SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் RGB அம்சம் மற்றும் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாட்டுடன் கூடிய ப்ரீஸ்ம் வயர்லெஸ் ஸ்பீக்கர்

2018-08-30@ 12:33:18

IT சாதனங்கள், ஒலி அமைப்புகள், மொபைல்/ லைஃப்ஸ்டைல் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்புச் சாதனங்கள் ஆகியவற்றின் முன்னணி பிராண்டான ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட். லிமிடெட் அதன் வயர்லெஸ் ஸ்பீக்கர் ‘ப்ரீஸ்ம்’ ஐ அறிமுகப்படுத்துகிறது.

● RGB LED விளக்கு

● கெப்பாசிட்டிவ் டச்

● கைப்பிடி வசதி

● ஒளியின் இரட்டை முறைகள்


முழுவதும் மென்மையான பூச்சுடன் ஒரு விளக்கு போன்ற கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டது, இரட்டை முறைகளில் வேலை செய்யும் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாடுகள் மற்றும் மென்மையான RGB LED விளக்குடன் அதன் மிருதுவான மற்றும் தெளிவான வடிவமைப்பு மூலம் அதிகபட்ச எளிமையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பளபளக்கும் பொலிவு, மென்மையான RGB விளக்குகள் மற்றும் துல்லியமாக ஒலியைக் கேட்கும் வசதி, சுலபமாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இருக்கும் விளக்கை போன்ற ஸ்பீக்கர்.
 
மங்களகரமான காலை இசையைக் கேட்பது அல்லது மென்மையான RGB ஒளிக்கலவையை ரசிப்பதன் மூலம் உங்கள் நாளைத் தொடங்குங்கள். மாலையில் நிம்மதியான மனநிலை தேவைப்படும் போதும். ப்ரீஸ்ம் வயர்லெஸ் ஸ்பீக்கர், உங்கள் அறையில் புதிய அனுபவத்தைத் தர அல்லது உங்கள் மனநிலையை மாற்றுவதற்கான வேலையைச் செய்ய மென்மையான LED விளக்குகளுடன் வருகிறது. விளக்குகள் இரட்டை முறையிலோ, கைமுறை பயன்பாட்டிலோ அல்லது சிறந்த அமைப்பு அனுபவத்திற்காகத் தானியங்கி முறையிலோ வேலை செய்கிறது.

LED நிறத்தை ஒரு தொடுதலில் மாற்றலாம். ப்ரீஸ்ம் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாடுகள் இருப்பதால், விளக்குக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த மென்மையான தொடுதலே போதுமானது அல்லது ஒலியளவை மெதுவான நகர்வுடன் அதிகரிக்கவும்/ குறைக்கவும் செய்யலாம்.

ப்ரீஸ்ம் இல் பல இணைப்பு விருப்பங்கள் அடங்கியுள்ளன. அதாவது வயர்லெஸ் விருப்பம் மூலம், உங்கள் பாடல்களை மொபைலில் கேட்கலாம். மைக்ரோ SD கார்டு மூலமாகப் பாடல்களை இயக்கலாம் அல்லது பிளேலிஸ்ட்டைக் கேட்க AUX கேபிளைச் செருகலாம். கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும், உள் அமைக்கப்பட்ட FM ரேடியோ வசதியும் கொண்டது.

இந்தத் தயாரிப்பின் வெளியீட்டின்போது ஜெப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி பேசுகையில் “எங்களது போர்டபிள் ஸ்பீக்கர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன எனினும் ப்ரீஸ்ம் இல் RGB விளக்குகள் மற்றும் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாடு போன்ற புதிய அம்சங்களைக் கொண்ட ஒரு ஸ்பீக்கரை அறிமுகப்படுத்துகிறோம், இது உங்கள் ஒட்டுமொத்த கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு கருவியாகும், உறுதியான ஒரு கைப்பிடியுடன் வருகிறது, எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய வகையிலும் எந்த நேரத்திலும் தலைகீழாக மாறும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார். இந்த தயாரிப்பு இந்தியா முழுவதும் அனைத்து முன்னணி சில்லறை கடைகளிலும் கிடைக்கும். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 2018_indiragandibirthdy

  இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

 • america_winterstorm2018

  வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

 • 2018wildfire_trumph

  கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

 • asiapacific_meet

  ஆசிய பசிபிக் வர்த்தக பேச்சு வார்த்தையை முன்னிட்டு சர்வதேச தலைவர்கள் சந்திப்பு

 • maldevmodi

  மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழா : பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்