SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இருதரப்புக்குமே பொறுப்பு

2018-08-26@ 00:06:09

தமிழகத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் என இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதி மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இதுதான் சமீபத்திய பரபரப்பு செய்தி. பக்கத்தில் உள்ள கர்நாடகாவில் பெங்களூரூ, மைசூரு உள்பட அனைத்து பெரிய நகரங்களிலும் இந்த சட்டம் அமலில் உள்ளது. இதனால், சாலை விபத்துகளில் உயிரிழப்பு குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தற்போது திடீரென இந்த மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்த காரணம் என்ன என்றால், இது தொடர்பான பொது நலன் வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மோட்டார் வாகனச் சட்டம் கடுமையாக அமல்படுத்த உள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. பொதுவாக, சாலை விபத்துகளில் பெரிய வாகனங்களைவிட இரு சக்கர வாகனங்கள்தான் அதிக அளவில் சிக்குகின்றன. ஏனெனில் இளைஞர்கள் அதிவேகமாக செல்வதாலும் போக்குவரத்து விதிமீறல்களாலும் விபத்துகள் நேரிடுகின்றன. இதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் விபத்துகளில் உயிரிழப்பைத் தடுக்க ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டாலும் அமல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதை தற்போது கண்டிப்பான முறையில் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தகுந்த விளம்பரங்கள் செய்யவும் அறிவுரை கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கக் கூடியதே. இதை வெற்றிகரமாக அமல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சாலை போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விதி மீறல்கள் இல்லை என்றாலே விபத்துகளும் குறைந்துவிடும். விபத்துக்கு ஹெல்மெட் இல்லாதது மட்டும் காரணமா என்றால், கண்ணுக்கு முன்னால் வந்து நிற்பது, போர்க்களத்தில்  குண்டுகளை போட்டது போன்று போதிய பராமரிப்பு இல்லாத குண்டும் குழியுமான சாலைகள்தான் நினைவுக்கு வருகின்றன. ஹெல்மெட் அணிய பொதுமக்களை நிர்ப்பந்திக்கும் அதே நேரத்தில், சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அதை உறுதி செய்வதுதான் அதன் மீதான புகாரை விலக்கச் செய்ய முடியும்.மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • newyork

  நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

 • singaporebirds

  சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

 • turkey

  துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

 • climate

  ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

 • 25-06-2019

  25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்