SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளை பக்ரீத் பண்டிகை மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது

2018-08-21@ 18:54:35

நெல்லை:  நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மேலப்பாளையம் ஆட்டுச்சந்தையில் செம்மறி ஆடுகள் விற்பனை  இன்று களை கட்டியது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் சந்தை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  தமிழகத்தில் மேலப்பாளையம் ஆட்டு சந்தை, எட்டயபுரத்திற்கு அடுத்து பெரிய சந்தையாக விளங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் சந்தை நடந்து வருகிறது. ரம்ஜான், பக்ரீத் பண்டிகை காலங்களில்  செம்மறி ஆடுகள்  அதிகமாக விற்பனையாகும். வெள்ளாடு கறியை விட செம்மறி ஆட்டுக்கறிதான்  பிரியாணிக்கு உகந்ததாக இருக்கும் என்பதால், செம்மறி விற்பனை களை கட்டும். தென்காசி, கடையநல்லூர், வீரவநல்லூர், சங்கரன்கோவில், வள்ளியூர், ஆலங்குளம்  மற்றும் குமரி மாவட்டத்தில் இருந்தும்  வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். மேலும் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயி களும் வாங்கி செல்வார்கள்.

இதனிடையே நாளை (புதன்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி மேலப்பாளையம் சந்தையில் இன்று,  வியாபாரம் களை கட்டியது. சுமார் 5ஆயிரம் ஆடுகள் சந்தையில், விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. குர்பானி கொடுப்பதற்காக ஏராளமானோர் ஆடுகளை வாங்க குவிந்தனர்.  பெரும்பாலோனார் செம்மறி ஆடுகளை வாங்கிச்சென்றனர். இதனால் சந்தை பொதுமக்கள் கூட்டத்தால் களை கட்டியது. 10 கிலோ கொண்ட செம்மறி ஆடு அதிகபட்சம் ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனையானது.

40 கிலோ கொண்ட பெரிய ஆடுகள் வரை சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையானது. ஆடுகளுக்கு நல்ல விைல கிடைத்ததால் வியாபரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலப்பாளையம் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரண்ட தால் மேலப்பாளையம் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்