SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆர்கேநகர்காரர் நடத்துற கூட்டம் எல்லாம் கருப்பு பணத்துலதான் நடப்பதாக தர்மயுத்தக்காரர் போட்டு உடைத்ததை சொல்கிறார் wiki யானந்தா

2018-09-04@ 02:53:35

‘‘என்ன காபி ரொம்ப சூடோ...’’ என்று கலாய்த்தார் பீட்டர் மாமா.‘‘நான் ராஜினாமா செய்கிறேன் என்று சொன்ன பிறகு தன் சூறாவளி பயணத்தை துவக்கிய தர்மயுத்தக்காரர்... தினந்தோறும் ஒவ்வொரு குண்டாக போட்டு வர்றார்... மந்திரி உதை வாங்கியதை சொன்ன தர்மயுத்தக்காரர், இப்போது ஆர்கேநகர்காரர் நடத்தும் கூட்டம் எல்லாம் கருப்பு பணத்தில் நடப்பதாக ஒரு குண்டை போட்டுள்ளார்... இது குறித்து அவருக்கு நெருக்கமான நபர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த தகவலை சொல்றேன் கேளு... ஜெயலலிதா இறப்பதற்கு முன்பும் பின்பும் மாதாமாதம் ஆர்கேநகர்காரர் குடும்ப சொந்தங்களுக்கு மந்திரிகள், தொழிலதிபர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மூலம் பல கோடி பணபறிமாற்றம் நடந்துச்சாம்... அதில் லைசென்ஸ், அப்பாயின்மென்ட் உள்பட பல பணிகளும் அடங்குமாம்... எல்லாம் கிச்சன் கேபினட் வழியாகவே இந்த பணபறிமாற்றம் நடந்ததாம்... அப்போது பதுக்கிய பணமெல்லாம் புது 2 ஆயிரம், 500 ரூபாயாக மாத்திட்டாங்களாம்... இப்போது அந்த பணம்தான் பொதுக்கூட்டம் நடத்தவும், நிதி உதவி வழங்கவும் பயன்படுத்துறாங்கனு தர்மயுத்தக்காரர் தரப்பு சொல்லுது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அப்புறம் வேற என்ன மேட்டர் இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘முத்து மாவட்டத்தை மறந்துட்டீங்களே... அங்கே என்ன நடக்குது...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இந்த முறை அதிமுக இல்ல... தேசிய கட்சியான பாஜவை பற்றி சொல்கிறேன் கேளு... சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானத்தில் பயணம் செய்த தமிழக பாஜ தலைவரும் தூத்துக்குடி பெண் பயணியும் ஒரே விமானத்தில் பயணம் செய்து இருக்காங்க... பெண் தலைவர் விமானத்தில் லக்கேஜை எடுக்கும் போது, அந்த இளம் பெண் பாஜவுக்கு எதிராகவும், மோடியை கண்டித்தும் கையை உயர்த்தி கோஷம் போட்டாராம். விமானத்திலிருந்து இறங்கிய பின்னரும் இந்த கோஷம் தொடர்ந்ததாம். இதனால் விமான நிலையத்தில் பெண் தலைவருக்கும், அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் நீண்டதாம். விமர்சிப்பது எனது பேச்சுரிமை என இளம்பெண் கூற, பெண் தலைவர் அந்த பெண்ணை விடவில்லையாம்.

இறுதியாக விமான நிலைய போலீசில் பெண் தலைவர் அளித்த புகாரில் ஷோபியா என்ற அந்த பெண்ணை உடனே கைது செய்துட்டாங்க... பதிலுக்கு அந்த பெண்ணின் தந்தை என் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தாங்கனு புகார் கொடுக்க... ஒரு புகாரில் நடவடிக்கை எடுத்த போலீஸ் மற்றொரு புகாரை குப்பை தொட்டியில் போட்டுவிட்டதாம்... பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியவரை பிடிக்காமல் பாதுகாப்பு கொடுத்த போலீஸ்... சும்மா பேசிய பெண்ணை ஜெயிலுக்கு அனுப்பியது எந்த விதத்தில் நியாயம்னு கட்சி தலைவர்கள் கொந்தளிச்சுட்டாங்களாம்... அதற்குள் தன் கற்பனை சக்தியை பறக்கவிட்ட தமிழிசை.. அந்த ெபண்ணை பார்த்தால் சாதாரண பயணி போல தெரியவில்லை. அவரது பின்புலத்தை நான் சந்தேகிக்கிறேன். எனது உயிருக்கே ஆபத்து இருக்கிறது. இதற்கு பின்னால் தீவிரவாதிகளின் சதி இருக்கிறது. தமிழகத்தில் இதுபோன்ற அமைப்புகளுக்கு நிச்சயமாக ஆதரவு இருக்கக் கூடாது. இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்னு ஒரு பட்டிமன்றத்தையே நிகழ்த்திவிட்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அல்வா மாவட்டத்துல அல்வா நல்லா இருக்கா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நெல்லை மாவட்டம், நெல்கட்டும்செவலில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா நடந்தது. இதற்காக துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் 10 அமைச்சர்களும், டிடிவி தினகரன் தலைமையிலான அணியும் மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஓபிஎஸ் தரப்பினருக்கு காலையில் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், டிடிவி அணிக்கு பிற்பகல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இரு தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் தங்களின் பலத்தை காட்ட திட்டமிட்டாங்க. இதற்காக உள்ளூர் கட்சியினர் முன்பே ஆலோசனை கூட்டமும் நடத்தி ஏற்பாடுகளை செய்தனர். இதனால் உள்ளூர் போலீசார் மட்டுமல்லாது வெளி மாவட்ட போலீசையும் குவித்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி இரு தரப்பினருக்கும் கூட்டம் பெரிசா இல்லையாம். ஓபிஎஸ் தரப்பை விட அதிக கூட்டம் காட்டனும்னு டிடிவி தரப்பு ரெம்பவும் மெனக்கெட்டாங்களாம். இதற்காக வெளிமாநிலத்தைச் சேர்ந்தவங்களைக் கூட விடலையாம். அவர்களையும் அழைத்து வந்திருந்தாங்களாம். ஆனாலும் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லையாம். இதனால ஆர்.கே.நகர் காரர் அப்செட்டாம் என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்