SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மதுரை டூ சிங்கப்பூர்: தினசரி விமான சேவையை தொடங்கியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

2018-08-29@ 12:16:52

மதுரை - சிங்கப்பூர் இருமார்க்கத்திலும் தினசரி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்கியுள்ளது. மதுரை முதல் சிங்கப்பூர் வரை முதல் நேரடி விமான சேவை செப்டம்பர் 15, 2017ல் தொடங்கியது. இச்சேவை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது மதுரை - சிங்கப்பூர் விமான சேவை வாரம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (DAILY NON STOP flight) மூலம் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் கூடுதல் பயணத்தை தொடங்குகிறது.

மதுரை - சிங்கப்பூர் கூடுதல் விமானம் IX 484 செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மதுரையிலிருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூருக்கு இரவு 7.05 மணிக்கு சென்றடையும்.

சிங்கப்பூர் - மதுரை விமானம் IX 483 செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சிங்கப்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 10 மணிக்கு வந்து சேரும்.

மதுரை - சிங்கப்பூர் விமானம் IX 684 திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 6.15 மணிக்கு சிங்கப்பூர் சென்றடையும்.

சிங்கப்பூர் - மதுரை விமானம் IX 683 சிங்கப்பூரில் இருந்து செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மதியம் 12.30 மணிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்