SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2018 ரெனோ க்விட் அறிமுகம்

2018-08-26@ 00:38:53

2018 ரெனோ க்விட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஏனைய பகுதிகளில் சிறிய மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் ‘’சி’’ வடிவிலான  ஹெட்லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய க்ரோம் க்ரில் அமைப்பு இடம்பிடித்துள்ளது. முழுமையான வீல் கவர், பாடி கலர் பம்பர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இப்புதிய ரெனோ க்விட் கார், 8 வேரியண்ட்டுகளில்  விற்பனைக்கு கிடைக்கிறது. போட்டியாளர்களைவிட கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டதாக இந்த வேரியண்ட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 12 வோல்ட் சார்ஜர், பின் இருக்கையில் ஆர்ம்  ரெஸ்ட் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இப்புதிய ரெனோ க்விட் காரில் 7 அங்குல திரையுடன்கூடிய தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், லேன் சேஞ்ச் இண்டிகேட்டர், லோடு லிமிட்டர்  நுட்பத்துடன்கூடிய சீட்பெல்ட் ப்ரீ டென்ஷனர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. விலை உயர்ந்த மாடலில் பவர் ஸ்டீயரிங், இன்ஜின் இம்மொபைலைசர், 4 ஸ்பீடு மேனுவல் ஏசி, பவர் விண்டோஸ், டிராபிக் அசிஸ்ட்,  ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். 2018 மாடலாக வந்திருக்கும் புதிய ரெனோ க்விட் கார் ₹2.66 லட்சம்  (டெல்லி எக்ஸ்ஷோரூம்) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்