SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போதை ஏற்றிய காலேஜ் கேர்ள்ஸ் பொது இடத்தில் தள்ளாட்டம

2013-03-10@ 11:59:36

ஆலங்குளம்: போதை பழக்கத்துக்கு அடிமையான 4 இளம்பெண்கள் பஸ் ஸ்டாண்டில் ஆபாசமாக பேசி அநாகரிகமாக சைகை காட்டியது ஆலங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் கல்லூரி மாணவிகள் என்ற விவரம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் ஜீன்ஸ், டிஷர்ட், சுடிதார் சகிதமாக சில நாட்களாக 4 இளம்பெண்கள் வட்டமடித்துள்ளனர். கண்சிமிட்டுவது, உதட்டை சுழிப்பது, கிறங்கடிப்பது போல் பார்ப்பது என அவர்களது செயல்பாடுகள் இளைஞர்களை சுண்டி இழுத்தது. கடந்த 7ம் தேதி மாலை தள்ளாடியபடி வந்த பெண்கள் ஆபாசமாக பேசியதும் ஆண்களை நோக்கி அநாகரிகமாக சைகை காட்டியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் கிடைத்து போலீஸ் வருவதற்குள் 3 பெண்கள் ஓடிவிட, ஒரு பெண் மட்டும் போலீசிடம் சிக்கினார். அவரிடம் போலீஸ்காரர் விசாரித்தார்.

4 பெண்களில் ஒருவர் நர்சிங் படித்தவர். மற்றவர்கள் கல்லூரி படிப்பு முடித்தவர்கள். 4 பேருக்கும் போதை ஊசி, போதை மருந்து பழக்கம் உள்ளது. செல்போன்களில் ஆபாச படம் பதிவு செய்து பார்ப்பதை வழக்கமாக கொண்டவர்கள். நர்சிங் மாணவி மூலம்தான் மற்ற பெண்களும் இந்த பழக்கத்துக்கு ஆளானதுபோல தெரிகிறது. பெற்றோருக்கு தெரியாமல் போதை ஏற்றிக்கொள்ளும் இவர்கள் பொது இடங்களில் அத்துமீறி நடக்கிறார்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை போலீஸ்காரர் எச்சரித்து அனுப்பியுள்ளார்.ஆலங்குளம் பகுதியில் கஞ்சா, உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், போதையில் இளம்பெண்கள் அத்துமீறி நடந்துகொண்டது பொதுமக்களையும் போலீசாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர்களுக்கு போதை பொருட்களை சப்ளை செய்யும் கும்பலை கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கூறியுள்ளனர்.

how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mbbs_bds_11

  எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதல் நாளில் 8,349 விண்ணப்பங்கள் விநியோகம்

 • bulletRAILCHINAsdrder

  மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் புதிய அதிவேக புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!

 • WaterONMARSMMANS

  செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை நாசாவின் ரோவர் கண்டுபிடித்துள்ளது

 • SPANfporestTREEDGT

  ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட காட்டு தீயினால் 150 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பலானது

 • flood_kuttralam

  குற்றாலத்தில் தொடர் சாரலால் வெள்ளப்பெருக்கு : மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்