SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆனால்...?

2018-09-06@ 01:02:45

அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் வசதிக்காக பல்வேறு மாற்றங்களை அறிவித்து இருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே நேரடியாக 8, 10, பிளஸ்1, பிளஸ் 2 தேர்வு எழுத முடியும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மேலும் தனித்தேர்வர்களுக்காக செப்டம்பர், அக்டோபரில் நடத்தப்பட்டு வந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இனிமேல் ஆண்டு ஒன்றுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வும், இதில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன், ஜூலையில் உடனடி தேர்வும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவால் தினசரி பள்ளி செல்ல முடியாமல் தவிக்கும் குறிப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு நேரடி தேர்வு நல்ல செய்தி. ஏனெனில் படிக்கும் ஆர்வம், திறமை இருந்தும், ஆண்டுக்கு குறிப்பிட்ட நாட்கள் வகுப்பிற்கு செல்ல முடியாமல் மீண்டும் அதே வகுப்பில் தொடர வேண்டிய சூழல் சில மாணவர்களுக்கு ஏற்படுவது இனி தவிர்க்கப்படும். அவர்கள் நேரடியாக தேர்வு எழுதி கொள்ளலாம்.

அடுத்ததாக தனித்தேர்வு ரத்து. பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டால் எம்பிபிஎஸ் மற்றும் முக்கிய கல்லூரிகளில் சேர்வதற்காக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒருகல்வி ஆண்டை புறக்கணித்து விட்டு தனித்தேர்வில் பங்கேற்று மதிப்பெண்களை அதிகரித்து அதன் மூலம் மறுஆண்டில் படித்து வரும் மாணவர்களின் இடத்தை தட்டிப்பறிக்கிறார்கள். இனிமேல் அந்த வாய்ப்பு இல்லை. அதே போல் மார்ச், ஏப்ரல் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன், ஜூலையில் மறுதேர்வு நடத்தப்படுவதால், அவர்கள் தேர்ச்சி அடைந்தால் அந்த கல்வியாண்டு பாதிக்கப்படாது. இவையெல்லாம் நல்ல திட்டம் தான். ஆனால்...

போதுமான மாணவர் எண்ணிக்கை இல்லாததால் தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதை தமிழக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.  தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு  புதியப் பாடத்திட்டம் குறித்தும் கூட இதுவரை முழுமையான பயிற்சி வழங்கப்படவில்லை. வெறும் இரண்டு நாள் பயிற்சி எந்த பயனை அளிக்கும் என்பது ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம். தமிழக அரசு பள்ளிகளின் கட்டமைப்பை பற்றி கேட்கவே வேண்டாம். தாலுகாவுக்கு ஒரு பள்ளி வீதம் ஒவ்வொரு மாதமும் ஒரு பள்ளியை தேர்வு செய்து மறுசீரமைப்பு தொடங்கினால் கூட தமிழக அரசு பள்ளிகள் ஏற்றம் பெறும்.

அதற்கு முதலில் தற்போதைய கால கட்டத்தில் பள்ளிகளில் என்ன வசதிகள் தேவை, அடுத்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் என்ன, வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளின் நடைமுறை என்ன, டிஜிட்டல் கல்வியை எப்படி அறிமுகப்படுத்தலாம் என்றெல்லாம் போர்க்கால அடிப்படையில் யோசித்து திட்டமிட்டு இருக்க வேண்டும். ஆனால்.... இன்றைய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் அப்படியா இருக்கிறார்கள்?


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gslvrocket

  ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

 • 15-11-2018

  15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 129JawaharlalNehru

  நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

 • 2018TiruvannamalaiDeepam

  திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

 • israelfire

  காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்