SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திணிக்க முயற்சி?

2018-08-22@ 00:35:09

தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி  ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டனர். கடந்த  மே 22ம் தேதி 100-வது நாள் போராட்டம் நடந்தது. அப்போது, கலெக்டர் அலுவலகத்தை  நோக்கி கிராம மக்கள் ஊர்வலமாக  சென்றனர். இந்த போராட்டத்தின்போது வன்முறை  வெடித்தது. இதை தடுக்க முயன்ற போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.  தொடர்ந்து 2 நாள்  நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், பத்தாம் வகுப்பு மாணவி, ஒரு பெண் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த ெகாடூர செயல், நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது.  துப்பாக்கி சூடு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு  வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தூத்துக்குடி மக்கள் ரத்தம்  சிந்திய பின்னர், தமிழக அரசு, கடந்த மே 28ம்தேதி  ஸ்டெர்லைட்  ஆலை இயங்க தடை விதித்து அரசாணை வெளியிட்டது.  அன்றையதினமே ஆலைக்கு `சீல்’ வைக்கப்பட்டது. மே 29ம்தேதி அரசு சார்பில்   வழங்கப்பட்ட 342.22 ஏக்கர் நிலத்துக்கான ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. ஆலைக்கு வழங்கப்படும் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட இணைப்பும்   துண்டிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரியும் அதன்  நிர்வாகம் சார்பில் தேசிய  பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஜூலை 3ம் தேதி மனு  தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வில் நேற்று  முன்தினம் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பிலும், ஆலை நிர்வாகம் தரப்பிலும் கடும் வாதம் நடந்தது. இறுதியில், ஆலையை திறப்பது குறித்து  முடிவு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இரண்டு வாரத்தில் குழுவை  அமைக்க வேண்டும். அதன்பின்னர் 4 வாரத்தில் ஆலையை திறப்பது குறித்து அந்த குழு முடிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது  உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.  

அப்பாவி மக்கள் 13 பேர் உயிரை பறித்த பிறகும், சர்ச்சைக்குள்ளான இந்த ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது, அப்படி திறந்தால் தூத்துக்குடி  மாவட்டத்தில் மீண்டும் அமைதியற்ற சூழல் உருவாகும் என்பது பெரும்பாலான மக்களின் கருத்து. பெரும் முதலீடு, ஆலை திறப்பு, வேலைவாய்ப்பு,  வர்த்தகம், பொருளாதாரம் என பல விஷயங்களை அலசி ஆராய்ந்தாலும், எந்த உத்தரவும் வலுக்கட்டாயமாக வெகுஜனங்கள் மீது திணிக்கப்படக்கூடாது.  இதுவே, ஜனநாயக மாண்பு. பெரும்பான்மை மக்களின் கருத்து எதுவோ, அதை பிரதிபலிப்பதாகவே எந்த உத்தரவும் இருக்கவேண்டும். இதுவே, சாதாரண  குடிமகனின் எதிர்பார்ப்பு.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thiruvan_5thdaycelb

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

 • rarephots_indiragandhi

  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

 • 2018_indiragandibirthdy

  இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

 • america_winterstorm2018

  வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

 • 2018wildfire_trumph

  கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்