SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்ளை அலட்சியம்

2018-08-24@ 00:15:26

மேட்டூர் அணைக்கு கீழே கரூர் மாயனூர் தடுப்பணை, திருச்சி முக்கொம்பு தடுப்பணை, தஞ்சை கல்லணை தடுப்பணை, அணைக்கரை தடுப்பணை ஆகியவை உள்ளன. இவை நான்கும் தடுப்பணைகளே தவிர நீரை தேக்கி வைத்து திறந்துவிடும் அணைகள் இல்லை. இங்கிருந்து நீரை பிரித்து அனுப்பும் பணியே நடந்து வருகிறது. ஆண்டுதோறும் இந்த தடுப்பணைகளை வலு குறையாமல் பாதுகாத்து பராமரிக்க பல கோடி மக்கள் வரிப்பணம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் அவை முறையாக செலவிடப்பட்டதா என்றால், இதோ ஒன்பது மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதே சாட்சியாக உள்ளது. பணம் எங்கே போனது என்பது ஒரு பக்கம், இன்னொரு பக்கம், தூண்கள் சரியவும், அதனால் மதகுகள் உடையவும் மணல் கொள்ளை பெரும்பங்கு வகிக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

கண்டபடி ஆற்றங்கரையில் மணல் திருடுவது, ஆற்றையே சுரண்டுவது போன்றவை எல்லாம் இன்றும் தொடரும் அவலம் காணப்படுகிறது. இதற்கு அரசும் கண்டும் காணாமல் விட்டு துணை போவது தான் பெரும் பரிதாபம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கொம்பு தடுப்பணை கட்டப்பட்டு 180 ஆண்டுகள் ஆன நிலையில் பல முறை பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 1983ம் ஆண்டு கொள்ளிடத்தில் சுமார் 1.50 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 2005ம் ஆண்டு கொள்ளிடத்தில் சுமார் 4 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போதெல்லாம் இந்த தடுப்பணைக்கும் மதகுகளுக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

ஆனால் கடந்த பெருவெள்ளத்தைவிட குறைவாக அதாவது வினாடிக்கு 2.50 லட்சம் கன அடி தண்ணீர் சென்ற நிலையில் மதகுகள் உடைந்துள்ளது என்றால் தடுப்பணைகள் போதிய பராமரிப்பில் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக காவிரி டெல்டாவில் பொதுப்பணித்துறை செயலற்ற துறையாக மாறவிட்டது; மணல் ெகாள்ளையை தடுக்காமல் அரசு தவறி விட்டது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். பொறுப்பற்ற பொதுப்பணித்துறையின் முகத்திரை முக்கொம்பு தடுப்பணை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதிலிருந்து கிழிக்கப்பட்டுவிட்டது.

 இதனால் கல்லணை, மாயனூர், அணைக்கரை தடுப்பணைகள் வலுவுடன் உள்ளதா? என்ற அச்சம் தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. ஏனெனில் இவைகள் தடுப்பணை என்றாலும் ஓரளவு தண்ணீரை தேக்க முடியும். மாயனூரில் சுமார் 1 டி.எம்.சி. நீரையும், முக்கொம்பில் சுமார் 1 டி.எம்.சி. நீரையும், கல்லணையில் சுமார் அரை டி.எம்.சி.நீரையும், அணைக்கரையில் சுமார் 1 டி.எம்.சி.நீரையும் தேக்க இயலும். எனினும் இதுவரை வந்து கொண்டிருக்கக் கூடிய தண்ணீர் உடனடியாக வெளியேற்றப்பட்டே வருகிறது. இதனால் அணைகளின் உறுதியை இப்போதைக்கு முழுமையாக சோதித்து பார்க்க இயலாது. எனவே எதிர்காலத்தில் தடுப்பணைகளின் உறுதித்தன்மையை பிற மாநிலத்தை சேர்ந்த பொறியாளர்களை கொண்டு சோதித்து பார்க்க வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 13-11-2018

  13-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • HodeidahYemen

  ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

 • PizzaGuinnessArgentina

  அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

 • JordanFloodPetra12

  ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

 • EbolaCongoAfrica200

  தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்