SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாடா விங்கர் புது மாடல் அறிமுகம்

2018-08-26@ 00:38:51

புதிய டாடா விங்கர் 15எஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 15 பேர் சவுகரியமாக அமர்ந்து பயணம்செய்ய முடியும். இதன்மூலம், தனது கமர்ஷியல் வெகிக்கிள் லைன் அப்-ஐ, டாடா நிறுவனம் வலுவாக்கியுள்ளது.  5,458  எம்.எம் நீளம் கொண்ட இப்புதிய டாடா விங்கர் 15எஸ், 15 அங்குல வீல்களில் இயங்கும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 எம்.எம்., லக்கேஜ் கெபாசிட்டி 600 லிட்டர்கள்.

இதன் இன்டர்னல் உயரமான 6.3 அங்குலம், கேபினில்  பயணிகளின் ஸ்மூத்தான மூவ்மெண்டை உறுதிசெய்கிறது. இதில், 2.2 லிட்டர் டிகோர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 98 பிஎச்பி பவர் மற்றும் 190 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தவல்லது. டூர் மற்றும்  டிராவல் செக்மெண்டிற்கு என புதிய டாடா விங்கர் 15 எஸ் ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதன், முதல் விற்பனை மஹாராஷ்டிரா மாநிலத்தில் துவங்கப்படுகிறது. பிறகு, படிப்படியாக நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட  உள்ளது. இதன் விலை ரூ.12.05 லட்சத்தில் (மும்பை எக்ஸ் ஷோரூம்) இருந்து துவங்குகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rivermoon

    வடகிழக்கு அமெரிக்காவில் நிலவின் மேற்பரப்பை போல உறைந்து காணப்படும் ஆற்றின் நடுப்பகுதி!

  • ParadeREhearsalRepublicDay

    டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையின் கண்கவர் புகைப்படங்கள்

  • alanganalloor_kaalaigal11

    வீரத்துடன் சீறி பாயும் காளைகள்.. மெர்சல் காட்டும் காளையர்கள்... உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா

  • NairobiHotelAttack

    மும்பை பாணியில் கென்யா ஓட்டலில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்: இதுவரை 21 பேர் உயிரிழப்பு!

  • 17-01-2019

    17-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்