SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குட்கா விசாரணையை அக்குவேறா ஆணிவேறா சிபிஐ பிரிச்சு மேயற விஷயத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2018-09-02@ 01:35:11

‘‘என்னை எதுக்கு மெட்ேரா ரயில் நிலையத்துக்கு அழைச்சுட்டு வந்தீங்க...விசாகா மேட்டரு என்னாச்சு... ’’ என்றார் பீட்டர்
மாமா.
‘‘நினைச்சப்படியே நடந்து இருக்கு... அதச் சொல்ல  தான் வந்தேன்; விசாகா கமிஷன் விசாரணையில் பாலியல் புகழ் ஐஜிக்கு எதிராகவே இந்த சாட்சிகள் இருக்காம்... அப்புறம் அவரை விசாரிச்சா தேவையில்லாத பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால... வரும்... ஆனா வராதுன்னு ஒரு படத்துல நடிகர் வடிவேலுவை கலாய்ப்பாங்களே... அதே மாதிரிதான் இந்த விஷயத்திலேயும் நடக்குது... தப்பு நடந்து இருக்கு... ஆனா நாம விசாரிப்பதைவிட சிபிசிஐடிக்கு மாற்றிடலாம்னு ஒருங்கிணைந்த முடிவை அக்குழு எடுத்து இருக்கு... எல்லாம் பயம்தான் காரணம் என்று ஐபிஎஸ் வட்டாரத்திேலயே ஒரு கருத்து ஓடுது... அதனால எஸ்பி புகார் அப்படியே இருக்கப்போகுது... சிபிசிஐடி விசாரணை நடக்கபோவதும் இல்லை என்று சொல்லி சிரித்தார் விக்கியானந்தா.
‘‘ஏன் சிரிக்கிறீங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நான் சிரிக்கல... சிபிசிஐடிக்கு பரிந்துரைத்த குழுவை பார்த்து ஐஜி சிரிச்சாராம்... அந்த மர்ம புன்னகை என்ன சொல்லுதுன்னா... புகார் அவ்வளவுதான் குப்பைக்குதான் போகும்னு அர்த்தம். அப்புறம் ஆர்கேநகர்காரர் என்ன சொல்றாரு... சிறைப்பறவை உடல்நிலை சரியில்லை என்றால் கூட பெரிய அளவில் வருத்தப்படலையாம்... எல்லாம் கர்நாடகாவுல இருக்கிறவங்க கவனிச்சிப்பாங்க... இப்போதைக்கு கட்சியை உடைக்கிற வேலையை மட்டும் நாம பார்த்தா போதும்னு நினைக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதுக்கு ஆளுங்கட்சி சும்மா இருக்குமா...’’ என்றார் பீட்டர்
மாமா
‘‘அதுக்கான வழிகளில் ஒன்றை அவங்க கையில எடுத்துட்டாங்க... ஆர்கேநகர்காரருக்கு பணம் வரும் அத்தனை வழிகளையும் முக்கியமா அடைச்சுட்டாங்க... அதையும் மீறி வர்ற சிறு ஓட்டைகளை கண்டுபிடிச்சு அடைக்கிற வழியை கையில எடுத்து இருக்காங்க... அதுல ஒன்றாக மதுபான ஆலைகள், அவருடன் தொடர்பில் இருக்கும் குட்டி தொழிலதிபர்களை குறி வைச்சு இருக்காங்க.. அவர்கள் மூலம் கரன்சி ஆர்கேநகர்காரருக்கு செல்வதை தடுக்கும் முயற்சி தீவிரமாக நடந்துட்டு வருதாம்... இந்த முறை இடைத்தேர்தல் வந்தால் 20 ரூபாய் பார்முலா இல்லாமல் வேறு ஒரு பார்முலாவை கண்டுபிடிச்சு இருக்காங்க... அதனால ஆர்கேநகர்காரர் கரன்சி எப்டி கொடுக்கப்போகிறார்னு அதிமுக தலைகள் தலைமுடியை பிச்சுக்கிட்டு இருக்கு...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அது என்ன பார்முலா...’’ என்று ஏக்கத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அதை இப்பவே கேட்டால் எப்டி... அப்புறம் சொல்றேன்.. நாமக்கல் மாவட்ட மேட்டர் ஒன்று சொல்றேன் கேளு...’’ என்றார் விக்கி.
‘‘நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றியவரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாற்றுப்பணி முலம் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தனது அலுவலகத்துக்கு இடமாறுதல் செய்தாங்க... ஆனால், இதற்கு பதில் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு டிரைவர் நியமிக்கப்படவில்லை. இதனால், மாவட்ட கல்வி அலுவலர் டிரைவர் இல்லாமல் தவிக்கிறார். தற்போது, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ஆய்வு செய்யும் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்து அதிகாரமும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தனக்கு ஒரு டிரைவரை நியமிக்கும் அதிகாரம் இல்லையே என அவர் வேதனைப்படுகிறார். முதன்மைக் கல்வி அலுவலர் டிரைவரை மாற்றியதில், தன்னிச்சையாக முடிவு எடுத்ததுடன், மாவட்ட கல்வி அலுவலருக்கு மாற்றுப்பணியின் அடிப்படையில் கூட டிரைவரை நியமிக்காமல் விட்டு விட்டது கல்வித்துறை அலுலவர்கள் இடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்துள்ள மாவட்ட கல்வி அலுவலர், இதை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறார். பதவி உயர்வு பட்டியலில் அவர் இருப்பதால் விரைவில் இந்த மாவட்டத்தை விட்டு சென்றால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறார்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அப்படித்தான் நேர்மையானவர்கள் கஷ்டப்படணும்... அப்புறம் வேற என்ன இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குட்கா விஷயத்தை அக்குவேறா, ஆணிவேறா பிரிச்சு மேய ெடல்லி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்து இருக்காம்... முடிவுகள் மட்டும் தீர்ப்பின் முடிவுக்கு உட்பட்டது... அதனால என்ன வேண்டுமானால் விசாரிச்சாங்க... ஆனா விஷயத்தை லீக் செய்யாதீங்கனு மேலிட உத்தரவாம்... அதனால குட்கா விஷயத்துல சம்பந்தப்பட்ட அமைச்சரை நேரடியாக அழைத்து விசாரிக்க திட்டம் இருக்காம்... அதனால அவர்களிடம் உள்ள ஆதாரத்தின் அடிப்படையில் இந்த விசாரணையை ரகசியமாக நடத்த திட்டமிட்டு இருக்காங்களாம்... அமைச்சராக இருப்பதால் ரகசியம் காக்கிறாங்க... காக்கி அதிகாரி வெளியூருக்கு போய் இருக்காரு... அவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவெடுத்து இருக்காராம்... ஆனா அவரே சென்ட்ரலில் உள்ள கேரள அதிகாரிகளை வைத்து வழக்கை வேறு பக்கம் திசை திருப்ப முயற்சி மேற்கொண்டு வர்றாராம்... எழுத்து பூர்வமான ஆவணத்தை விட குட்கா உரிமையாளர் நேரடியாக அளித்த வாக்குமூலத்தை வீடியோ ஷூட் செய்து இருக்காங்களாம்... அதனால குட்கா வழக்கில் இருந்து யாரும் தப்ப முடியாது... ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவரும் மாற்றி பேச முடியாதாம்...’’ என்று சொல்லி சிரிச்சார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்