SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மைக் தலைவரின் துறையில் நடந்துள்ள ஊழல் குறித்த பட்டியல் வெளியிட தயாராகும் அமைப்புகள் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2018-08-28@ 02:47:56

‘‘ஊருக்கே நியாயம் சொல்றீங்க... ஆனா ஸ்கூட்டர் பின்னாடி உட்கார்ந்தா ஹெல்மெட் போட மாட்டேன்னு அடம் பிடிப்பது சரியா...உயிரை பாதுகாக்க தானே அப்படி சொல்றாங்க’’ என்று கலாய்த்தார் பீட்டர் மாமா. ‘‘விடுப்பா, எனக்கு ஹெல்மெட் வெயிட் தலைவலியை ஏற்படுத்தும்... கண்டிப்பா போடணும்ன்னு கோர்ட்டே சொல்லிருச்சே; நாளைலேர்ந்து போட்டுக்கறேன், சரியா? இப்ப உனக்கு ஒரு தலைவலி மேட்டர் சொல்றேன் கேளு... பூ கட்சியின் டெல்லி தலைமை தென் மாநிலங்களை குறி வைத்து காய்களை நகர்த்தி வருது... அதனாலதான் பூ கட்சியின் தலைமை தொடர்ந்து தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, கேரளா, ஆந்திரான்னு சுத்தி வருது... ரேடியோவுல கூட திடீர்னு தமிழ் பற்றியும், தஞ்சை கோயில் கட்டிட கலை பற்றியும் பேசினது கூட திட்டமிட்ட ஒன்றுதானாம்...  

ஏற்கனவே கர்நாடகாவுல அவங்களுக்கு ஸ்டிராங்க் ஓல்டிங் இருக்கு... அதனால அவங்க கவனம் தமிழகம், ஆந்திரம், கேரளாதானாம்... அதனாலதான் இதுல தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் எதிர்மறையான தலைமைகள் இருந்தாலும் நிதி உதவியை அள்ளி கொடுத்து நாங்கதான் செய்தோம்னு மார்தட்டுறாங்க... தமிழகத்துல பல ஆயிரம் கோடியில திட்டங்கள் கொண்டு வந்தாலும் சிறப்பான தலைமை இல்லாததால அதற்கு தமிழகத்தில் பயங்கர எதிர்ப்பாகவே முடியுதாம்... அதை பூ கட்சியின் மாநில தலைமைக்கும் சரியாக கையாள தெரியலை என்ற கோபம் இருக்காம்... ஆளுங்கட்சி மீதும் கோபம் இருக்காம்... அந்த கோபம் அரசியல் ரீதியாக ‘யூ டர்ன்’ அடித்தால் ஐந்தாண்டு ஆட்சிக்கே ஆபத்து வரும்னு பேசிக்கிறாங்க... அதனால பூ கட்சியா இருந்தாலும் அதன் பிடி இரும்பு பிடியாக இருக்குதேன்னு.. தமிழக ஆளுங்கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மைக் தலைவரின் ஜப்பான் பயணம் எப்டி இருந்துச்சாம்...’’ என்று சிரித்தப்படி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மைக் தலைவரின் பயணத்தை விடுங்க... வெளிநாட்டுல இருந்ததால ஆளுங்கட்சியின் செயற்குழுவுல தர்மயுத்தம் செய்தவர் என்ன பேசினாருனு தெரியல... ஆனா அது உள்ளரங்க கூட்டம்னு சொல்லி குழப்பிட்டாரு... போதா குறைக்கு பாலியல் விவகாரத்துல சிக்கினவங்களை காப்பாற்றும் எண்ணம் இல்லைனு சும்மா மேலோட்டமாக சொன்னாலும்... உள்ளூக்குள் உதறலுடன் இருக்கும் தலைவர்களில் மைக்காரரும் அடங்குவாரு... அவர் துறையிலும் டீசல், மானியம் வழங்குவதுன்னு பல முறைகேடுகள் நடந்து இருக்காம்... அது தொடர்பா சில மீனவ அமைப்புகள் விவரங்களை சேகரித்து வருதாம்... அது வெளிவரும்போது என்ன பதில் சொல்லப்போறாருன்னு பார்க்கலாம்...’’ என்றார் விக்கியானந்தா.

அப்புறம் இன்னொரு முக்கியமான மேட்டரு... ஆட்சி பற்றியும் தர்மயுத்தகாரர் பற்றியும், சேலத்துக்காரர் பற்றியும் ஒரு ரகசிய சர்வே எடுத்தாங்களாம்... அதுல பெரும்பாலானவர்களுக்கு ஆளுங்கட்சியில பளீச்னு பேசுறவரு மைக் தலைவர்தான் சுளீர், சுளீர்னு பேசுறாரு... மற்றப்படி தமிழ்நாட்டுல இருக்கிறவங்க எல்லாம் பதவியில ஒட்டிக் கொண்டு இருக்காங்க... இந்த அரசு காவிரி நீரை சேமிக்காம அப்படியே கடல்ல கலக்க விட்டுட்டாங்க... அணை உடைஞ்சு போச்சுனு விவசாயத்துக்கே சம்பந்தமில்லாத மக்கள் பேசிக்கிறாங்க... காவிரி ஆற்று நீரை தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு திருப்பிவிட்டு இருக்கலாம்... ஏரிகளை தூர்வரலை... கரைகளை வலுப்படுத்தலனு பேசிக்கிறாங்க... இந்த விஷயம் எல்லாம் நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் எதிரொலிக்கும்... அதனால ஆளுங்கட்சி ஒன்று இருப்பதை மக்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயத்துல அரசு இருக்கு... வலுவான தலைவர்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கு...

இந்த ரெண்டுல ஒன்று மிஸ் ஆனாலும் கட்சியை முதல்ல இருந்து துவங்க வேண்டியதுதான்... கரன்சியால கட்சியை வளர்க்க முற்பட்டால் கட்சியும், கரன்சியும் தான் கரைந்துபோகும்... ஆட்சிக்கு வரவே முடியாதுன்னு, ரிப்போர்ட் தந்து இருக்காங்களாம்... அதனால அடுத்த சில மாதங்கள்ல நிறைய மீட்டிங் நடக்கும்... அதுல சேலத்துக்காரர் அல்லது தர்ம யுத்தம் செய்தவரு பங்கேற்று தங்களை நிலை நிறுத்தி கொள்ளும் வகையில செயல்படுவாங்கனு அந்த ரிப்போர்ட்டை படித்த சிலர் கோட்டையில ரகசியமாக பேசிக் கொண்டாங்க... அதன் தொடக்கம் தான் தற்போது நடந்த சில மாவட்டங்களின் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் ’’என்றார் விக்கியானந்தா.
‘‘திருப்போரூர்ல என்ன விசேஷம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துல பத்து பர்சன்ட் அதிகாரி ஒருத்தர் இருக்காரு...  இவரு ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளுக்கு பில் சாங்ஷன் செய்ய மொத்த தொகையில் 10 சதவீதம் கொடுத்தால்தான் கையெழுத்தே போடுவாராம். இதனால் இவர பார்த்தாலே தண்டலம், நெம்மேலி, பையனூர், ஆலத்தூர், வெண்பேடு, சிறுதாவூர், பட்டிபுலம், இள்ளலூர், மடையத்தூர், செம்பாக்கம் ஊராட்சிகளில் ஒப்பந்த பணிகளை எடுத்து செய்யும் ஒப்பந்ததாரர்கள் ஓட்டம் பிடிக்கிறாங்களாம்...  அவர்களை அழைத்து நான் கொடுக்கும் பில்லையும் சேர்த்து தயார் செய்து கொண்டு வாங்க கையெழுத்து போடுகிறேன்னு சொல்றாராம்.. எதிர்த்தவர்களை ஆட்சியருக்கு நெருக்கமான பெண் அதிகாரியின் பெயரை சொல்லி மிரட்டுராறாம்... ...’’ என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டரை விட்டு இறங்கினார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்