SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செபக் தக்ராவில் வெண்கலம்

2018-08-22@ 00:58:52

ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் இந்திய ஆண்கள் செபக் தக்ரா அணி வெண்கலப் பதக்கம் வென்றது. முதல் லீக் போட்டியில் 21-16, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் ஈரான் அணியை வீழ்த்திய இந்தியா, அடுத்து  இந்தோனேசியாவுக்கு எதிராக 0-3 என்ற கணக்கில் தோற்றாலும், அரை இறுதிக்கு தகுதி பெற்று பதக்க வாய்ப்பை உறுதி செய்தது. இந்த நிலையில், அரை இறுதியில் நடப்பு சாம்பியன் தாய்லாந்து அணியுடன் நேற்று மோதிய  இந்தியா 0-2 என்ற நேர் செட்களில் போராடி தோற்றது.

எனினும், அரை இறுதியில் தோற்கும் 2 அணிகளுக்குமே வெண்கலப் பதக்கம் வழங்கப்படும் என்பதால், இந்திய செபக் தக்ரா அணி முதல் முறையாக ஆசிய போட்டியில்  வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்