SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

எது நடந்ததோ...

2018-08-31@ 00:13:39

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை முடிந்து 2வது ஆண்டு பூர்த்தி அடைய உள்ள நிலையில், ஒரு வழியாக ரிசர்வ் வங்கி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை எண்ணி முடித்துள்ளது. இன்னமும் சில சில்லரை எண்ணிக்கை மிச்சமிருக்கிறது. ஆனால், பெருமளவில் முடிந்துவிட்ட எண்ணிக்கையின் முடிவில், வங்கிக்கு வந்த பணம் ₹15.41 லட்சம் கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 99.3 சதவீதம் உள்ளே வந்துவிட்டது. அப்படி என்றால், மிச்சம்? வெறும் 0.7 சதவீதம் மட்டுமே. 10,720 கோடி மட்டுமே வங்கிக்கு
வரவில்லை.பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட நாட்களை சிறு, குறு, நடுத்தர நிறுவனத்தினரும், அப்பாவி பொதுமக்களும் மறந்திருக்க மாட்டார்கள். வங்கிகளிலும், ரிசர்வ் வங்கி வாசலிலும் கால்கடுக்க காத்திருந்து மாற்றிச் சென்றனர். ஆனால், அரசு குறிவைத்த கோடீஸ்வரர்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் வங்கி அதிகாரிகளின் உதவியுடன் எளிதாக தங்கள் பணத்தை மாற்றிக் கொண்டார்கள். ரூபாய் நோட்டு மதிப்பிழப்பினால் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். லட்சக்கணக்கான ஏழைத் தொழிலாளிகள் வேலை இழந்தனர். சிறிய நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. ஆனால், ‘‘கஷ்டம் எல்லாம் சில காலத்துக்குத்தான், விரைவில் நல்ல நாள் வரும்’’ என்று முழங்கினார்கள். அப்படி இல்லாவிட்டால் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று பிரதமரே கூறினார்.

பணம் மதிப்பிழப்பினால் கருப்பு பணத்தை சேர்த்து வைத்திருப்பவர்களால், அதை மாற்றவே முடியாது என்று மேடைகளில் முழங்கினார் பிரதமர் மோடி. சுமார் 3 லட்சம் கோடி வரை வங்கிக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் அவரும், நிதியமைச்சரான அருண் ஜெட்லியும் முரசு கொட்டினர். எல்லாம் வெள்ளைக் காக்காய் பற, பற என்பது ரிசர்வ் வங்கியின் எண்ணிக்கை அறிக்கை, வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. மேடையில் பேசியதுபோன்று தண்டனையை ஏற்கத்தயாரா என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார். ஏற்றுக் கொள்வாரா மோடி?இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் புது நோட்டு அச்சடிக்க மட்டும், ₹12,877 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வங்கி ஊழியர்களுக்கு கூடுதல் பணிக்காலத்துக்காக செலவழிக்கப்பட்ட தொகை, பழைய ரூபாய் நோட்டுகள் தொடர்பாக மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் நடத்திய சோதனைக்காக செலவழிக்கப்பட்ட தொகை ஆகியவை எல்லாம் கணக்கில் சேர்க்கப்படவில்லை. கிட்டத்தட்ட எல்லா தொகையும் வங்கிக்கு வந்துவிட்ட நிலையில், எதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கே தெரியவில்லை என்பது உச்சக்கட்ட ஜனநாயக காமெடி.எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று நம்புவோம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2018

  24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-09-2018

  23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-09-2018

  22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்