SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்டு மந்தை உரிமையாளர் கொலை : 3 பேர் சிறையில் அடைப்ப

2013-03-10@ 11:20:54

மணமேல்குடி: ஆட்டு மந்தை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(50). இவர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த சிங்கவனம் கண்மாய் பகுதியில் பட்டி அமைத்து 150 ஆடுகளை மேய்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ராஜேந்திரன் கொலைசெய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து மணமேல்குடி போலீசார் வழக்கு பதிந்து கொலையாளியை தேடி வந்தனர். 2 தனிப்படையும் அமைக்கப்பட்டது. ராஜேந்திரனின் மனைவி நீலாவதியிடம் (35) தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து ராஜேந்திரன் கொலை செய்யப்பட்ட நாளன்று நீலாவதியின் செல்போனில் இருந்து யார், யாருக்கு தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது என போலீசார் விசாரித்தனர். இதில் அவர், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த மலைராஜ்(37) என்பவரிடம் அடிக்கடி பேசியதும், அவருடன்  கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும் தெரியவந்தது.

 இவர்களின் தொடர்பை ராஜேந்திரன் கண்டித்ததுடன், தொடர்பை துண்டித்து விடுமாறு கூறியுள்ளார். இதுபற்றி நீலாவதி, தனது கள்ளக்காதலன் மலைராஜுவிடம் கூறினார். மலைராஜ், தன் கூட்டாளியான  ரமேஷ் என்பவரின் உதவியுடன் கடந்த 6ம் தேதி இரவு சிங்கவனம் கிராமத்திற்கு வந்து ஆட்டுக் கிடையில் வைத்து ராஜேந்திரனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து நீலாவதி, மலைராஜ், ரமேஷ் ஆகிய மூவரையும் மணமேல்குடி போலீசார் கைது செய்து புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

plavix tonydyson.co.uk plavix plm


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்