SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரம்பமே பாரபட்சம்

2018-08-28@ 00:45:09

காவல்துறையில் நடக்கும் செயல்கள் அந்தத் துறைக்கு நற்பெயருக்குப் பதில், களங்கத்தையே ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை, அந்தத் துறையில் ஐஜி அந்தஸ்தில் உள்ள
அதிகாரியால் ஏற்பட்டுள்ளது. காவல்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான குற்றங்களைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டியின் தலைவராக  கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, ஐஜி மீதான பாலியல் புகாரை விசாரிக்கத் துவங்கியுள்ளது. இதற்கான கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.புகாருக்கு உள்ளான நபரும், புகார் கூறியவரும் ஐபிஎஸ் அந்தஸ்து அதிகாரிகள் என்பதால் அவர்களிடம் விசாரணை நடத்தவேண்டிய சட்ட
முறைகள் குறித்தும், இருவருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.புகார் கூறிய பெண் எஸ்பி, திடீரென அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளானவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், பெண் எஸ்பி மீது மட்டும் திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, விசாகா குழுவின் விசாரணை சரியான திசைவழியில் நடக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக ஏற்கனவே உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

பாலியல் வல்லுறவுக்கு ஆளான குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, உளவியல் மற்றும் உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை, பெண்கள் பாதுகாப்பை பலப்படுத்த, பொது போக்குவரத்தில் கண்காணிப்பு காமிராக்கள், காவல்நிலையங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்துவது என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசு சார்பில் 3 ஆண்டுகளாக நிர்பயா நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.இந்த நிதியின் மூலம் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்க முடியும். எனவே, இந்த நிதியைப் பெற தமிழக அரசு முன்முனைப்பு காட்ட வேண்டும். அத்துடன் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுபவர்களுக்கு தோள் கொடுப்பதுடன், அக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் சமம் என  கடுமையாக தண்டிக்க தமிழக அரசு முன் வரவேண்டும்.தற்போது  பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள ஐஜி மீது உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்நடவடிக்கை இதுபோன்ற குற்றங்கள், காவல்துறை மட்டுமின்றி எந்த துறையிலும் நடக்காமல் தடுப்பதற்கான அரணாக இருக்கும். பாரபட்சம் காட்டாமல், தமிழக அரசு செய்யுமா?


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்