SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டதின் பின்னணி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2018-08-26@ 00:42:10

‘‘லைட் ஹவுசை பார்க்கும்ேபாது என்ன தோணுது, விக்கியானந்தா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கப்பல் கரை சேர லைட்ஹவுஸ் வழிகாட்டியா இருக்கு... அதுபோல ஒரு நல்ல ஆட்சிக்கு அதிகாரிகளும் வழிகாட்டியாக இருப்பது முக்கியம்... ஆனா சமீபத்துல நடந்த டிரான்ஸ்பர்கள் கோட்டை வட்டாரத்தில் சுனாமி போல ஒரு அலையை உருவாக்கி உருளவிட்டு இருக்குனு பேசிக்கிறாங்க... ஒரே நாளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டதுக்கு பின்னாடி ஆளுங்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களின் நிர்ப்பந்தம் இருந்தது என்பதை கோட்டை வட்டாரத்தில் அடிச்சு சொல்றாங்க... ஜெயலலிதா இல்லை என்கிற எண்ணத்திலும் இப்போது இருக்கிற முதல்வர் கேட்க மாட்டார் என்ற நினைப்பிலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் சொன்ன எந்த டிரான்ஸ்பரையும் போஸ்டிங்கையும் போடாம நிராகரிச்சாங்களாம் அதிகாரிங்க... சில எம்எல்ஏக்களின் எதிரிலேயே பரிந்துரை கடிதங்களை குப்பையில கிழிச்சும் போட்டாங்களாம்... இந்த நிலை நீடித்தால் பாதிக்கும் மேலே அப்படியே டிடிவி அணிக்கு தாவிடும் நிலை இருந்ததாம்... அதை தடுக்கவே இந்த அதிரடி டிரான்ஸ்பர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கல்வித்துறையில ரெண்டு பேரையும் மாத்திட்டாங்களே, ஏன்..’’

‘‘இரண்டு அதிகாரியில ஒருத்தர் கிண்டிக்காரருக்கு ஸ்லீப்பர் செல்போல செயல்பட்டு வந்தாராம்... பல்கலைக்கழகத்து விஷயங்கள் அனைத்தும் இவர் மூலம்தான் கிண்டிக்காரருக்கு போனதாக தகவல் கிடைச்சு இருக்காம்... இந்த அதிகாரியால கல்வித்துறையில ஏகப்பட்ட குழப்பமாம்... தூங்கி எழுந்தா ஒரு உத்தரவாம் ஏறக்குறைய துக்ளக் தர்பார் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு... இன்னொரு அதிகாரியை பற்றி நாம சொல்லித்தான் தெரிய வேண்டியது இல்ல... இப்ப ரெண்டு பேரையும் மாத்தினதால நிறுத்தப்பட்ட கவுன்சலிங், போஸ்டிங் மீண்டும் வர வாய்ப்பு இருக்கு... அப்புறம் வணிக வரித்துறை, உணவு மற்றும் பாதுகாப்பு துறை, இந்து சமய அறநிலையத்துறை, பண்டகசாலை துறை உள்பட பல துறைகளில் பிரச்னைகள், போஸ்டிங் போடுவதில் அமைச்சருடன் மோதல் போன்ற காரணங்களால் இவர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருக்காங்களாம்... இப்போது இந்த டிரான்ஸ்பர், அப்பாயின்மென்ட் வாங்கித் தர்றேன்னு அப்பாவிகளிடம் கரன்சிகளை வாங்கியவர்களின் முகத்தில் புன்னகை பூத்திருக்கு...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குறிப்பாக அதிக வருவாய் குவிக்கும் துறைகளின் உயரதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்காங்களாம்... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ஆமாம்... ஆண்டுக்கு பல கோடிகளை குவிக்கும் துறைகளை தங்கள் கையில் வைத்து கொண்டு தானும் அனுபவிக்காமல்  மற்றவர்களையும் அனுபவிக்கவிடாமல் இருந்த அதிகாரிகளை தான் டம்மி துறைக்கு தூக்கி அடிச்சு இருக்காங்களாம்... அட்ஜஸ் செய்யும் அதிகாரிகளை மீண்டும் முக்கியமான பதவிக்கு கொண்டு வந்து இருக்காங்களாம்... இதை நான் சொல்லல ஆளுங்கட்சியில் உள்ள முக்கிய தலைகள் இந்த டிரான்ஸ்பர் ஆர்டர் வந்த பிறகு வியாழன் இரவே விருந்து வைத்து ஜமாய்ச்சுட்டாங்களாம்... ஆனா அதிகாரிகளோ, இவங்க சொன்னதை செய்துட்டு நாங்க உள்ளே போகவா... அதற்கு டம்மி போஸ்டிங்கே ஓகேன்னு சந்தோஷமாக போய்ட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அவ்வுளவுதானா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கட்சி நிர்வாகிகளுக்காக போடப்பட்ட டிரான்ஸ்பர்ல ஐஏஎஸ் முடிஞ்சு போச்சு... அடுத்ததாக இன்னொரு பட்டியல் எடுத்துட்டு வர்றாங்க... காவல் துறையில அடமன்ட், மற்ற கட்சிகளின் அனுதாபிகள், நேர்மை என்ற பெயரில் கட்சிக்காரங்களை மதிக்காதவங்க லிஸ்ட் ரெடியாகிட்டு வருதாம்... அந்த லிஸ்ட் வந்ததும் காவல் துைறயிலும் டிரான்ஸ்பர் பந்து பறக்கும்னு கரைவேட்டிகள் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அல்வா மாவட்ட மேட்டர் என்ன இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.

 ‘‘எத்தனுக்கு எத்தன் அல்வா மாவட்ட கல்வித்துறையில் இருக்காங்கனு கேள்விப்பட்டு இருக்கேன்... அது உண்மையாகிடுச்சு... சமீபத்தில் பள்ளிக் கல்வித் துறையின் உத்தரவை கிடப்பில் போட்டுவிட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒரே பணியிடத்தில் இருப்பவர்களை கூட கண்டு கொள்ளவில்லையாம். மேலும் கலந்தாய்விற்கே விண்ணப்பிக்காதவர்கள், பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கெல்லாம் பணி மாறுதல் வழங்கியுள்ளனர். முதன்மைக் கல்வி அலுவலரே இல்லாமல், மாறுதல் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஒரு அன்பான அலுவலரே இந்த கலந்தாய்வை நடத்தி முடித்து விட்டாராம். இதற்கு பெயர் தான் வெளிப்படையான கலந்தாய்வான்னு அல்வா மாவட்ட கல்வித்துறையில இருக்கிறவங்க கொந்தளித்துப் போய் இருக்காங்க...’’ என்றார்

விக்கியானந்தா.

‘‘கோவையில இன்சார்ஜா இருந்தா நிறைய சம்பாதிக்கலாம் போல...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை கலெக்டர் அலுவலகத்துல கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பதவி ெராம்ப முக்கியமான பதவி... மாவட்ட கலெக்டர் அலுவலக நிர்வாக பணி, அரசு விருந்தினர் மாளிகை பராமரிப்பு பணி, மாவட்டம் முழுவதும் விளம்பர பலகை வைப்பது என பல முக்கியமான பணிகள் அனைத்தும் இவரது கட்டுப்பாட்டில்தான் நடக்கும். இப்பணியிடம் தற்போது காலியாக இருக்காம்...  ஓவரா காசு குவிகிறதால இப்பதவியை புடிக்க, அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இப்போதைக்கு இப்பணியிடத்தை தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கவனித்து வருகிறார். அவர், இன்சார்ஜ் என்ற பெயரில் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. எந்த பையில் கையெழுத்துக்கு வந்தாலும், காசு பார்க்காம கையெழுத்து போட மாட்டார். மாவட்டத்தில் வருவாய் அலுவலர், விஏஓ என பல பேருக்கு டிரான்ஸ்பர் போடுவதும் இவர்தான். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், தேர்தல் பணிக்கு முழுமையாக அனுப்பி விடுவார்கள். அதற்குள் ஒரு ரவுண்ட் அடித்து குவித்திடனும்... என சபதம் எடுத்து, இன்சார்ஜ் பணியில் மூழ்கி கிடப்பதாக கோவை வருவாய் துறையிலேேய பலர் காதுல புகை வருவதை பார்க்க முடியுது...’’ என்றார் விக்கியானந்தா.மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • russia_anumin111

  ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

 • largestpotato

  உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

 • marsgobi_desert1

  செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்