SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

களக்காட்டில் நீலகிரி வரையாடு: கேமராவில் படம் பதிவானது

2018-08-30@ 20:31:46

களக்காடு: களக்காடு புலிகள் காப்பக வனப்பகுதியில் நீலகிரி வரையாடுகள் வசிப்பது கேமராவில் பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் 894 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு புலி, சிறுத்தை, யானை உள்பட பல விலங்குகள் வசிக்கின்றது. இந்த நிலையில் வனப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து அறியவும் சமூக விரோதிகள் ஊடுருவல் உள்ளதாக என்பதை கண்காணிக்கவும் களக்காடு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் அதிநவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதில் பதிவான படங்களை வனத்துறையினர் ஆய்வு செய்தபோது அரியவகை நீலகிரி வரையாடுகள் கேமராவில் பதிவாகியிருந்தது. இதன் மூலம் களக்காடு வனப்பகுதியில் நீலகிரி வரையாடுகள் வசிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான நீலகிரி வரையாறுகள் தமிழ்நாடு, கேரளா வனப்பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உள்ளன. பெண் வரையாட்டை விட ஆண் வரையாடு இரு மடங்கு அதிக எடை கொண்டவை.மற்ற ஆடுகளுக்கு 4 காம்புகள் இருக்கும். ஆனால் வரையாடுகளுக்கு இரு காம்புகள் இருக்கும். ஆண் வரையாடுகளுக்கு 44.5 செ.மீ நீளமான கொம்புகளும், பெண் வரையாடுகளுக்கு 35.6 செ.மீ நீளமான கொம்புகளும் உள்ளன. இவைகளின் இனப்பெருக்க காலம் ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான தென் மேற்கு பருவமழை காலமாகும். கருத்தரித்த பெண் வரையாடு 178 முதல் 190 நாட்களில் குட்டி ஈனும். இவைகள் கூட்டம், கூட்டமாகவே வாழும். சிறுத்தை, செந்நாய், புலி ஆகியவை வரையாடுகளை விரும்பி உண்ணும். மொத்தம் 17 இடங்களில் 2000 முதல் 2,500 எண்ணிக்கையிலான வரையாடுகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

கேரளாவில் இரவிக்குளம் தேசிய பூங்கா, அகத்திய மலைகள், மூணாறு, தமிழ்நாட்டில் ஆனைமலை, தேனி மேகமலை, முக்கூர்த்தி மலைகள், நீலகிரி மலைகள், வால்பாறை, ஆழியார், வில்லிபுத்தூர் பகுதிகளிலும் வரையாடுகள் உள்ளன என்று களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்