SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரியல் எஸ்டேட் ஆபிசாக மாறிப்போன பிஆர்ஓ அலுவலகத்தை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2018-08-30@ 00:43:35

‘‘திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதை தொடர்ந்து, அவருக்கு வாழ்த்துகள் தேசிய அளவிலும் மாநிலங்களில் இருந்தும் தொடர்ந்து வந்துட்டு இருக்கு பாத்தியா...’’ என்று விக்கியானந்தாவை பார்த்து சொன்னார்  பீட்டர் மாமா. ‘‘ஆமா.. திமுக தலைவராக பொறுப்பேற்றதும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களிடம் 3 மணி நேரம் நின்றபடியே மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக  தலைவர் கருணாநிதி அறைக்கு சென்றார். கருணாநிதி இருக்கையில் அமர்ந்தார். அவரை திமுக தலைமை நிலைய நிர்வாகிகள் வரவேற்றனர்.கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையும் மரணம் அடைந்ததையும் அறிந்து துக்கம் தாங்க முடியாமல் தமிழகம் முழுவதும் 248 தொண்டர்கள் அதிர்ச்சியிலும் தற்கொலை செய்தும் உயிரிழந்தனர். அவர்கள்  குடும்பங்களுக்கு தலா ₹ 2 லட்சம் வழங்கப்படும் என்று திமுக ெபாதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைவர் இருக்கையில் அமர்ந்ததும் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்தாக 248 தொண்டர்கள் குடும்பங்களுக்கு தலா ₹ 2 லட்சம் வழங்க உத்தரவிட்டார். இதற்கான செக்குகளில் கையெழுத்திட்டார்’’ என்றார்  விக்கியானந்தா ‘‘பிஆர்ஓ அலுவலகம் ரியல் எஸ்டேட் ஆபிசா மாறியிருக்கிறதா தகவல் வருதே.. அது என்ன விஷயம்’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிஆர்ஓ அலுவலகத்தின் டிரைவர் ‘பத்து எழுத்துக்காரர்’. இவர் வாகனத்தை இயக்க, தனக்குக் கீழ் உள்ள வேன் டிரைவர், அலுவலக காப்பாளர் ஆகியோரையே  டிரைவராக அனுப்பி வைக்கிறார். ஒருபோதும் ஸ்டியரிங்கை தொடுவதில்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் கோலோச்சி இருக்கிற இவர், பிஆர்ஓக்களை மட்டுமல்ல, மொத்த அலுவலக ஊழியர்களையும் தன்  கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக புகார் உள்ளது.  சென்னை மக்கள் தொடர்பு துறையின் அதிகாரி, சேலத்தில் இருக்கிற மாநகராட்சி அதிகாரி என்று தனக்குப்பின்னே பெரும் அதிகாரிகள் ஆதரவு இருப்பதாக கூறிவரும் இவர், உள்ளூர் எம்பியை தன் உறவினர் என்றும் கூறியபடி  அரசாட்சி செய்கிறாராம். பிஆர்ஓ அறையில் அமர்ந்தபடி ஏசி போட்டு, உட்கார்ந்து கொண்டு, இந்த டிரைவர் முழுநேரத்தொழிலாக ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறாராம்.  இடம் வாங்குபவர்களும், விற்பவர்களும் பிஆர்ஓ அலுவகம் வந்துவிடுகின்றனர். இவர்களுக்கு அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் தங்களின் இருக்கையை கொடுத்துவிட்டு, வெளியில் சென்றுவிட அங்கு ஒரே ரியல்  எஸ்டேட் வியாபார டீலிங்தான் நடக்கிறதாம். புதிய கலெக்டராவது இவர் மீது விசாரித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அலுவலகத்தின் சக பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒரே ஒரு போஸ்ட்டுக்கு நாற்பது லட்சம் ரேட் ௳ாங்குறாங்கன்னு சொல்லிட்டிருந்தியே..அது என்ன மேட்டர்..’’ என ஆர்வம் பொங்க கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகரில், கோவை தெற்கு, கோவை வடக்கு, கோவை சென்ட்ரல், கோவை மேற்கு என நான்கு வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகம் உள்ளது. இதில், கோவை சென்ட்ரல் ஆர்டிஓ.வாக பணிபுரிந்து வந்தவர்  போக்குவரத்து துறை துணை கமிஷனராக பதவி உயர்வு பெற்று, சென்றுவிட்டார். அதனால், இப்பணியிடம் காலியாக இருக்கிறது. இப்பணியிடத்துக்கு யாராவது ஆர்.டி.ஓ வர வேண்டுமென்றால், வழக்கமாக மேலிடத்துக்கு ரூ.20  லட்சம் கப்பம் கட்டுவது வழக்கம். ஆனால் தற்போது இந்த ரேட் உயர்ந்துவிட்டது. துறை விஐபி.யாக இருந்தால் 30 லட்சம், உள்ளூர்காரராக இருந்தால் ரூ.40 லட்சம் என ரேட் உயர்த்தப்பட்டு, மேலிடத்தில் இருந்து வாய்மொழி  உத்தரவு வந்துள்ளது. ''இவ்வளவு பணம் நம்மால் கொடுக்க முடியாதுப்பா...’ என அனைவரும் ஒதுங்குவதால், இப்பணியிடம் காலியாக கிடக்கிறது. அதுவும், அரசியல் வி.ஐபி.க்கள் கோவைக்கு வரும்போது, ''அதை வாங்கி வா...  இதை வாங்கி வா...'' என கோவை சென்ட்ரல் ஆர்டிஓ.வுக்குத்தான் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம். அதனால், இப்பணியிடத்துக்கு வர யாரும் முன்வரவில்லை. ஆனாலும், ரேட் இன்னமும் குறையவில்லை. இதுமட்டுமின்றி,  கோவை மாநகரில் உள்ள 4 ஆர்டிஓ ஆபீசுலயும் தலா ஒரு சூப்பிரண்டு, 18 ஜூனியர் அசிஸ்டென்ட், 10 அசிஸ்டென்ட் போஸ்டிங் காலியாக இருக்கிறது’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேறென்ன விவகாரம் இருக்கு..’’ ‘‘அதே ‘கோவையில் அரசு மருத்துவமனை டீன் அசோகனுக்கும், அங்கு பணிபுரியும் டாக்டர்களுக்கும் இடையே கடும் பனிப்போர் நீடிக்கிறது. இவரை டாக்டர்கள், சர்வாதிகாரி... என விமர்சிப்பதும், பதிலுக்கு இவர் டாக்டர்களை,  திட்டி தீர்த்து, மெமோ கொடுப்பதும் தொடர்கிறது. இவரது அனைத்து செயல்களுக்கும் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மெமோ மற்றும் 17பி தண்டனை வழங்குவதில் டீன் அசோகன், மன்னனாக திகழ்கிறார்.  இருதினங்களுக்கு முன்புகூட ஒரு மருத்துவருக்கு தேவையில்லாத காரணங்களை கூறி, 17பி கொடுத்துடுள்ளார். இந்த புகைச்சல் இன்னும் ஓயவில்ைல. இதை, டாக்டர்கள் மீடியாவுக்கு கொண்டுசென்றுவிட்டனர். இதனால்,  கடுப்பாகிப்போன டீன், அவசரஅவசரமாக டாக்டர்கள் மீட்டிங் போட்டு, ''நமக்குள்ளே ஒரு கருப்பு ஆடு இருக்கு... அது, எந்த ஆடுன்னு கண்டுபிடிக்கனும்... அதுவரை தூங்க மாட்டேன்... மத்திய அரசுக்கு இணையாக சம்பளம் கேட்டு  போராடுனா மட்டும் போதாது... வேலை செய்யனும்...'' என கடுப்பில் பேசியுள்ளார். டீனுக்கு எதிராக டாக்டர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்துவிட்டதால் விரைவில் பதவி காலியாகிவிடும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது’’  என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

 • 18-01-2019

  18-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • rivermoon

  வடகிழக்கு அமெரிக்காவில் நிலவின் மேற்பரப்பை போல உறைந்து காணப்படும் ஆற்றின் நடுப்பகுதி!

 • ParadeREhearsalRepublicDay

  டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையின் கண்கவர் புகைப்படங்கள்

 • alanganalloor_kaalaigal11

  வீரத்துடன் சீறி பாயும் காளைகள்.. மெர்சல் காட்டும் காளையர்கள்... உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்