SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏர்போர்ட் விவகாரம் தேசிய அளவில் பாஜவுக்கு ‘பேக் ஃபயர்’ ஆனது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2018-09-05@ 00:39:40

‘என்ன விக்கி லேப்டாப்புல என்ன பார்க்கறீங்க...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.

‘‘ ஏர்போர்ட்டுல நடந்த சமாச்சாரம் , கடைசில பேக்ஃபயர்’ ஆன விஷயத்தை நினைச்சேன் சிரிச்சேன்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அது என்ன ‘பேக்ஃபயர்’...’’

‘‘ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர்கள், நெட்டிசன்கள் பாஜவை வறுத்தெடுத்து வர்றாங்க.. குறிப்பா சமூக செயற்பாட்டாளர்கள் ஐவரை போலீசார் டெல்லியில் வைத்து கைது செய்தது சர்வதேச அளவில் பாஜவுக்கு பயங்கர நெருக்கடியை ஏற்படுத்தியது... சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள், தேசிய கட்சி தலைவர்கள், மாநில கட்சி தலைவர்கள் என்று எல்லோரும் சகட்டு மேனிக்கு அறிக்கை, டிவீட், பேக்ஸ்புக் பதிவுனு போட்டு தாளிச்சுட்டாங்க... இதனால பாஜவின் செல்வாக்கு சர்வதேச அளவில் மட்டுமில்ல கருத்துரிமை போராளிகளிடையே கடும் எதிர்ப்பை நாட்டிற்குள்ளேயே சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் பாஜவுக்கு ஏற்பட்டுள்ளது... அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் நிலையில் பாஜவுக்கு எதிராக கோஷம் போட்டதற்காக தூத்துக்குடி விமான நிலையத்துல ஒரு பெண்ணை கைது செய்ததை யாரும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்ல... இந்த விஷயத்துல தமிழிசை அடிச்ச பல்டி தான் அந்தர் பல்டி... நான் விமான நிலைய போலீஸ்ல தான் புகார் கொடுத்தேன்... லோக்கல் போலீஸ் நடவடிக்ைக எடுத்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லைனு சொல்லி தப்பிக்க பார்த்து இருக்காங்க... இந்திய விமான நிலைய ஆணைய சட்டப்படி விமான நிலையத்துக்குள் எந்த பிரச்னை நடந்தாலும் அங்குள்ள லோக்கல் போலீசுக்குதான் வழக்கு மாற்றப்படும். இதுதான் விதிமுறை... இது கூட தெரியாமல் நான் போலீசில் புகார் கொடுக்கவில்லை என்று சொல்லி தப்பிக்க முயற்சிப்பது தமிழிசையின் தோல்வியை காட்டுவதாக சமூக செயற்பாட்டாளர்கள் சொல்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நான் வேறு மாதிரி ேகள்விபட்டேனே...’’ என்று கொக்கி போட்டார் பீட்டர் மாமா.

‘‘பாஜவுக்கு பெரிய பிரேக்கிங் ஏற்படுத்தி ெகாடுக்க கிங்கானவர் சகட்டு மேனிக்கு எல்லோரையும் வம்புக்கு இழுத்தாலும் பெரிய அளவுக்கு பூ கட்சிக்கு எழுச்சி ஏற்படல... அது புஸ்வாணமாகவே போய்விடுகிறது... பொன்னார் பற்றி சொல்லவே தேவை இல்லை... அவர் தமிழ்நாட்டில் தீவிரவாதம் என்று புதுக்கதையை சொன்னாலும் தமிழகத்தில் எடுபடல... இப்போ தமிழிசை ‘டேர்ம்’... சோபியா விஷயத்துல தமிழக பாஜவுக்கு பப்ளிசிட்டி கிடைச்சாலும்... அது நெகட்டீவ்வாகத்தான் முடிஞ்சு இருக்காம்... இந்த விஷயத்துல டெல்லி மேலிடத்துல இருந்து செம டோஸ் விழுந்ததாம்... ஒரு பெண்ைண கையாள தெரியல... உங்களால கட்சிக்கு கெட்டப்பெயர்... நாங்க வேறு முடிவுக்கு வந்து இருக்கோம்னு நேரடியாகவே சொல்லிட்டாங்களாம்... மத்திய உளவுத்துறையும் இந்தியா முழுவதும் ஒன்றுேம இல்லாத விஷயத்தில் இந்த பின்னடைவு தேவையில்லை... பப்ளிசிட்டி தான் இப்போது பேக்ஃபயர் ஆனதாக அக்கட்சி வட்டாரங்களில் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆட்சி உனக்கு... கட்சி எனக்குனு ஒரு அக்ரிமென்ட் போட்டு இருக்காங்களாமே தெரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ம்.. தர்மயுத்தக்காரர் தான் டம்மியாக்கப்படுகிறோம்னு நினைக்க தொடங்கியவுடன் எடுத்த கடைசி ஆயுதம்தான் கட்சிக்காக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்னு சொன்னது... அதனால கட்சியின் மூத்த நிர்வாகிகள் எல்லாம் அதிமுக கூட்டத்துக்கு பிறகு தனியாக தர்மயுத்தக்காரரையும் மாங்கனி மாவட்டக்காரரையும் அழைத்து பேசினாங்க... ஆட்சியை நீங்க பார்த்துக்குங்க... கட்சி வளர்ச்சி, உறுப்பினர் சேர்க்கை, பொதுக்கூட்டங்கள், கட்சி நிர்வாகிகளின் பிரச்னைகளை தீர்ப்பது போன்றவற்றை தர்மயுத்தக்காரர் பார்த்துக் கொள்வார்... கட்சியில் இருந்து நிர்வாகிகளை நீக்குவது மட்டும் ஒரு குழு விசாரணை அறிக்ைக கொடுத்த பிறகு இரண்டு தலைவர்களும் சேர்ந்து நீக்குவது என்று முடிவானதாம்... அதுக்கு அப்புறம்தான் சேலம்காரர் நிறைய அரசு நிகழ்ச்சிகள், ஆலோசனைகள், அரசு விழாக்களில் பங்கேற்று வர்றாராம்... அதேபோல தர்மயுத்தக்காரர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வர்றாராம்... சமீபத்தில் நடந்த கூட்டத்தில் கூட, ஆட்சிக்கு ஒரு பிரச்னை வந்தால் சும்மா இருக்க மாட்டேன்... முதல் ஆளாக நானே களத்தில் இறங்குவேன்னு மாங்கனி மாவட்டக்காரருக்கு பகிரங்கமாகவும் முதல்முறையாகவும் சப்போர்ட் பண்ணியிருக்காரு...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காங்கிரஸ்ல என்ன பிரச்னை...’’

‘‘அது வழக்கமான பிரச்னைதான்.. அதை விடு... ஆர்கேநகர்காரர் ரொம்பவே அதிர்ச்சியில இருக்காராம்... ஓபிஎஸ், இபிஎஸ் பழசை மறந்து ஒன்றாக இணைந்து தன் அஸ்திவாரத்தையே ஆட்டி பார்க்க ஆரம்பிச்சதை நினைச்சு பயப்பட ஆரம்பித்து இருக்காராம்... அதனால ஆர்கேநகர்காரர் போய்விட்டு வந்த மாவட்டங்களுக்கு இவரும் ஓபிஎஸ்சும் அரசியல் டூர் அடிக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உடல் உறுப்பு தானத்துல என்னதான் நடக்குது...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘சர்வதேச அளவுல கோடிக்கணக்குல நடந்த வியாபாரம் என்பதால... அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய அமைப்புகள் தற்போது ரகசியமாக கண்காணிக்க துவங்கி இருக்காம்... விரைவில் தமிழகம் மட்டுமில்ல மும்பை, டெல்லி உள்பட பெரிய நெட்வொர்க் வைத்து செயல்படும் தலைவர்கள் எல்லாம் சிக்கும் ஆபத்து இருக்காம்... பெரும்பாலான உடல்உறுப்பு தானம் விழிப்புணர்வு என்ற பெயரில் காப்பாற்றக் கூடிய நிலையில் உள்ளவர்களையும் வேண்டும் என்றே மூளைச்சாவு அடைந்துவிட்டதாக கூறி.. உடல்தானத்தில் கையெழுத்து வாங்கி பெரிய அளவில் பணத்தை பார்த்துவிட்டார்களாம்... இது எல்லாம் மத்திய உளவு அமைப்புகள் கண்காணித்து அறிக்கை ஒன்றை மத்திய அரசின் சுகாதாரத்துறைக்கு அனுப்பி இருக்காங்களாம்... அதனால அங்கிருந்து கிரீன் சிக்னல் கிடைத்ததும்... உடல் உறுப்பு தானம் குறித்த தீவிர விசாரணை சென்னையில் இருந்து துவங்கும்னு பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.      


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்