SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளே இருந்தபடியே குடைச்சல் கொடுப்பதில் தீவிரமாக இறங்கியிருக்கிறாராம் தர்மயுத்தக்காரர் என்கிறார் wiki யானந்தா

2018-08-31@ 01:40:33

‘‘என்ன விக்கி அடி மேல அடி விழுந்துட்டு இருப்பதை கவனிச்சீங்களா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் சிக்கல்... மற்றொரு பக்கம் குட்கா ஊழலை சிபிஐ விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க...  இப்போது இப்போது சென்னை கார்ப்பரேஷன்ல இருக்கிற ஊழல் போலீசாரை கூண்டோடு மாற்றும் நிலை அவல நிலை ஏற்பட்டு இருக்கு...  நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் பாதிக்கும் மேற்பட்ட கார்ப்பரேஷன் அதிகாரிகளும், 30க்கும் மேற்பட்ட ஆளுங்கட்சி எம்எல்ஏ, மாஜி  கவுன்சிலர்கள், வட்டங்கள் எல்லாம் மாட்டுவார்களாம்... ஏரிகள், நீர் வரத்து பகுதியில் இஷ்டத்துக்கு வீடுகள், குடிசைகள் வேகமாக முளைத்து  வருதாம்... கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ஓஎஸ்ஆர் நிலங்கள் எல்லாம் கடைகளாக மாறிட்டு வருதாம்... எல்லாம் அந்தந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள்,  அதிகாரிகள் ஆசியுடன் நடந்துட்டு இருக்காம்... கடந்த ஓராண்டில் மட்டும் மாநகராட்சி அதிகாரிகள் சென்னைக்கு வெளியே மட்டும் பல கோடி  மதிப்புள்ள சொத்துக்களையும், நகைகளையும் வாங்கி குவித்துள்ளனர். அதைவிட மூன்று மடங்கு சென்னையிலேயே கட்சி பிரமுகர்கள் குவிச்சு  இருக்காங்களாம்... அதனால இந்த விஷயத்துல அரசு எடுத்து வைக்கப்போற மூவ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால...  யாரை நியமிக்கலாம் அல்லது அப்பீலுக்கு போகலாமான்னு யோசிக்க தொடங்கி இருக்காம்... இந்த மூவ் முடிவதற்குள் நாடாளுமன்ற தேர்தல்  அறிவிப்பும் வந்துவிடுமாம்... அதனால எல்லாவற்றையும் யோசித்து செய்ய ஆளுங்கட்சி முடிவெடுத்து இருக்காம்.. அநேகமாக திங்கள் அல்லது  செவ்வாய் கிழமைக்குள் கார்ப்பரேஷன் விஷயத்துல ஒரு முடிவுக்கு வந்துடுவாங்கனு சொல்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தர்மயுத்தக்காரரின் வேகம் கூடிடுச்சு போலிருக்கே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அதிமுக உள்கட்சி கூட்டத்துல ராஜினாமா குரல் கொடுத்த பிறகு அவரின் சுற்றுப்பயணம், அதில் உள்ளூர் அமைச்சர்கள் பங்கேற்பும் அதிகரித்து  இருக்காம்... உள்ளே இருந்து கொண்டே குடைச்சல் கொடுக்கும் பாலிசியை தர்மயுத்தக்காரர் தொடங்கி இருக்காராம்... அதனால இப்போதைக்கு அவரை  சரிகட்டும் வகையில் அதிகளவு கூட்டங்கள் நடத்தவும் தன் ஆதரவாளர்களுக்கு மாங்கனி மாவட்டத்துக்காரர் கிரீன் சிக்னல் கொடுத்து இருக்காராம்...  இதற்கு இன்னொரு காரணமும் சொல்றாங்க... இந்த ஒரு வருஷத்துல நாம அமைதியா இருந்தது, பொதுமக்களிடம் கெட்ட பெயரும் நெருக்கமும்  குறைந்து விட்டது... இதே நிலை நீடித்தால் தொண்டர்கள், பிற அரசியல் கட்சிகளிடம் இருந்தும் தனிமைபடுத்தப்படுவோம்னு கட்சிக்காரங்க கொடுத்த  ஸ்டேட்மென்ட் படி பொதுக்கூட்டம் போட்டு அரசியல் கட்சிகளை வறுத்தெடுக்கணும்னு முடிவெடுத்தாங்களாம்... அதன்படிதான் நடிகரையும்  விமர்சித்தாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ அதிமுக எம்எல்ஏ அதிர்ச்சி அடைந்த விஷயத்தை சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘நெல்லை, தூத்துக்குடியை வளமாக்கும் தாமிரபரணி ஆற்றில் ஒரு வாரமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாமிரபரணி கடலில் கலக்கும்  புன்னக்காயலுக்கு முன்னதாக முக்காணியில் ரூ.25.75 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டு வந்ததாம்... ஏற்கனவே இந்த அணை கட்ட தேர்வு  செய்யப்பட்ட இடம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஒரு தரப்பினரின் எதிர்ப்பை மீறி தடுப்பணை கட்டுமானப் பணிகள் 75 சதவீதம் முடிந்து  விட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் தடுப்பணை சுவர் 3 அடி அளவிற்கு மண்ணிற்குள் புதைந்து விட்டது. இதனால் பொதுமக்கள்  மட்டுமல்ல, தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதனுக்கும் அதிர்ச்சி... அவர் அணையை பார்வையிட சென்ற போது அருகில்  உள்ள உவர் மண்ணால் அணை கட்டியது தெரியவந்துள்ளது. அதற்கு உதாரணமாக கட்டுமானப் பணியில் அனைத்தும் சிப்பியாக இருந்துள்ளது.  கோபத்தின் உச்சிக்கே சென்ற எம்எல்ஏ, உப்பு மண்ணை வைத்து அணை கட்டுவதா, இதை உடைத்துப் பார்ப்போமா, அனைத்தும் சிப்பியாக தான்  இருக்கும் என அதிகாரிகளுக்கு கடும் அர்ச்சனை செய்துள்ளார். தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் இப்படித் தான் நடக்கிறது என்பதற்கு சாம்பிள் தான்  இது. இதே கோலத்தில் தடுப்பணைகள் கட்டினால் சிறிய வெள்ளத்திற்கு கூட தாக்குப் பிடிக்காது, மக்கள் பணத்தில் எப்படியெல்லாம் கோல்மால்  நடக்குது என்கின்றனர் விவசாயிகள்...’’ என்று அதிமுக எம்எல்ஏவின் அதிர்ச்சியை பகிர்ந்து கொண்டார் விக்கியானந்தா.

‘‘சஸ்பெண்ட் ஆன போலீஸ் சொல்றது தான் நடக்குதாமே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சஸ்பெண்ட் ஆனவர் பசையானவரா இருந்தா எல்லா பணியும் இந்த ஆட்சியில நடக்கும்... வேலூர்  நாட்றம்பள்ளி போலீஸ் ஸ்டேஷன்ல,  பணியாற்றி புகார் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்தான் ஸ்டேஷனையே கட்டுப்படுத்துகிறாராம்... இப்பகுதியில் நடக்கும் குற்றச்சம்பவங்கள்,  மணல் கடத்தல், சாராயம், கட்டபஞ்சாயத்து போன்ற சட்டவிரோத செயல்களுக்கு போலீசாரே உடந்தையாக இருந்து வருகின்றனராம். இதற்காக  சட்டவிரோத ஆசாமிகளிடம் இருந்து மாமூல் மட்டுமின்றி ‘அனைத்தையும்’ பெற்றுத்தருவது சஸ்பெண்ட் ஆன அந்த போலீஸ்தானாம்.  ‘ஆனந்த’மான அந்த போலீஸ்தான் எல்லா நடவடிக்கைகளுக்கும் இடைத்தரகராக செயல்படுகிறாராம். முக்கியமாக புகார் அளிக்கும் பொதுமக்களிடம்  பேசி வழக்குப்பதிவு செய்ய அல்லது பதிவு செய்யாமல் இருக்கவும், மணல் கடத்தல் ஆசாமிகளுக்கு இடைதரகராகவும் செயல்படும் ஆனந்தமானவர்  அதற்காக இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளாராம்... இந்த விஷயம் எல்லாம் எஸ்பிக்கு தெரியாம  நடப்பதாக ஊர் மக்கள் பேசிக்கிறாங்க... அவருக்கு தெரியுமா, தெரியாதா என்பதை அவருடைய ஆக்‌ஷன் தான் பதிலாக அமையும் என்று சமூக நல  ஆர்வலர்கள் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-07-2019

  22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்