SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதிக்கு ஒரு சல்யூட்

2018-09-01@ 00:28:22

அரசின் அனைத்து துறைகளும்  லஞ்சத்தில் மூழ்கிப்போய்வுள்ளது. பணத்தை மட்டுமே குறியாக கொண்டு பணிகள் நடக்கிறது. அதிலும் மாநகராட்சி படியேறினால் போதும், அங்கு உள்ளவர்களின் போக்கை பார்த்தால், மனசாட்சியும், மனித நேயமும் உணர்ச்சியற்ற வார்த்தையாக மாறிவிட்டது.  சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை எந்த வார்டில் வீடு, மருத்துவமனை, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்று எங்கு கட்டுமானப்பணிகள் நடந்தாலும் கவுன்சிலர் முதல் மாநகராட்சியின் கீழ்மட்ட ஊழியரில் இருந்து உயரதிகாரிகள் வரைக்கும் மூக்கில் வியர்த்துவிடுகிறது.  சாலையில் ஜல்லி, மணல் கொட்டி ைவக்க அனுமதி வழங்குவதற்காக இவர்கள் அனைவரையும் சம்பந்தப்பட்டவர் கவனிக்க வேண்டியுள்ளது. இதில் காவல்துறையும் கூட்டணி சேர்ந்துவிடுகிறது.

 மேலும், வசதியுள்ளவர்கள் விதிகள் மீறி கட்டிடம் கட்ட கட்டிட அங்கீகாரம் மற்றும் அனுமதியை பணம் கொடுத்து வாங்கிவிடுகின்றனர். இவர்கள் மீது அந்த தெருவில் வசிப்பவர்கள்  புகார் தெரிவித்தாலும் அதிகாரிகள் யாரும் வரவும் மாட்டார்கள், நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள். அது சரி, நீதிமன்றம் சுட்டிக்காட்டியது போன்று இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி விஜிலன்ஸ் துறையே ஊழலில் மூழ்கி இருக்கும் போது சாமான்ய மக்களுக்கு நீதி எப்படி கிடைக்கும்.  மாநகராட்சியை அணுகும் ஒருவரிடம், பைசா கூட ேதறாது என்று தெரிந்துவிட்டால், அவர்களது வேலையை அதிகாரிகள் எளிதில் முடித்து தராமல் அலைகழித்து விடுவார்கள். அதே சமயம், பணத்தை கொடுத்தால் போதும் 24 மணி நேரத்தில் அனைத்து சான்றிதழ்களும் தயாராகிவிடும். இந்த வியாதி மாநகராட்சி மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் புரையோடி போயுள்ளது.

 இதை கண்டிக்கும் விதமாக நீதிமன்றம், மாநகராட்சி விஜிலன்ஸ் துறை அதிகாரிகளை கூண்டோடு மாற்றிவிட்டு நேர்மையான அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளுடன் அடுக்கடுக்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சாமான்ய மக்கள் சல்யூட் அடித்து வரவேற்கிறார்கள். நீதித்துைற மீது அவர்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது. நீதிமன்ற உத்தரவை சிரம்மேற்கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் அமல்படுத்த வேண்டும்.  மாநகராட்சி அதிகாரிகள் தங்களின் சொத்து கணக்கையும், அவர்களது குடும்பத்தினரின் சொத்து கணக்கையும் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும்.

 மக்கள் சேவைக்காகத்தான் அரசு பணி என்பதை அனைவரும் உணர்ந்து மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம். அதே போன்று தங்கள் பணி விரைவில் முடிந்துவிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மக்கள் லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.  மக்கள் வரிப்பணத்தில்தான் நாம் சம்பளம் வாங்குகிறோம். எனவே அவர்களுக்கு விருப்பமுடன் சேவை செய்வதே நமது கடமை என்ற உணர்வு ஒவ்வொரு அரசு அதிகாரிக்கும் வரவேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கமும், விருப்பமும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 129JawaharlalNehru

  நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

 • 2018TiruvannamalaiDeepam

  திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

 • israelfire

  காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

 • singaporeasianmodi

  சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

 • crowd_thiruchendhuru11

  சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்