SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சித்தூரில் கார் - லாரி மோதிய விபத்தில் தமிழர்கள் ஐந்து பேர் பலி

2018-08-21@ 17:53:55

ஹைதராபாத் :ஆந்திர மாநிலம் சித்தூரில் கார் - லாரி மோதிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். சித்தூர் மாவட்டம் போடூரூர் அருகே சென்று கொண்டிருந்த கார் - லாரி ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த தர்மப்பா, ரங்கப்பா மற்றும் மோகன் குமார் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்ற இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த 5 பேரும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். விருப்பாட்சிபுரத்தில் உள்ள நாட்டு வைத்தியர் ஒருவரிடம் வைத்தியம் பெற்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-04-2019

    22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்