SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காக்குமா புதிய காப்பீடு?

2018-09-02@ 02:09:15

சீறிப்பாயும் வாகனங்கள், பரபரப்பான சாலைகள்... இதெல்லாம் நகர மற்றும் பிரதான தேசிய நெடுஞ்சாலைகளில் அன்றாட காட்சிகளாக விரிகின்றன. பிரதான சாலைகள் மட்டுமின்றி சிறு தெருக்களில் கூட அலுவலகம் போகும் அவசரம், ரேஸ் என வாகனங்கள் புழுதிபறக்க செல்வதால் விபத்துக்களும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. காலையில் வீட்டுப்படியை விட்டு இறங்கி பரபரப்பான சாலைக்குள் நுழைந்து விட்டால் யாருக்கும் உத்தரவாதம் இல்லை. இதற்காகத்தான் வாகனங்களுக்கு காப்பீடு கட்டாயமாக அமல்படுத்தப்படுகிறது. வாகன உரிமையாளர் விபத்து தொடர்பான சட்ட பிரச்னைகளை சமாளிக்கவும், பாதிக்கப்பட்டநபர் இழப்பீடு பெறவும் மூன்றாம் நபர் வாகன காப்பீடு திட்டம் உதவுகிறது. இந்த காப்பீடு நேற்று முதல் டூ வீலர்களுக்கு 5 ஆண்டும், கார்களுக்கு 3 ஆண்டும் காப்பீடு எடுப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையால், புதிதாக வாகனம் வாங்குபவர் டூவீலர்களுக்கு 5 ஆண்டுக்கும், கார்களுக்கு 3 ஆண்டுக்கும் மொத்தமாக காப்பீடு தொகை செலுத்த வேண்டி வரும். இதனால், வாகன விலையுடன் கூடுதல் கட்டணம் தரவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது. சிலர் காப்பீட்டை புதுப்பிக்காமல் விட்டு விடுவதால் விபத்தால் அவருக்கு மட்டுமின்றி, மூன்றாம் நபருக்கும் சட்ட ரீதியாக இழப்பீடு வழங்க முடிவதில்லை. இதை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்ற அடிப்படையில் இது நடைமுறைக்கு வந்துள்ளது. புதிய நடைமுறையால் வாகனங்களுக்கு கூடுதல் விலை தரவேண்டி உள்ளது என்றாலும், ஒரு வகையில் இது பாதுகாப்பானதே. அதோடு, மொத்தமாக காப்பீடு தொகை செலுத்துவதால் நிதிச்சுமை அதிகரித்தாலும், பழைய நடைமுறையை விட கட்டணம் குறைவுதான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

காப்பீடு சாலைக் காவலனாக இருக்கும் என்றாலும், இழப்பீடை தவிர விபத்தால் இழந்த வாழ்க்கையை அது திருப்பித்தராது என்பதை வாகன ஓட்டிகள் புரிந்து கொள்ள வேண்டும். வாகன பெருக்கம் ஏற்பட்டு விபத்து அதிகரிக்க பொது போக்குவரத்து இல்லாதது மிக முக்கிய காரணம். இதனால்தான் வேறு வழியின்றி பலர் அதிக வட்டியில் தவணை முறையிலாவது டூவீலர், கார்களை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இந்த நிலை மாற அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மக்கள் உயிருக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மாசடையாமல் காப்பதற்கு அளிக்கக்கூடிய உத்தரவாதமும் கூட.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • PuyalGaja2

  புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

 • EidEMIladunNabi

  மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

 • SidhaindaVazhkaiGaja

  கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

 • NabiBdaykabulBlast

  ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

 • TurkeyThanksGvingTrump

  வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்