SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாட்ஸ்அப்பால ஒரு மாவட்டத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன கதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2018-08-23@ 01:47:35

‘‘அதிமுக பொதுக்குழு கூட்டத்துல என்ன முடிவு எடுக்கப்போறாங்களாம்...’’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘என்ன பேசுவாங்க... அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட, நீக்கப்பட்ட மற்றும் அரசியலில் இருந்து விலகி இருக்கிறவங்களை கட்சியில கொண்டு வரப்போறாங்களாம்... அதுக்கு அப்புறம் அதிமுகவில் இருந்து கொண்டே அமமுகவுக்கு வேலை செய்யறவங்களை எந்த பதவியில் இருந்தாலும் அதிரடியாக தூக்கப்போறாங்களாம்... அப்புறம் அதிமுகவினர் யாரும் மாற்று கட்சிக்குபோகாத வகையில் அவர்களை பதவி, கரன்சி கொடுத்து கவனிக்க போறாங்க... உள்ளாட்சி தேர்தல் பற்றியும் ஒரு முடிவுக்கு வரப்ேபாறாங்க... இதுக்கு முன்னாடி இரங்கல் உள்பட பல்வேறு தீர்மானங்களை கட்சி நிறைவேற்றப்போதாக அக்கட்சியின் தொண்டர்கள் பேசிக் கொண்டனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பெண் போலீஸ் அதிகாரிகளின் வாட்ஸ் அப் குரூப் என்னாச்சு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘பெண் போலீஸ் அதிகாரிகள், ஜாலி ஓ ஜாலி என்ற பெயரில் ஒரு வாட்ஸ் அப் குரூப் வைச்சிருந்தாங்க... அந்த குரூப்பில் நடந்த ஆலோசனை பற்றி இதே பகுதியில ஒரு செய்தி வந்தது தெரியுமில்ல... இதப்பார்த்த உடனே, பதட்டமான ஒரு அதிகாரி, இந்த தகவலை சொன்ன அதிகாரி யார் என்பது எனக்கு தெரியும். செய்தி கொடுத்த பெண் அதிகாரியை, டிஜிபி அலுவலகத்தில் செல்வாக்காக இருக்கும் அதிகாரி மூலம் கண்டுபிடித்து விட்டேன். என்ன செய்கிறேன் பாருங்கள் என்று எச்சரித்து விட்டு, அந்த குரூப்பையை கலைத்து விட்டாராம்... ஜாலி குரூப் இப்போது காலி குரூப் ஆகிவிட்டதாம்... குரூப்பை கலைப்பதற்கு பதில் தவறு செய்த அதிகாரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கலாம் என்று கீழ்நிலை காவலர்கள் பேசிக் கொள்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இன்னொரு வாட்ஸ் அப் பிரச்னை தெரியுமா...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘இதையெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோன்னு நினைக்கிற அளவுக்கு சிரிப்பு மூட்டுற விஷயத்தை சொல்றேன் கேளு... நெல்லை தேமுதிகவை சேர்ந்த கலைவாணன் என்பவரை உட்கட்சி பூசல் காரணமாக தேமுதிக வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கிட்டாங்களாம்... உடனே அவர் போலீஸ் கமிஷனரிடம் சென்று, நான் தேமுதிக தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சியில் இருந்து வர்றேன்... விஜயகாந்த் தீவிர விசுவாசி நான்.. தேமுதிக வாட்ஸ் அப் குரூப் மூலம் கட்சி நிகழ்ச்சிகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்வேன்... ஆனால் என்னை வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கிட்டாங்க... இதனால கட்சி நிகழ்ச்சிகளை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு நெல்லை, தச்சநல்லூர், பாளை பகுதி செயலாளர்கள் தான் காரணம்... அவங்க மேல நடவடிக்கை எடுத்து என்னை வாட்ஸ்அப் குரூப்பில் மீண்டும் சேர்க்கணும் புகார் கொடுத்தாராம்... மிச்சர், லட்டுன்னா வாங்கி தரலாம்... லைப்ரரின்னா உறுப்பினரா சேர்த்துவிட ரெகமண்டேஷன் செய்யலாம்...

உட்கட்சியின் வாட்ஸ் ஆப் பிரச்னைக்குமா, போலீஸ் கமிஷனர் பஞ்சாயத்து செய்ய வேண்டும் என நெல்லை போலீசார் குலுங்கி, குலுங்கி சிரிக்கிறாங்க... எனினும் இந்த புகார் குறித்து போலீஸ் கமிஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் விசாரிக்க உத்தரவிட அந்த ஏரியாவின் இன்ஸ்பெக்டர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை அழைத்து அவரை வாட்ஸ் அப் குரூப்பில் மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரை செய்தனராம். போலீஸ் மட்டுமல்ல, கட்சி வட்டாரத்திலும் இந்த விவகாரம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது... அடுத்தது பேஸ்புக்ல என் கருத்துக்கு லைக் போடலைன்னு ஒருத்தன் வந்து நிற்கப்போறான்... அப்போ இதே கமிஷனர் என்ன செய்யப்போறாரோ தெரியல...’’ என்று தேமுதிகவின் அடிமட்ட தொண்டர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மக்கள் நீதி மய்ய தலைவருக்கு நோட்டீஸ் விட்டிருக்காங்களாமே... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘ என்ன ஷாட்கட்டா... சரி விஷயத்தை சொல்றேன் கேளு... தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் ஏற்காட்டில் நடந்தது. இதில் மக்கள் நீதி மய்ய தலைவர் மீது வழக்கு தொடர போறதா தீர்மானம் போட்டிருக்காங்க... அக்கட்சியின் லோகோ, தமிழ்நாடு-பாண்டிச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பின் லோகோவாம். இவர்களுக்கு குற்றாலத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஐகோர்ட் நீதிபதி ஒருவர் கொடுத்தாராம். அதை அவர்கள் பதிவு செய்து வச்சிருக்காங்க. ஆனால் தற்போது மநீமை கட்சியில் பயன்படுத்தி வருகிறார்களாம். அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்னு தீர்மானம் போட்டதுடன், அவருக்கு நோட்டீசும் விட்டிருங்காங்களாம். அதை மீறியும் பயன்படுத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கையும் விட்டிருக்காங்க... வில்லங்கம் எந்த ரூபத்தில் வருதுன்னு யாருக்குமே தெரியல... பீட்டர் என்றார் விக்கியானந்தா.

‘‘லாட்ஜ்ஜில 300 ரவுடிகளை அடைச்சு வைச்சு அவர்களின் அனைத்து தகவல்களையும் சேகரித்து அசத்தி இருக்காராம் வடமாவட்ட எஸ்பி ஒருத்தர்... அதை பற்றி சொல்லேன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வேலூர் மாவட்ட புதிய எஸ்பியாக பிரவேஷ்குமார் சமீபத்தில் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற சில நாளிலேயே காட்பாடி காந்தி நகரில் ஒரு வாலிபரை கடத்திய ரவுடி கும்பல் ₹1 கோடி கேட்டு அவரது குடும்பத்தினரை மிரட்டினாங்க... இதற்கு முன்பு, கிரைம் பிரிவு சிஐடி எஸ்பியாக பொறுப்பில் இருந்தபோது வேலூர் போலீசாரின் செயல்பாடுகளை விரல் நுனியில் வைத்து இருந்ததால் வாலிபர் கடத்திய வழக்கில் காட்பாடி காவல் அதிகாரியை ஓரங்கட்டிட்டாராம்... எஸ்பியே நேரில் சென்று விசாரணை நடத்தினாராம்... இதற்காக ரவுடிகளை லாக்அப்பிலோ, போலீசாரின் ரகசிய இடத்துக்கே கொண்டு போகல...

வாலிபரை கடத்திய ரவுடி கும்பல் தொடர்பில் இருக்கும் 300 பேரை பட்டியலிட்டு காட்பாடியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்க உத்தரவிட்டார்... மூன்று வேலையும் சோறும் போட்டார்... இருந்தாலும் எதற்குனு தெரியாத அதிர்ச்சியடைந்த ரவுடிகள் அவர்களுக்கு தெரிந்த சிபாரிசுகளை பயன்படுத்தி வெளியே வர முயற்சி செய்தாங்களாம்... இதனால டென்ஷனான எஸ்பி, ‘சிபாரிசு செய்பவர்களையும் வாலிபர் கடத்தல் பட்டியலில் சேர்த்து விசாரணை நடத்துவேன்’ என்று சொன்னதுதான் தாமதம்... சிபாரிசுக்கு வந்தவங்க பின்னங்கால் பிடறியில் படும்படி தப்பி ஓடிட்டாங்களாம்... இந்த செய்தி கேட்டு பயந்துபோன கும்பல் இரவோடு இரவாக அவர்கள் கடத்திய  வாலிபரை பலத்த பாதுகாப்புடன் கலெக்டர் அலுவலகம் முன்பு இறக்கிவிட்டுபோய்ட்டாங்க..  ஆனாலும் ரவுடிகளின் தகவல்களை திரட்டிய பின்னரே லாட்ஜ்களில் இருந்து எல்லோரையும் விட்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SouravGangulyBCCI

  பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

 • SkyCityFireAuckland

  நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

 • NorthKarnatakaRain23

  கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

 • DiwaliPrep2k19

  நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

 • DanishLightHouse

  கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்