SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுகவின் முக்கிய தலைவர்கள் ரகசிய கூட்டம் நடத்தப்போவதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2018-08-21@ 03:14:17

‘‘பேப்பர்ல எதை படிச்சுட்டு, யாருக்கு தகவல் சொல்றீங்க...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்துல அரசியல் தலைமை சரியில்லாததால... ஒரு பெண் எஸ்பியே பாலியல் தொடர்பா புகார் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது... அந்த ஆண் அதிகாரிக்கு எப்படி இந்த துணிச்சல் வந்ததுனு யோசிச்சேன்... ஊழல் ஒழிப்புத்துறை என்பதால பல்வேறு அமைச்சர்கள், ஆளுங்கட்சியின் நபர்கள், அதிகாரிகளின் ஊழல், சொத்து சேர்ப்பு விவரங்களை தன் பிங்கர் டிப்சில் வைச்சு இருக்காராம்... அப்புறம் ஆளுங்கட்சி தலைமை சொல்றதை அப்படியே செய்யறாராம்... இதுேபால ஒரு அடிமை அதிகாரி நமக்கு வேண்டும் என்பதால்தான் அந்த பெண் அதிகாரி பலமுறை மனு கொடுத்தும் அதை உயரதிகாரிகள், துறையை தன்னிடம் வைத்துள்ள முதல்வர் உள்பட அனைவரும் அமுக்க பார்ப்பதாக காவல் துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்... அதைத்தான் என் நண்பரிடம் போனில் சொல்லி வருத்தப்பட்டு கொண்டிருந்தேன்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இந்த ஆண்டுல மிகச்சிறந்த ஜோக் எதுன்னு தெரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழக அளவுல பெரிய கட்டமைப்பே இல்லாத... ஜெயலலிதாவால் துரத்தப்பட்ட ஆர்கேநகர்காரர் சொன்னதுதான் ஆண்டின் மிகப்பெரிய ேஜாக்... வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர் ஆரம்பித்துள்ள கட்சிதான் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்னு கொஞ்சம் கூட சிரிக்காம சொல்லியிருக்கார்’’ என்றார் விக்கியானந்தா.‘‘தீபமானவர் இருக்காரா...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபமானவர் ஏறக்குறைய அரசியல் ஆர்வம் குறைந்தவராகவே இருக்கிறாராம்... இவர் கட்சியில் சேர்ந்து போஸ்டிங் வாங்கியவர்கள் வேறு அணிகளுக்கு தாவ ஆரம்பிச்சுட்டாங்களாம்... தேர்தல் எதுவும் நடக்காததால இவருக்கும் கட்சி தொண்டர்களை எப்படி தக்க வைப்பது என்று தெரியாமல் திருதிருவென முழித்து வருகிறாராம்... நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியே இருக்குமானு அவருக்கு நெருக்கமானவர்களே காதுபட பேசிக்கிறாங்க...’’என்றார் விக்கியானந்தா.

‘‘நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வைக்குமா... தனித்து போட்டியிடுமா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘அதிமுக தரப்பில் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னாலும், உண்மையில் பாஜவுடன் கூட்டணி வைத்து தேர்தல் சவால்களை எளிதில் சமாளிக்க முடியும்னு நினைக்கிறாங்க... டெல்லியில இருக்கிற அதிமுக தலைவர்கள் பாஜவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வர்றாங்க... அதுக்குள்ள பாஜவுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அலையை சரி செய்யும் முயற்சிகளில் அதிமுகவும் பாஜவும் சேர்ந்தே ஈடுபட்டுள்ளதாம்... திராவிட தலைவர்களை முடக்கும் முயற்சி அதில் ஒன்று... இவர்கள் பல்வேறு குழுக்களாக இருப்பதால், அவர்களை கட்டுப்படுத்துவதில் மாநில அரசின் பங்கு முக்கியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாம்... அதன் அடிப்படையில்தான் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபடும் நபர்களை கைது செய்து சிறையில் தள்ளுறாங்க... தேசிய பாதுகாப்பு சட்டம் எல்லாம் போடறாங்க... ஆனால் அதை விட பல மடங்கு வேகமாக சமூக வலைதளங்களில் பாஜவை வறுத்ெதடுத்து வர்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உள்ளாட்சி தேர்தல் வருமா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நிச்சயம் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதத்தில் வருவதற்கான ஏற்பாடுகளை ரகசியமாக மாநில தேர்தல் ஆணையம் செய்து வருதாம்... உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால்தான் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பூத் வாரியாக அதிக ஓட்டுக்களை வாங்க முடியும்... ஆளுங்கட்சியினரும் ஆர்வமாக வேலை செய்வாங்க... அதனால உள்ளாட்சி தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தி முடிக்க வேண்டும்னு ஆளுங்கட்சி முடிவு செய்து இருக்காம்... குறிப்பாக கிளை கழகம், மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களை உளவுத்துறையின் மூலம் தேர்வு செய்யும் படலம் நடந்து வருதாம்... அதாவது உண்மையில் அதிமுக விசுவாசிகளை கண்டறியும் பணி நடக்குதாம்... அது முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் ஆளுங்கட்சி வட்டாரத்தில் சொல்றாங்க... பாஜவும் தன் உண்மையான பலத்தை தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக உள்ளாட்சி தேர்தலை நினைக்கிறாங்க... அதனால டெல்லியில இருந்தும் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரி பிரஷர் வந்துட்டு இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதிமுகவில ரகசிய கூட்டம் ஒன்று நடக்கப்போகுதாமே... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ம்... 18 எம்எல்ஏக்கள் தகுதி இழப்பு குறித்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரப்போகுது... ஆளுங்கட்சி நினைத்தபடி வந்தால் எல்லாம் சுபமாக முடியும்... எதிர்மறையாக வந்தால் என்ன செய்வது என்று கட்சியின் மூத்த தலைவர்கள் ரகசிய மீட்டிங் போட்டு விரைவில் பேசப்போறாங்களாம்... மாற்று ஏற்பாடு குறித்தும் அதில் ஆலோசனை நடத்தப்போறதா சொல்றாங்க... தீர்ப்பு பாதகமாக இருந்தால் மற்றொரு அதிரடி நடவடிக்கைக்கு ஆளுங்கட்சி தயாராக இருக்காம்... அதனால தமிழக சட்டமன்றத்துல எம்எல்ஏக்கள் பலம் தானாக குறையுமாம்... அப்படி குறைந்த பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அதில் வெற்றி பெற முடியும்னு சிலர் யோசனை சொல்லி இருக்காங்க... இதையெல்லாம் கூட்டி கழிச்சு பார்த்தால் விரைவில் ரகசிய கூட்டம் நடத்தும் வாய்ப்பு இருக்கிறதா ராயப்பேட்டை அதிமுக வட்டாரங்களில் பேச்சு உலா வருது...’’ என்று சொல்லி முடித்தார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MummifiedFoal

  42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 • SriLankaHomage

  இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

 • selphiGorilla

  கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

 • QingdaoNavalParade

  சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

 • CaucaLandslide

  கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்