SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வருமா வராக்கடன்?

2018-09-03@ 05:46:35

கடந்த சில ஆண்டுகளாக வராக்கடன் வாட்டியெடுக்கிறது. கோடிகளில் புரளும் செல்வந்தர்கள் வங்கிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு கடன் பெற்றுவிட்டு எளிதில் வெளிநாடுகளுக்கு தப்பி விடுகின்றனர்.விஜய் மல்லையாவின் 9 ஆயிரம் கோடி, நீரவ் மோடியின் 11 ஆயிரம் கோடி, விக்ரம் கோத்தாரியின் 800 கோடி என நீளும் கடன் பட்டியல் வங்கிகளை வருத்தமடைய வைக்கும். மிகப்பெரிய அளவில் வங்கிகளில் கடன் மோசடி செய்தவர்கள் 12 பேர் என பிரதமர் மோடியே இப்போது பட்டியலிட்டுள்ளார்.
அவர்கள் கட்ட வேண்டிய கடன் தொகை மட்டுமே ₹1.75 லட்சம் ேகாடி எனவும், 27 பேரின் நிலுவை தொகை ₹1 லட்சம் கோடி என விஷயத்தை வௌிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். வராக்கடன் லட்சக்கணக்கான கோடி என அதிகரித்தால் வங்கிகளின் எதிர்காலம் என்னாவது என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

பெரும்தொகை மோசடி செய்த 12 பேருக்கும் நாங்கள் எவ்வித கடனும் வழங்கவில்லை என பிரதமர் மோடி, முந்தைய காங்கிரஸ் மீது பழி சுமத்தவும் முற்பட்டுள்ளார். உண்மையில் வராக்கடன் வசூலிப்பதில் இந்திய வங்கிகள் ஏழைகளுக்கும், செல்வந்தர்களுக்கும் வெவ்வேறு முறைகளை கையாள்வது கண் கூடு. இதன் விளைவே வங்கிகளின் வராக்கடன் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளன. கோடிக்கணக்கில் கடன் வைத்திருக்கும் தொழிலதிபர்களிடம் சல்லிக்காசு விடாமல் வசூலிப்போம் என்ற பிரதமரின் இப்போதைய அறிவிப்பு, கருப்பு பண மீட்பு கதை போல் ஆகிவிடக் கூடாது. சுவிஸ் வங்கிகளில் முடங்கியுள்ள இந்தியர்களின் பணத்தை மீட்டால் ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ₹15 லட்சம் டெப்பாசிட் செய்ய முடியும் என பிரதமர் தேர்தல் பிரசாரத்தில் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு எப்போதோ காற்றில் கலந்து விட்டது. மோடி ஆட்சிக்கு வந்தபிறகு சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு 80 சதவீதம் குறைந்து விட்டது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயலின் நற்சான்று பத்திரம் வெறும் இயலாமையின் வெளிப்பாடு.

வங்கிகளில் வாரி சுருட்டிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர்களின் சொத்தை மொத்தமாக பறிமுதல் செய்ய சமீபத்தில் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தி வங்கி கடன்கள் முழுவதையும் வசூலிக்க வேண்டும். வங்கிகள் கடன் வழங்குவதில் செல்வந்தர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும். அரசியல் ரீதியாக குற்றம் சாட்டாமல் வங்கிகளை காப்பாற்ற மத்திய அரசு மனமுவந்து சில நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-09-2018

  26-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • autumnfestivalchina

  சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

 • drumpsusma

  நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

 • rahulgandhiamedi

  உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

 • usstromattack

  ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்