SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்கேநகர்காரரிடம் அடிவாங்கிய மந்திரி யார் என்பது பற்றிய ‘பெட்டிங்’ கொடிகட்டி பறப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2018-09-03@ 01:26:48

‘‘போஸ்ட் ஆபீஸ்ல யாருக்கு அக்கவுன்ட் ஆரம்பிக்க போறீங்க..?.’’ என்று ஆர்வமுடன் கேட்டர் பீட்டர் மாமா. ‘‘போஸ்ட் ஆபீஸ் பேங்க்ல பணம் போடுறது இருக்கட்டும்... ஆர்கேநகர்காரர் பல மந்திரிகளை நையப்புடைத்து விட்டாராம்... அதையும் தர்மயுத்தக்காரரே புட்டு புட்டு வைச்சு இருக்காரு... இப்போ, ஆர்கேநகர்காரர் கையால அடி உதை வாங்கிய அந்த மந்திரி யாரா இருக்கும்னு அதிமுக.வுல ஜோரா ‘பெட்டிங்’ நடக்குது... மஞ்சள் மாவட்டமா, மலைக்கோட்டை மாவட்டமா, வெயிலூர் மாவட்டமா, மாங்கனி மாவட்டமான்னு ஒரே பேச்சா இருக்கு... இன்னொரு குரூப்போ, எந்த அமைச்சர் ஆர்கேநகர்காரரை ரொம்ப விமர்சிக்கிறாரோ... அவருக்குதான் அடி விழுந்திருக்கும்னு பேசிக்கிறாங்க... உதாரணத்துக்கு வடிவேலு காமெடிய சொல்லலாம்... ஏன்னா, அவருதான் ஒரு படத்துல, ‘என் கட்சிக்காரரை அடிச்சதோடு விட்டு இருக்கலாம்... அத விடுத்து ஊர் ஊரா தூக்கிக்கிட்டு போய் அடிக்கலாமா...? அவர் எவ்வளவுதான் அடி தாங்குவார்...?’ன்னு டயலாக் பேசுவாரு. ஆனா, உண்மையிலேயே அந்த அடிய வாங்கினவரு அவருதான். அவர தான் ரவுடிங்க வெளுத்து வாங்கியிருப்பாங்க... அந்த மாதிரி, நம்ம மந்திரிங்கள்ல யார் அப்டி பேசுறது...? அதை நாம எப்டி கண்டுபிடிக்கிறதுன்னு கட்சிக்காரங்க மண்டைய குழப்பிக்கிட்டு இருக்காங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அது என்ன மூன்று மாசம்...’’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இது மாங்காய் மேட்டர் இல்ல... சாம்பல் மேட்டரும் இல்ல... தர்மயுத்தக்காரருக்கு சிஎம் பதவி மேல ஆசையே இல்லையாம்... எல்லாரும் வற்புறுத்தியதால மூணு மாசம் மட்டும் இருக்குறேன்னு ஒத்துக்குனாராம்... அது என்ன மூணு மாசம்னு விசாரிச்சா... அதுக்கு மேலே இருந்தா பல பல பிரச்னைங்கள சந்திக்க வேண்டி இருக்கும்... அதனால, அரசியல்ல நிரந்தரமா இருக்கணும்னா... மூணு மாசத்துக்கு அப்புறம் இந்த அரசு பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும்... அப்போ யாரோ சில அமைச்சர்கள் செய்யற தவறால உன் பெயர் கெட்டுடும்னு யாேரா சொன்னாங்களாம்... அதனாலதான் முதல்ல மூன்று மாசம்னு சொன்னாராம்... அப்புறம் பதவி ஆசை யாரை விட்டுது.. அதுக்கும் பரிகாரம் இருக்குன்னு யாரோ சொன்னதை ேகட்டதால வந்தது வினை... உடனே அவரை பதவியில் இருந்து தூக்கிட்டு மாங்கனி மாவட்டத்துக்காரரை உட்கார வைச்சுட்டாங்க... இப்ேபா மாங்கனி மாவட்டத்துக்காரர் படற அவஸ்தையை பார்த்து தனக்குள் சிரிக்கிறாராம், தர்மயுத்தக்காரர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குட்கா விஷயத்துல சிபிஐக்கு மாநில அரசு சப்போர்ட் எப்டி இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குட்கா விஷயத்துல சிபிஐக்கு எந்த உதவியும் மாநில போலீஸ், லஞ்ச ஒழிப்புத்துறையில இருந்து கிடைக்கலையாம்... தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அந்த கேஸ்ல எவ்வளவு இழுக்க முடியுமோ... அவ்வளவு இழுக்க முடிவு செஞ்சு இருக்காம்... அதனாலதான் அதன் உயரதிகாரி பாலியல் புகார்ல சிக்கினா கூட மாத்தாம வைச்சுருக்காங்க... ஆனா சிபிஐக்கிட்ட இருக்கிற ஒரே ஆதாரம் அந்த டைரியும், மாதவராவ் ஒப்புதல் வாக்குமூலம் மட்டும்தானாம்... அதனால தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உயரதிகாரியை வைத்து சிபிஐல ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களை வைத்து இழுத்தடிக்க முயற்சிக்கிறாங்களாம்... கீழ் நிலை அதிகாரிகளை பற்றி கவலைப்பட வேண்டாம்... வழக்கு, விசாரணையை அவங்க பார்த்துப்பாங்க... அரசியல்வாதிகள், உயரதிகாரிகளை மட்டும் எப்டியாவது காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கிறாங்களாம்... அதுவும் அதிமுக விசுவாச அதிகாரிகளை காப்பாற்றவும் மற்ற அதிகாரிகளை கழட்டி விடவும் முயற்சி நடக்குதாம்... எது எப்டி இருந்தாலும் எங்களிடம் உள்ள ஆதாரமே போதும்... மாநில அரசின் சப்போர்ட் எங்களுக்கு தேவையில்லை. இந்த வழக்கு கோர்ட் மூலம் நேரடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டு இருக்கு... அதனால யாரை பற்றியும் எங்களுக்கு கவலை இல்லைனு சொல்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வருவார்... ஆனால் வரமாட்டார், அவரு யாரு...’’ என்று புதிர் போட்டார் பீட்டர் மாமா. ‘‘பூ கட்சியின் தேசிய தலைவரை தானே சொல்றே... அவர் கால்குலேட்டர், உளவுத்துறை, டிடெக்டிவ் நிறுவன அறிக்கைகளுடன் உட்கார்ந்து சீட்டு கணக்கு பார்த்து ெகாண்டு இருக்காரு... ஏன்னா பெரும்பாலான ரிசல்ட்ஸ் மத்தியில் உள்ள ஆளுங்கட்சிக்கு நெகட்டிவ்வாகதான் வந்துண்டு இருக்கு... அதையேதான் வானத்தில் அடிக்கடி பறக்கும் தலைவரின் பேச்சுமூலம் வெளியே வந்து இருக்கு... அதனால இருப்பதை விட்டுட்டு பறப்பதற்கு அலைய வேண்டாம் என்ற பழமொழியை அவருக்கு சில தலைவர்கள் சுட்டி காட்டி இருக்காங்களாம்... எமோஷனல் பாலிடிக்ஸ் மட்டுமே தமிழ்நாட்டில் எடுபடும்... அதனால வட,வடகிழக்கு  மற்றும் மத்திய மாநிலங்களில் கவனம் செலுத்தினால் போதும்... தமிழகத்துல அதிகபட்சம் 2 சீட்டுக்கு மேல் கிடைக்காதுன்னு ரிப்போர்ட் போச்சாம்... அதனால இப்போதைக்கு தமிழக வருகை இருக்காதாம்... அதனால வடமாநிலங்களில் வெற்றி பெறுவதுதான் பூ தலைவருக்கு தற்போது கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட்டாம்... இதனால தமிழக பூ தலைவர்கள் வெறுத்துப்போய் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்