SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஃப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 100 பேர் கடத்தல் : தாலிபன் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்

2018-08-20@ 18:02:14

ஆஃப்கானிஸ்தான்: தாலிபன் தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்கள் சுமார் 100 பேரை கடத்திச் சென்றுள்ளதாக ஆஃப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இஸ்லாமிய தியாகத் திருநாளான ஈத் அல் ஆதாவை முன்னிட்டு ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி தாலிபன்களுடன் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் கான் அபாத் நகர் அருகே 3 பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டு, அதில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 100 பேரை கடத்திச் சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு தாலிபன் தீவிரவாதிகள் பொறுப்பேற்கவில்லை என்றாலும் இந்தப் பகுதி தாலிபன்களின் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் அவர்கள் கடத்திச் சென்றிருக்கக் கூடும் என்று அறியப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்