SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்மார்ட் திருட்டு?

2018-08-30@ 00:09:36

“ஒரு மனிதன் வாழ எதிர்பார்க்கும் வசதிகளை விட எல்லா வசதிகளையும் ஏற்படுத்துவதுதான் ஸ்மார்ட் சிட்டியின் நோக்கம்”. ஸ்மார்ட் சிட்டி திட்டம் பற்றி பிரதமர் மோடி இப்படித்தான் குறிப்பிட்டார். அவரது எண்ணப்படி நாடு முழுவதும் 98 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, தூத்துக்குடி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய 12 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாகத் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டிகளில் குடிநீர், மின்சார விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார வசதி, போக்குவரத்து வசதி, வீட்டு வசதி, குறிப்பாக ஏழைகளுக்கு வீட்டுவசதி, அனைத்து வளாகங்களிலும் தகவல் தொடர்பு வசதிகள், குழாயைத் திறந்ததும் தண்ணீர், கழிவு நீர் சுத்திகரிப்பு, சிக்கன நீர் மேலாண்மை, குறைந்த எரிபொருள் பயன்பாடு, தரமான சாலை வசதிகள், போக்கு
வரத்து ஏற்பாடுகள், குப்பைகள் இல்லாத வீதிகள் போன்ற உள்கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மொத்தத்தில் இந்தத் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதே ஸ்மார் சிட்டி. வெளிநாட்டு ஸ்மார்ட் சிட்டிகளில் மின்சார கிரிட்களிலிருந்து சாக்கடை செல்லும் பைப்புகள் வரை அனைத்தும் ஒரு நெட்வொர்க்கில் இணைக்கப் பட்டிருக்கின்றன. கேமராக்கள், வயர்லெஸ் கருவிகள், தகவல் மையங்கள் என ஆங்காங்கே அமைக்கப் பட்டிருக்கின்றன. இந்தியாவில் இவையெல்லாம் எந்தளவுக்கு சாத்தியம் என்பது ஸ்மார்ட் சிட்டி திட்டம் அமைக்கப்படும்போது தெரிந்துவிடும்.

2015-16 நிதியாண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் திருச்சிக்கு இதுவரை ரூ.20 கோடி, திருநெல்வேலிக்கு ரூ.20 கோடி, திண்டுக்கல்லுக்கு ரூ.2 கோடி, தஞ்சாவூருக்கு ரூ.111 கோடி, திருப்பூருக்கு ரூ.20 கோடி, சேலத்திற்கு ரூ.111 கோடி, வேலூருக்கு ரூ.111 கோடி, கோவைக்கு ரூ.196 கோடி, மதுரைக்கு ரூ.111 கோடி, ஈரோட்டிற்கு ரூ.2 கோடி, தூத்துக்குடிக்கு ரூ.20 கோடி, சென்னைக்கு ரூ.196 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் மின்னணு நிர்வாகம், மொபைல் ஆப் வடிவமைப்புக்கு ரூ.100 கோடி டென்டர் விடப்பட்டு லார்சன் அன்ட் டியூப்ரோ என்கிற எல் அன்ட் டி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து கோவையை சேர்ந்த ஏஸ்டெக் மெஷினரி காம்பொனன்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெண்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. டெண்டர் நடைமுறை வெளிப்படையாக பின்பற்றப்படவில்லை என்பது குற்றச்சாட்டு. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் முயற்சியில் அமைக்கப்பட உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் பணிகளும் தரமானதாக அமையும். இல்லையேல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஸ்மார்ட் திருட்டிற்குத்தான் வழிவகுக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்