SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்கேநகர்காரர் வலையில் மூணு எம்எல்ஏக்கள் சிக்கியிருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

2018-08-27@ 00:37:21

‘‘எடப்பாடி மட்டுமில்ல ஜோலார்பேட்டைக்கும் நேரம் சரியில்ைல போலிருக்கே...’’ என்று கிண்டலடித்தார் பீட்டர் மாமா.‘‘ ஊர்பேர் நல்லாதானே இருக்கு...’’ என்று ஜமாய்த்தார் விக்கியானந்தா.‘‘நான் ஊர் பெயர் சொல்லல... நீங்க சரியான விஷயத்தை சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சும்மா ஜாலிக்காக சொன்னேன்... இப்போ விஷயத்துக்கு வர்றேன்.... ஜெயலலிதா இருந்தபோது சாட்டையை சுழற்ற வேண்டும் என்றார்... அதுக்கே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கொந்தளித்தனர். அதன் பிறகு ஒரு அமைச்சர் விளம்பரமாக கொடுத்து வாங்கி கட்டிக் கொண்டார்... இன்னொரு அமைச்சர் தினமும் ‘ஒரு புது தகவலாக’ வெளியிட்டு திண்டுக்கலை சிரிக்க வைத்து கொண்டு இருக்கிறார்... இப்போது ஜோலார்பேட்டை முறைபோல... குடிக்கிறவன் காசுலதான் சம்பளமே வாங்கறீங்கனு திருவாய் மலர்ந்து இருக்காரு... இந்த செய்தி ஜாக்ேடா-ஜியோ அமைப்பினரிடம் வைரலாக பரவி வருது... இன்னைக்கு விட்டா இதேபோல நாளைக்கு வேறு ஒன்னு பேசுவாங்க... இப்படியே போனா நாளைக்கு நம்ம வீட்டுல இருக்கிறவங்களே, சரக்கு வித்து வர்ற பணத்துலதான் சம்பளம் வாங்கறீங்கனு பேச மாட்டாங்கனு என்ன நிச்சயம்னு கேள்வி கேட்பாங்க... இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைச்சே ஆகணும்னு ஆசிரியர்கள் பேசிக்கிறாங்க... விரைவில் இன்னொரு மெகா போராட்டம் நடத்தி ஆட்சியாளர்களை திணற வைக்கணும் என்ற திட்டத்தில் இருக்காங்களாம்... அப்புறம் மக்கள் பிரதிநிதிகள் மாசத்துக்கு 1 லட்சம் சம்பளம் வாங்கறாங்களே அதுவும் சரக்கு விற்ற பணமானு திருப்பி கேட்கிறாங்க... ஆனா பதில் சொல்லதான் யாரும் இல்ல...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘திரைமறைவு வேலைகளில் ஆர்கேநகர்காரர் இறங்கிட்டார் போலிருக்கே...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘டெண்டர், வாரிய தலைவர்கள் கிடைக்காத எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர் பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்களில் யார் ரொம்ப ஸ்டிராங்காக இருக்காங்க என்ற லிஸ்ட்டை ரெடி செய்துட்டு வர்றாராம்... குறிப்பாக முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் ரகசிய தொடர்பில் இருந்து வர்றாராம்... அவங்களை தற்போதைக்கு அதிமுகவிலேயே இருங்க... நாடாளுமன்றம் அல்லது உள்ளாட்சி தேர்தலின் போது உங்களுடன் பெரிய தொண்டர் படையை தூக்கிட்டு வந்துடுங்க... அதற்கான வெகுமானம் நிச்சயம் உண்டுன்னு சொன்னதாக தகவல்... இப்போதைக்கு அதிருப்தி எம்எல்ஏக்களை வெளியே கொண்டு வந்து நாடாளுமன்ற தேர்லுக்குள் ஆட்சியை ஒரு வழி பண்ணிடனும்னு சிறைப்பறவை அளித்துள்ள சீக்ரெட் அசைன்மென்டில் இதுவும் ஒன்றாம்... இப்ேபாதைக்கு மூன்று எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை முடிந்து கரன்சி செட்டிலாகும் சூழல் இருக்காம்... அதை மோப்பம் பிடிச்ச ஆளுங்கட்சியினர் யாரும் வேறு கட்சிக்கு போகமல் தடுக்க திட்டமிட்டு செயல்பட்டு வர்றாங்களாம்... இந்த தரப்பும் பதவி, கரன்சி காட்டுறோம்னு சொன்னாங்களாம்...  எதிர்தரப்பு எங்களிடம் வந்தால் நீங்க இறங்கி வருவீங்க... இல்லை என்றால் எங்களை தண்ணி தெளிச்சு விட்டுடுவீங்க... என்று தாளிச்சு எடுத்துட்டாங்களாம். இதைக்கேட்டு,  நாங்க இடைத்தரகர்தானே, எங்களை இப்படி கோபித்து கொள்ளலாமான்னு சமாதானத்துக்கு வந்தவங்க சங்கடத்தோடு சொன்னாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ வீடு கட்ட பணம் வாங்கும் அதிகாரியை தெரியுமா...’’ என்று கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா.‘‘பணம் கொடுக்காமல் வேலை நடந்தால்தான் அது செய்தி... இல்லையென்றால் அது சர்வசாதாரணம்... இருந்தாலும் நீ கேட்டதுக்காக சொல்றேன்... வாலாஜாபேட்டை ஒன்றியத்துல பணி மேற்பார்வையாளராக ஒரு பெண் இருக்கிறாராம்...  இவர் பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்புகள் பெற்ற பயனாளிகளிடம்  ஒவ்வொரு பகுதி பணி முடிந்ததும் அதற்கான செக்கை வழங்க குறிப்பிட்ட சதவீதம்  பணம் கேட்கிறாராம்... அதன் பிறகுதான் செக்கே பயனாளிகளுக்கு  வழங்கப்படுமாம். ஏழைகளின் வயிற்றில் அடிப்பது சரியா என்று சக அதிகாரிகள் கேட்கும்போது, அவர்களுக்கும் சேர்த்துதான் நான் வாங்குகிறேன்... இதுல பாவம், புண்ணியத்தை பார்க்க கூடாது என்று தத்துவம் பேசுறாராம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இதுவும் பணம் சம்பாதிக்கும் விஷயம்தான்... அடிமட்டத்துல இருக்கிறவங்களுக்கு கட்சியே கிடையாதா...’’ என்று வெள்ளந்தியாக கேட்டார் பீட்டர் மாமா.‘‘ கட்சி எல்லாம் விசிட்டிங் கார்ட்டை பாக்கெட்டில் வைக்கிற மாதிரி... பணம்னு வந்துட்டால் அங்கே கட்சி காணாமல் போய்விடும்... அதுதான் வந்தவாசியில நடந்தது... வந்தவாசி நிலவள வங்கி ஆண்டுக்கு பல கோடி கடன் கொடுக்கும் பின்புலம் மிகுந்த வங்கியாக இருக்கு... வந்தவாசி வட்டத்தில் அதிக கடன் கொடுத்து வசூலிக்கும்  கூட்டுறவு வங்கி இது... இதுல 11 இயக்குனர்களில் அதிமுகவிற்கு 7, திமுக 3, பாமக 1 என்று  பிரித்துக்கொண்டாங்க... இதில் தலைவராக அதிமுகவை சேர்ந்த பச்சையானவரை தேர்வு செய்துட்டாங்க...  துணை தலைவராக பாமகவை சேர்ந்த சர்க்கரையானவரையும் போட்டியின்றி தேர்ந்தெடுத்துட்டாங்க... பிற கூட்டுறவு சங்கங்களில்  அதிமுகவே தலைவர், துணை தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ள நிலையில் இந்த நிலவள  வங்கியில் ஒரு உறுப்பினர் உள்ள பாமகவை சேர்ந்தவருக்கு எப்டி துணை தலைவர் பதவி கொடுக்கலாம்னு   அதிமுகவிலும், திமுகவிலும் புகைச்சல் கிளப்பியுள்ளது... அது கட்சியும் கிடையாது... கரன்சியும் கிடையாது... அது வேறு கணக்கு என்று தலைவர் பதவியில ஜெயிச்சவர் சொல்லி சிரிச்சாராம்..’’ என்றார்  விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்