SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மைக் தலைவருடன் ஏற்பட்ட மோதலில் மதுவானவருக்கு அரசு பதவி கிடைக்கப்போற விஷயத்தை சொல்கிறார் wiki யானந்தா

2018-08-29@ 00:34:49

‘‘சுவீட் எடு கொண்டாடுங்க... சர்க்கரை இருக்கேனு கவலைப்படாதீங்க... இது சுகர்ஃப்ரீ...’’ என்று சிரித்தபடி சொன்னார் பீட்டர் மாமா.
‘‘சுவீட் சாப்பிடுவதே மகிழ்ச்சியான விஷயம்தான்... அதைவிடு, இதை கேளு... ஆனா ஆளுங்கட்சிக்காரங்களுக்கு ஆட்சியை நடத்துவதை விட பஞ்சாயத்து பண்றதே பெரிய வேலையா போச்சுனு மக்களும், கட்சி தொண்டர்களும் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சரி சொல்லுங்க கேட்கிறேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மதுவானவருக்கும் மைக் தலைவருக்கும் உள்ள பிரச்னையே ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்காம்... ஒருத்தர் வெளியே போனால் கட்சி ஆட்டம் கண்டுவிடுமாம்... இன்னொருத்தர் வெளியே போனால் ஆட்சி ஆட்டம் கண்டுவிடுமாம்... இதனால ஆட்சியிலும் கட்சியிலும் இருக்கும் ரெண்டு பேரும் தத்தளித்து வர்றாங்களாம்... மோதலை முடிவுக்கு கொண்டு வர மைக் தலைவரிடம் பேச்சுவாத்தை நடத்தினாங்களாம்... சென்னையில பெரும்பாலான எம்எல்ஏக்கள் என்னிடம் இருக்காங்க... நான் கட்சியை வளர்க்க பாடுபட்டு ெகாண்டு இருக்கேன்... என்னை நம்பி வந்தவங்களுக்கு நான் ஏதாவது செய்தால்தான் அவங்க கட்சிக்கு உழைப்பாங்க... அடுத்த தேர்தல்ல நானும் கட்சியும் சென்னையில ஜெயிக்க இது முக்கியம்... அவருக்கு வயசு ஆயிடுச்சுனு சொல்லி சமாதானத்துக்கு வர மாட்டேன்... ஆனா அவரை பற்றி பேசமாட்டேன்... என் தொகுதியில உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல் வந்தா நீங்க தலையிட்டு சரி செய்து கொடுங்க... நீங்க அமைதி காப்பதால்தான் இரண்டு தரப்புக்கும் சண்டை வருதுன்னு மைக் தலைவர் வறுத்தெடுத்துட்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அப்ப மதுவானவர் நிலைமை...’’

‘‘துறை ரீதியிலான அரசு கூட்டங்களுக்கு மத்தியிலேயும் மதுவானவரையும் அழைத்து பேசினாராம்... நீங்க பெரியவங்க கொஞ்சம் விட்டு ெகாடுத்து போங்கனு சொன்னதுக்கு... நான் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி என்னை இப்போ வந்த மைக் மதிக்கிறதே இல்ல.. அவரு என்னை மதிக்கணும்னு நானும் நினைக்கல... ஆனா என்னை நம்பி வந்தவங்களுக்கு நான் என்ன பதில் சொல்றது... முடிவை உங்களுக்கே விடறேன்னு சொன்னாராம்... எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்... இனி யார் மூலமும் உங்களுக்கு பிரச்னையோ, அவமரியாதையோ வராது... அப்புறம் வாரிய தலைவர் பதவி ஒன்றை தர்றோம்... அப்போ உங்க பகுதியில மதிப்பும் மரியாதையும் தானா வரும்னு சொன்னாராம்... அதை ஏற்று அமைதியாக தலையாட்டிவிட்டு கிளம்பினாராம் மதுவானவர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோயில்ல அர்ச்சனை செய்வாங்க... ஆனா அந்த துறையை சேர்ந்த அதிகாரிங்க அடிச்சுக்கிறாங்களே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘உண்மைதான்... உலகமே தலைகீழாக மாறி வருது... இந்து சமய அறநிலையத்துறையில் எதுவும் மாறாதா என்ன... நான் சொல்றதை கேளும்... மாங்கனி மாவட்ட மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில் நிர்வாகத்தில், பெண் அதிகாரி ஒருவர் 3 ஆண்டுகள் பணி முடிந்த பின்பும் ஒட்டிக் கொண்டே இருக்கிறாராம். உயர் பொறுப்பில் உள்ள அதிகாரியின் ஆசியோடு, அவர் பணியில் தொடர்வது, நிர்வாகத்தின் தலைமை அதிகாரிக்கு கடுப்பை ஏற்படுத்தி இருக்காம்... உடனடியாக பெண் அதிகாரியை மாற்ற, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அந்த குறிப்பிட்ட உயர் அதிகாரியின் மூலமே, ஆணையருக்கு இந்த கடிதம் செல்ல வேண்டுமாம். இதை உயரதிகாரி அப்படியே 3 மாதமாக கிடப்பில் போட்டு விட்டாராம். இது தொடர்பாக 10 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில், உயர் அதிகாரியும், கோயில் தலைமை அதிகாரியும் சட்டையை பிடித்து அடித்து புரண்டதை பார்த்து, அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் பதறிப்போனாங்க... இந்த விவகாரம், தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாகி அறநிலையத்துறையே அறம் இல்லாத துறையாக மாறிவிட்டதாக மாங்கனி மாவட்ட மக்கள் புலம்பி வர்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த சம்பவத்தில் கைதானவர் கோர்ட் வாசலில் சவுண்ட் விட்டதை கேட்டீங்களா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ம், இந்த வழக்கில் பல்வேறு மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் ஒரு பக்கமாகவே காக்கிகள் இழுத்து செல்வது தெரிவதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புலம்பி வரும் நிலையில்... கோர்ட் வளாகத்தில் ஆறுபடைவீடுகளை கொண்டவரின் பெயரில் உள்ள ஒருவர், உண்மையை நான் சொன்னால் என்னாகும்னு வெடிகுண்டு ஒன்றை போட்டாராம்... அப்புறம் விசாரித்ததில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை சிலர் அதில் சம்பந்தப்பட்டு இருக்கலாம்... இந்த நபரை பேசவிட்டால் நம்ம மானம் போய்டும்னு நினைச்ச போலீஸ், உடனே அவரை குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீஸ் வேனில் ஏற்றி கொண்டு போய்ட்டாங்களாம்...’’ என்று சொல்லி முடித்தார் விக்கியானந்தா.                       


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்