SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்கே நகர்காரருக்கு எதிரா மூன்றாவது பிளானை கையிலெடுக்கும் ரகசியத்தை சொல்கிறார் wiki யானந்தா

2018-09-01@ 02:05:05

‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்னு சொல்லுவாங்க.. அதனால கோயிலுக்கு வெளியே இருந்து தரிசனம் செய்யறீங்களா...’’ என்று சீரியஸாக கேட்டார் பீட்டர் மாமா.‘‘அப்டி எல்லாம் ஒன்றும் இல்ல... குட்கா விஷயத்தை சிபிஐ விசாரிக்க ஆரம்பிச்சதுல இருந்து காக்கிகள், கரைவேட்டிகள், புரோக்கர்கள்னு பலரும் அதிர்ச்சி அடைந்து இருக்காங்களாம்... குறிப்பாக காவல்துறையின் உயரதிகாரியை குறி வைத்து நடக்கும் விசாரணையில் அவரு வசமா சிக்கி இருக்காராம்... விரைவில் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கும் அளவுக்கு போதுமான ஆதாரங்கள் கிடைச்சு இருக்காம்... அதிகாரிகளை தண்டிப்பதில் எங்களுக்கு பிரச்னை இல்லைனு சொல்லிட்டாங்க... கேரளாவை சேர்ந்த அந்த அதிகாரி தத்தளித்து கொண்டு இருக்காராம்... சிபிஐ விசாரணையில முக்கியமான கேள்வியே மத்திய அரசுக்கு எவ்வளவு இழப்பு என்பதைவிட... ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கரைவேட்டிகளுக்கு எப்படி யார் மூலமா பணம் போச்சு... அந்த பணத்தை யார் மூலம் பரிவர்த்தனை ஆச்சு என்பதை மையப்படுத்திதான் இருக்காம்... மத்திய அரசுக்கு பல கோடி வருவாய் போனாலும் பரவாயில்ல... தமிழகத்துல பணம் வாங்கியவர்களின் பட்டியலை குறி வைச்சுதான் விசாரணை நடக்குதாம்... அதனால குட்கா விஷயம் தமிழக அரசியல்வாதிகளுக்கு அடுத்த வெடிகுண்டாகத்தான் பார்க்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘18 எம்எல்ஏக்களின் நிலைமை எப்டி இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ஒருத்தர் தங்களுக்குதான் சாதகமாக வரும்னு சொல்லிட்டு வர்றாங்க... இன்னொரு தரப்போ எங்களுக்குதான் சாதகமாக வரும்னு சொல்லிட்டு வர்றாங்க... அதுக்காக பெரிய பெரிய தலைகள் எல்லாம் ஆஜராகி தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி இருக்காங்க... விசாரணை முடிஞ்சுபோச்சு, தீர்ப்பு வர வேண்டியதுதான் பாக்கி... அதுக்குள்ள ஆர்கேநகர்காரர் தரப்பு தங்களுக்குதான் தீர்ப்பு சாதகமாக வரணும்னு கோயில் கோயிலா ஏறி இறங்கி வர்றாங்களாம்... ஆளும் தரப்போ, தீர்ப்பு எப்டி வந்தாலும் ஃப்ளோர் டெஸ்ட் வந்தா ஜெயிக்கிறதுக்கான வேலைகளை தொடங்கி விட்டாங்க... அதுவும் கை கொடுக்கலைன்னா மூன்றாவது ஆப்ஷன் ஒன்றை கையில் வைத்திருக்காங்க... அதுல கை வைச்சாங்கன்னா மீண்டும் கோர்ட், கேஸ்னு இழுத்துட்டு போகும்... அப்டியே ஒரு வருஷத்துக்கும் மேலே வழக்கை ஓட்டிடலாம்னு நினைக்கிறாங்க... அந்த மூன்றாவது ஆப்ஷனுக்கான வழியில் உள்ள சட்ட சிக்கல்களை தீர்க்க எப்படி தீர்க்கலாம்... அல்லது இழுத்தடிக்கலாம்னு யோசனை பண்ணிட்டு இருக்காங்களாம்; அதனால ஆர்கேநகர்காரருக்கு சாதகமாக நியாயம் கிடைத்தாலும் ஒன்றும் நடக்கப்போதில்லை என்று சொல்லி சிரிக்கின்றனர், ஆளுங்கட்சிகாரங்க....’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கோவையில என்ன ேமட்டர் ஓடுது...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கோவையில ஆளும்கட்சிக்குள்ள நடக்கிற அதிகார மோதல்ல துடியலூர்ல இருக்கிற முக்கியமான கூட்டுறவு சங்கத்துக்கு தலைவர் தேர்தல் தள்ளிப்போய்கிட்டே இருக்கு… ஏற்கனவே இருந்த தலைவரையே திரும்பவும் தலைவராக தேர்வுசெய்ய ஆளும்கட்சி விஐபி ஒருவர் சப்போர்ட் பண்றார்...  ஆனால், தொகுதி எம்எல்ஏ இதை கடுமையாக எதிர்க்கிறார். அவரு, வேறு ஒரு நபரை இந்த போஸ்டிங்ல போடச்சொல்லி அழுத்தம் கொடுக்கிறார். ஆனா, அந்த ஆளு கட்சிக்காரர் இல்லை. அதனால விஐபி மறுக்கிறார். கட்சிக்கு விசுவாசமான ஒரு ஆளைத்தான் இந்த போஸ்டிங்ல போடனும்னு விஐபி பலமாக காய் நகர்த்துவதால் எம்எல்ஏ கொஞ்சம் அடங்கித்தான் போயிருக்காரு. ஆனாலும், தனது நிலையில உறுதியா இருக்கிற மாதிரி காட்டிக்கிறார்… இதனால், ஒருமித்த முடிவு எட்டாமல் தேர்தல் தள்ளிப்போய்கிட்டே இருக்கு.. இதேமாதிரிதான் அன்னூரிலயும் ஒரு மோதல் ஓடிக்கொண்டே இருக்கு.. இங்குள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் இறந்து ஒன்றரை வருஷமாச்சு.. ஆனா, அவருக்கு பதிலா இன்னும் வேறு யாரையும் போஸ்டிங் போடல... இந்த போஸ்ைட நிரப்ப, விஐபி ஒரு ஆளை ரெக்கமென்ட் செய்ய, சபைக்கு ஹீேராவானவர் இன்னொரு நபரை ரெக்கமென்ட் செய்யறாராம்... அதனால, இந்த பதவியை நிரப்புவதிேலயும் முட்டல், மோதல் நீடிக்கிறது. யாரா இருந்தாலும் காசு இல்லைன்னா பதவிக்கு வர முடியாதுப்பா... கட்சிக்காக உழைச்சேன்…, சிறைக்கு போனேன்... என டுமீல் விட்டால் ஒன்னும் நடக்காதுப்பா… என புலம்புகிறார்கள் உள்ளூர் அதிமுக தொண்டர்கள்... என்று உண்மை தொண்டர்கள் புலம்புவதை சொன்னார் விக்கியானந்தா.

‘‘சிறைப்பறவைக்கு என்னாச்சு...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘எல்லாம் மன அழுத்தம் தான் காரணம்... ஆர்கேநகர்காரர் பண்ற அலம்பல் தாங்களையாம்... கேஸ், கட்சி நடத்தறதுன்னு இதுவரை பல ‘சி’க்களை கரைச்சுட்டாராம்... அது சிறைப்பறவைக்கு பிடிக்கலையாம்... கரன்சிகளை கரைக்காதேன்னு சொன்னா கேட்க மாட்டென்றான்... மன்னார்டிகுடிகாரரும் கட்சி தொடங்கி தொல்லை கொடுக்கிறார்.. போதா குறைக்கு உன் பெயர்ல, மாமா பெயர்ல இருக்கிற சொத்தை தன் பெயருக்கு எழுதி கேட்டு நச்சரிக்கிறாங்களாம்... இது எல்லாம் பெரிய குடைச்சலா மாறி இப்போது உடல்
நலக்கோளாறில் கொண்டு போய் விட்டு இருக்காம்... இது இப்படியே போனால் அவங்க உடல்நிலை இன்னும் மோசமாகும்னு சொன்னாங்களாம்... இதனால இன்னும் கொஞ்ச நாளைக்கு சிறைப்பறவையை யாரும் பார்க்க வர வேண்டாம்னு, அவங்களுக்கு உதவியா இருக்கிற பிரின்சஸ் சொன்னாங்களாம்... ஏறக்குறைய சாமியாராக மாறிப்போன வளர்ப்பு மகன் தான் உண்டு தன் வேலையுண்டுனு இருக்காராம்... சிறைப்பறவை பார்க்க விரும்பினால் கூட விபூதி கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பி விடுவாரோன்னு பயந்து யாரும் அந்தப் பக்கமே எட்டி பார்ப்பதில்லையாம்...’’ என்று சொல்லிவிட்டு கோயிலுக்குள் நுழைந்தார் விக்கியானந்தா


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்