SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணம், சொத்துக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து அக்கா, மாமாவை கொன்ற மயிலாப்பூர் பெண் சிறையில் தற்கொலை முயற்சி: ஆவணங்களை கேட்டு மகனை போலீசார் டார்ச்சர் செய்வதாக பரபரப்பு வாக்குமூலம்

2018-08-21@ 00:33:15

சென்னை: பணம், சொத்துக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து அக்கா, மாமாவை கொன்ற மயிலாப்பூர் பெண் கைதி புழல் சிறையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  பெற்று வரும் அவர், சொத்து ஆவணங்களை கேட்டு மகனை போலீசார் டார்ச்சர் செய்வதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மயிலாப்பூர் சித்திரை குளம் பகுதியில் வசித்து வந்தவர் தர்மலிங்கம் (45). இவரது மனைவி மீனாட்சி (40). இருவரும் சித்திரை குளம் பகுதியில்  பூக்கடை நடத்தி வந்தனர். தம்பதிக்கு குழந்தை இல்லை. இவர்கள் இருவரும்  உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்த நாட்களில்  தர்மலிங்கம் மற்றும் மீனாட்சி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் சாவில் மர்ம இருப்பதாக தர்மலிங்கத்தின் அண்ணன் குமார் என்பவர் மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து  விசாரித்தனர். இதற்கிடையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், இருவரது உடலிலும் விஷம் கலந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணை தீவிரப்படுத்தினர். இருப்பினும், கொலையாளிகளை நெருங்க  முடியாமல் போலீசார் திணறினர்.

இந்நிலையில், மீனாட்சி வங்கி கணக்கில் இருந்த ₹17 லட்சத்தை தன் வங்கி கணக்கில் மைதிலி மாற்றியபோது, போலீசில் சிக்கினார். அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பணம் மற்றும் சொத்துக்கு  ஆசைப்பட்டு மைதிலி, பூக்கடையில் வேலை செய்த கள்ளக்காதலன் பாலமுருகன் (29) என்பவருடன் சேர்ந்து தனது அக்கா மற்றும் மாமாவை விஷம் (ஸ்லோ பாய்சன்) கொடுத்து  கொலை செய்தது தெரிந்தது.   இதையடுத்து,  இரட்டை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் மைதிலி மற்றும் பால முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.  பெண் சிறையில் உள்ள தனது அறையில் இருந்த மைதிலி நேற்று முன்தினம் மாலை, வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அருகில், அரளி இலை அரைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக  கைதிகள், இதுபற்றி புழல் சிறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து மைதிலியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு ஆபத்தான நிலையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து புழல் சிறை அதிகாரி கொடுத்துள்ள புகாரின்படி, புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மைதிலி எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் புழல் சிறையில் பரபரப்பு  ஏற்பட்டது. ஸ்டான்லி மருத்துவமனையில் மைதிலி வாக்குமூலம் அளித்ததாக புழல் போலீசார் கூறியதாவது: அக்கா மற்றும் மாமாவின் பணம் மற்றும் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு மைதிலி தனது கள்ளகாதலனுடன்  சேர்ந்து இருவரையும் செய்தார். அதன்பிறகு, அவர்களுடைய சொத்து மற்றும் வங்கி கணக்கில் இருந்த பணத்தை தனது வங்கி கணக்கு மாற்றிக்கொண்டார். தற்போது, அந்த ஆவணங்களை மயிலாப்பூர் போலீசார் மைதிலி  மகனிடம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். இதனால், மனமுடைந்த போன மைதிலி வாழ விரும்பாததால், அரளி இலையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இவ்வாறு மைதிலி கூறியதாக போலீசார் கூறினர்.

தற்கொலையும்.. தற்கொலை முயற்சியும்..
புழல் சிறையில் கடும் கெடுபிடிகளையும் மீறி தற்கொலைகளும், தற்கொலை முயற்சி சம்பவங்களும், கைதிகளுக்கிடையேயான மோதல்களும் தொடர்ந்து நடக்கிறது. சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்  இருந்த ராம்குமார் மர்மமான முறையில் இறந்தார். அவர் மின்வயர் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் சென்னை அண்ணாநகரில் பேராசிரியை கார் ஏற்றி கொன்ற  வழக்கில் சிறையில் இருந்த தீயணைப்பு வீரர் தற்கொலை செய்து கொண்டார். போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான நைஜிரியா கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். வியாசர்பாடி பிரபல ரவுடி பாக்சர் முரளி  கொடூரமான முறையில் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதேபோல், பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.மேலும், அவ்வப்போது கைதிகளிடையே மோதல்களும் தொடர்கிறது. இவ்வளவு போலீஸ்  பாதுகாப்பையும் மீறியும் இந்த சம்பவங்கள் எல்லாம் எவ்வாறு நடக்கிறது என்பதுதான் புரியாத புதிராகவே உள்ளது.

அரளி இலை கிடைத்தது எப்படி?
புழல் சிறையில் உள்ள கைதிகள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட கூடாது என்பதற்காக ஆயுதங்கள் உள்ளிட்ட அபாயகரமானபொருட்களும் எதுவும் அவர்கள் கண்ணுக்கு தெரிவதுபோல் வைக்கக் கூடாது என  உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிகளை சிறைத்துறையினர் கடை பிடிக்கிறார்களா என்பது தான் தெரியவில்லை. கைதிகள் எளிதில் தற்கொலைக்கு பயன்படுத்தும் அரளி இலை புழல் சிறையில் கிடைத்தது எப்படி?  அதை மைதிலி எடுத்து வந்து அரைத்து அருந்தும் வரை காவலர்கள் யாரும் அவரை பார்க்கவில்லையா? என பல கேள்விகள் எழுகிறது. ஆனால், போலீசார் தரப்பிலோ அரளி இலை புழல் சிறையில் இல்லை என  தெரிவித்துள்ளனர். அப்படி இருந்தால், மைதிலி பார்க்க வந்தவர்கள் யாரேனும் கொடுத்துவிட்டு சென்றார்களா? அவர் புழல் சிறைக்குள் அனுப்பும் போது போலீசார் அவர்களை சோதனையிடவில்லை என பல்வேறு சந்தேகங்கள்  எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்