SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐந்து வருஷ ஆட்சியை விட கட்சிதான் பெரிசுன்னு செயற்குழுவுல அதிமுக தலைவர்கள் காய்ச்சி எடுத்ததை சொல்கிறார் wiki யானந்தா

2018-08-24@ 01:18:55

‘‘அதிமுக செயற்குழுவுல என்ன நடந்ததுனு சொல்லாம பப்பியை வாக்கிங் அழைச்சுட்டு போறீங்க...’’ என்று கிண்டலடித்தார் பீட்டர் மாமா. ‘‘எனக்கு கிடைத்த தகவல்களை சொல்றேன் கேளு, இதுவரைக்கும் ஆட்சியில் மட்டுமே நீங்க கவனம் செலுத்திட்டு வர்றீங்க... அது தப்பில்ல... ஆனால் ஆட்சி என்பது 5 வருஷம்தான்... கட்சி அப்டி இல்ல... தமிழகத்துல இப்போ நிறைய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கு... அதை கவனிக்காமல் திறப்பு விழா, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல மணிநேரம் அரசின் சாதனைகளை மட்டும் பேசினால் வேலைக்கு ஆகாது... இப்ப மாறியிருக்கிற அரசியல் டிரண்டுக்கு ஏற்ப கட்சி செயல்பாட்டில் கவனம் செலுத்தணும்... தொண்டர்களும், கிளைக்கழக நிர்வாகிகளும் சந்தோஷமாக இல்ல... போலீசும் மதிக்கிறது இல்ல... அரசு அதிகாரிகளும் அதிமுகவினரை மதிக்கிறது இல்ல... ஆட்சியை தக்க வைக்க நாம சில விஷயங்களில் அமைதியா இருந்தது போதும்...

கட்சி ஸ்டிராங்கா இருந்தா அடுத்த தேர்தல்ல மீண்டும் தீவிர களப்பணியாற்றி ஆட்சியை பிடிக்கலாம்... இப்போ போற போக்கை பார்த்தால் பல இடங்களில் நாம டெபாசிட் இழந்து தோற்கும் நிலைதான் இருக்கு.. இப்போதே பூத் கமிட்டி, கட்சியின் கீழ் நிலை நிர்வாகிகளை நாம கவனிக்காவிட்டால்... வாக்குசாவடியில் நம்ம கட்சிக்காரங்களே நமக்கு வேலை செய்ய மாட்டாங்க... அது தெரியாம அமைச்சர், மாவட்ட செயலாளர் என்ற பந்தாவில் சுற்றி திரிந்தால் நீங்கள் மட்டுமில்ல அடுத்த தேர்தல்ல கட்சியும் நாமளும் காணாமல் போயிருவோம்.. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பல்வேறு பிரச்னைகளை நீங்கள்தான் சந்திக்க வேண்டி இருக்கும். அதனால கட்சியை பலப்படுத்தி  ஆட்சியை தக்க வைக்க பாருங்கனு, சில மூத்த தலைவர்கள் காரசாரமாக பேசினாங்களாம். அதில் பங்கேற்ற பலரும் அதே மனநிலையில்தான் இருந்தாங்களாம். ஆனால் சில அமைச்சர்கள் மட்டும் பணமும், படை பலமும் இருக்கும்போது நாம ஏன் அதைப்பற்றி கவலைப்படனும்னு ரகசியமாக பேசிக்கிட்டாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அதிமுக கட்சி பணி இனி சூடு பிடிக்கும்னு சொல்லுங்க.. அப்புறம் கிண்டின்னு சொல்ல வந்தீங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அதுவா, கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் 21ம் தேதி நடந்ததாம்... இதற்கான அரசாணை கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் இதற்கான அறிவிப்பு இயக்கக வெப்சைட்டில் கடந்த 18ம் தேதி இரவுதான் வெளியிடப்பட்டதாம்... தாமதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டதால் 329 பணியிடங்களுக்கான பணியிட மாறுதல்களுக்கு வெறும் 72 பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். இதற்கிடையே காலியான இடங்களை காட்டாமல் முன்கூட்டியே ஒரு மாறுதலுக்கு ரூ. 3 லட்சம் வரை உதவி இயக்குனர் ஒருவர் பெற்றுக் கொண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாம்... தாமதமாக அறிவிப்பு வந்ததால் கலந்தாய்வுக்கு வர முடியாமல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பொங்கி எழுந்து விட்டார்களாம். பணியிட மாறுதலை முறைப்படி மீண்டும் நடத்த வேண்டும்னு முதல்வருக்கு மனு கொடுத்து இருக்காங்களாம்...’’ என்று வருத்தப்பட்டார் விக்கியானந்தா.

‘‘பணம் பத்தும் செய்யும் அது கிண்டியில மட்டுமில்ல மதுரையிலும் நடந்து இருக்குனு பேசிக்கிறாங்க... அது என்ன மேட்டர்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மதுரை நகர மாநகராட்சி பொறியாளரை முத்துநகருக்கு தூக்கியடித்து மாறுதல் செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதாம். மாறுதல் உத்தரவு சென்னையில் இருந்து இரவு விமானத்தில் மதுரைக்கு பறந்து வந்தது... நள்ளிரவில் பொறியாளர் வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும்போது கதவை தட்டி எழுப்பி காட்டினார்களாம். அதை வாங்க மறுக்கவே, உடனடியாக அவரது மெயிலில் அனுப்பிட்டாங்களாம்.. அதிர்ந்து போன பொறியாளர் நீதி தேவதையின் கதவை தட்டி இருக்கிறார். மதுரமான பெயரை கொண்ட அந்த பொறியாளர் தனக்கு ஏற்பட்ட கதியை வேண்டியவர்களிடம் சொல்லி ஆதங்கத்தை கொட்டி வருகிறாராம். இதன் பின்னணியில் புதைந்து கிடக்கும் சதவீத கமிஷன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதாக பொறியாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நான் வேறு மாதிரி கேள்விப்பட்டேனே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘பணம் பாதின்னா... மந்திரியை மதிக்காதது மீதி... அந்த மீதி விஷயம் என்ன தெரியுமா... மாற்றப்பட்ட அந்த பொறியாளர் மாநகராட்சி திட்ட பணிகளில் கமிஷன் வசூலித்து கொடுப்பதில் பொறியாளர் கில்லாடியாம். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு குடிநீர் திட்டம், பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்டை இணைத்து அதிநவீன மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்ட் உருவாக்குவது, வைகை கரை ஓர சீரமைப்பு போன்ற திட்ட பணிகளுக்கு டெண்டர் வருகிறதாம். இதற்காக அமைச்சர் ஒருவர் கொங்கு மண்டலத்தை சேர்ந்த கான்ட்ராக்டர்களை பொறியாளரிடம் அனுப்பி வைத்தாராம்... அவர்களுக்கு அந்த கான்ட்ராக்ட் எடுக்க தகுதி இல்லை என்று பொறியாளர் நிராகரித்தாராம்...

தகுதியான கான்ட்ராக்டர்கள் சொன்ன கமிஷனை கொடுக்க தயாராக இருக்கும்போது, தகுதி இல்லாதவர்களுக்கு கொடுத்தால், நான் சிக்கலில் மாட்டிக்கொள்வேன். கமிஷன்தானே குறிக்கோள், யாராக இருந்தால் என்ன... தப்பு செய்தாலும் அதை சரியாக செய்யணும்னு சொன்னாராம்... இது அந்த அமைச்சரின் காதுக்கு எட்டியதும், எனக்கே உபதேசம் செய்யறானா அந்த ஆளு... ஒரு நிமிஷம் கூட பதவியில இருக்கக் கூடாது தூக்கு அந்த போஸ்டிங்கல இருந்துன்னு உத்தரவு பறந்ததாம்... கோபத்தை தணிக்க வேறு அமைச்சர்கள் மூலம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. மாறுதல் உத்தரவு அதிரடியாக பறந்து வந்ததாம்... இதுதான் உண்மையான பிளாஷ்பேக்...’’ என்று சொல்லி முடித்தார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • newyork

  நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

 • singaporebirds

  சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

 • turkey

  துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

 • climate

  ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

 • 25-06-2019

  25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்