சந்திக்க முடியாத வகையில் தனக்கு தானே ஒரு வளையத்தை எடப்பாடியார் ஏற்படுத்தி  கொண்டார்... இந்த நிலையில் குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய டிஜிபியை உடனே பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று சில அமைச்சர்கள், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை வைச்சாங்க... ஆனால் இந்த டிஜிபி  தனக்கு சாதகமாக இருப்பார் என்று எடப்பாடியாரிடம் சில போலீஸ் அதிகாரிகள் தூபம் போட, அவரும் அதுதான் சரி என நினைத்தார். அதனால் மாற்றாமல் ைவத்ததன் விளைவு, சிபிஐ ரெய்டில் ஒரு மாநில டிஜிபியே வீட்டை  விட்டு வெளியே வராமல் ஹவுஸ் அரெஸ்ட் செய்ததுபோல வீட்டில் முடங்கி கிடக்கிறார்... மாநில அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது.

இரண்டாவதாக லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரி ஒருவரின் கையில் ஊழல்  தொடர்பான வழக்குகள் இருக்கு... அவர் மீதும் பாலியல் புகார்கள் இருக்கு... அவரை மாற்ற வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. ஆனால் பாலியல் அதிகாரிதான் நமக்கு ஏற்றவர். அவர் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டாம் என்று சில அதிகாரிகள் சொன்னார்களாம். அதை நம்பி எடப்பாடியார் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது அதிகாரியை காப்பாற்றப்போய், அரசுக்கே கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறதாம். இப்படி ரெண்டு அதிகாரிகளின்  துணையோடு ஆட்சியை நடத்தலாம் என்ற நினைப்பால் அவர்களை பதவியில் இருந்து தூக்கவில்லை. ஆனால் சிபிஐ ரெய்டுக்கு பிறகு ஆட்சிக்கும், கட்சிக்கும் பயங்கர கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது... இப்போதாவது முதல்வர்  மாறுவாரா.’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அப்போ ஐபிஎஸ் அதிகாரிங்க...’’‘‘ உப்பு திண்ணவன் தண்ணி குடிச்சு தானே ஆகணும்... அந்த வகையில குட்கா மூலம் சம்பாதித்தது சில கோடிகள்... அது மட்டுமில்லாம அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு கோடீஸ்வரர்களிடம் இருந்து பல்வேறு  காரியங்களை நிறைவேற்றுவதற்காக வந்த பணம் குட்காவில் கிடைத்த கமிஷனுக்கு மேலேயாம்... ரியல் எஸ்டேட்... பெரிய இடத்து காதல் விவகாரங்களை மூடி மறைப்பது... போலீஸ் நிதியில் கை வைத்ததுனு பல விஷயங்கள்  அடங்குமாம்... சிபிஐயின் இந்த ரெய்டில் இந்த விஷயங்களும் சிக்கி இருக்கு... இதை வைத்தே அரசு பணியில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யலாமாம்... அந்த அளவுக்கு சொத்து  பட்டியல் மலைபோல ஐபிஎஸ் அதிகாரிகள் வீட்டில் கைப்பற்றப்பட்டு இருக்காம்... இவர்கள் தமிழகத்தில் வாங்கிய சொத்து, தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், முதலீடுகளைவிட வெளி மாநிலத்தில் வாங்கி குவித்ததுதான்  அதிகமாம்... அதுவும் பினாமிகள், உறவினர்கள் பெயரில் அதிகம் உள்ளதாம்... இது அப்படியே வருமான வரி புலனாய்வு பிரிவுக்கு ஒரு அறிக்கையாக தயாரித்து அனுப்பி வைத்தால் அத்தனை பேரும் கோர்ட், வழக்கு,  விசாரணைனு தினந்தோறும் செல்ல வேண்டி வருமாம்... அதனால டெல்லியில தங்களுக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி ரெய்டு நடக்கட்டும்... ஆனா மேல் நடவடிக்கையை கிடப்பில் போடுங்கனு அழுத்தம் கொடுத்து  வர்றாங்களாம்... டெல்லி மேலிடமும் தமிழிசையால் பாஜவுக்கு ஏற்பட்ட கறையை போக்கவே இந்த நடவடிக்கை... கவலைப்பட வேண்டாம் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ரெய்டு பற்றி விஜயபாஸ்கர் என்ன நினைக்கிறாராம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அவர் எதுக்கும் கவலைப்படலையாம்... எது நடந்தாலும் நடக்கட்டும்னு இருந்தாராம்...வீட்டுக்கு வந்த அதிகாரிகளுக்கு காபி மற்றும் உணவு உபசரிப்பு செய்ய உதவியாளர்களுக்கு சொன்னாராம்... அதிகாரிகள் அதை ஏற்க  மறுத்துட்டாங்களாம்... அவங்களே டிபனை வெளியில் இருந்து வரவழைத்து சாப்பிட்டாங்களாம்... சிபிஐ அதிகாரிகளும் சாஃப்ட்டாக தான் டீல் செய்தாங்களாம்... எப்டியும் சிபிஐ வந்து குடைந்து எடுத்துடுவாங்கனு அவருக்கு நன்றாக  தெரியும் என்பதால் எல்லாத்துக்கும் ரெடியாகவே இருந்தாராம்... மற்றபடி அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தவர் சில சமயம் எனக்கு தெரியாமல் நடந்து இருக்கலாம்... டைரியில் குறிப்பிட்டுள்ளதால நான் வாங்கி  இருக்கிறேன்னு அர்த்தம் இல்ல... என் பெயரை வேறு யாராவது தவறாக பயன்படுத்தி அதிகாரிகள் வாங்கி இருக்கலாம்... என்னிடம் நேரடியாக மாதவராவ் பணம் எதுவும் கொடுக்கவில்லை... எங்க ரெண்டு பேரை நேருக்கு நேர்  வைச்சு விசாரிங்கனு சொன்னாராம்... அதை நாங்க பார்த்துக்குறோம் என சிபிஐ அதிகாரிகள் சொன்னாங்களாம்... அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி அதை நமுனாவில் குறிப்பிட்டு கையெழுத்து வாங்கிட்டாங்களாம்...   விசாரணைக்கு அழைக்கும்போது வரணும்னு சொன்னாங்களாம்... என்னதான் வெளியே தைரியமாக இருப்பதாக காட்டிக் கொண்டாலும் அவருக்கு உள்ளுக்குள் உதறல்தானாம்... இதனால நேற்றைய நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும்  ரத்து செய்துவிட்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-08-2019

  19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-08-2019

  18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்