SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மாருதி சியாஸ் கார் முன்பதிவு துவங்கியது

2018-08-26@ 00:38:52

ஆட்டோமொபைல் மார்க்கெட்டில், போட்டியாளர்களை சமாளிக்கும் விதத்தில் மாருதி சியாஸ் கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. 2018 ஆகஸ்ட் 20ம்தேதி இப்புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம்  செய்யப்பட உள்ளது. இப்புதிய காரில் புதிய க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய அலாய் வீல், புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவையும்  கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. டேஷ்போர்டு வடிவமைப்பில் மாற்றங்கள் இருக்காது என்பது உறுதியாகி இருக்கிறது. அதேநேரத்தில், க்ரூஸ் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்ட பல  சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. இரண்டு ஏர்பேக்குகள், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும்.

இப்புதிய காரில், 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட இருக்கிறது. 5 ஸ்பீடு அல்லது 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வர இருக்கிறது.  பெட்ரோல் மாடலில் சுஸுகி நிறுவனத்தின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட இருக்கிறது. டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும்  வழங்கவல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் அதிக மைலேஜ் தரும் டீசல் மாடலாக வர இருக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்