SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

AP EAMCET 2019 நுழைவுத்தேர்வு குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டிய சில தகவல்கள்

2018-08-20@ 11:45:37

AP EAMCET 2019 நுழைவுத்தேர்விற்கான அறிவிப்பு 2019 பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வினை காகிநாடாவில் உள்ள APSCHE உயர்கல்வி கூட்டமைப்பு சார்பாக JNTU பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக நடத்துகிறது. இந்த நுழைவுத்தேர்வு மூலம், விண்ணப்பதாரர்கள் ஆந்திர பிரதேச மாநிலத்தில் பல்வேறு தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் பயில அனுமதி பெறுகின்றனர். இந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் பல்வேறு பொறியியல், மருத்துவ மற்றும் வேளாண் படிப்புகளில் சேர்க்கை பெற தகுதி பெறுகின்றனர்.

விண்ணப்பதாரர்கள் https://apeamcet.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப படிவம் 2019 பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பித்த பின்பு, விண்ணப்ப படிவத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் சில விவரங்களை திருத்தம் / மாற்றம் செய்ய முடியும். விண்ணப்ப கட்டணம் இன்டர்நெட் பேங்கிங் / டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் மாணவரால் செலுத்தக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு படிப்புகளின்  படி விண்ணப்ப கட்டணம் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
பொறியியல் - ரூ. 450
வேளாண்மைக்கு - ரூ. 450
பொறியியல் மற்றும் வேளாண்மை ஆகிய இரண்டிற்கும் - ரூ. 900

விண்ணப்பப் படிவத்தை வெற்றிகரமாக சமர்ப்பித்தபின், அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தேர்விற்கான அனுமதி அட்டை(Admit Card) வழங்கப்படும். 2019 ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் அனுமதி அட்டை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வின் போது விண்ணப்பதாரர்கள் இந்த அனுமதி அட்டையுடன் தகுந்த ID Card ஒன்றினையும் வைத்திருக்க வேண்டும்.

இந்த நுழைவுத்தேர்வு இரண்டு அமர்வுகளில் (காலை மற்றும் மாலை) ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படும். தேர்வுக்கான மொத்த நேரம் 3 மணி நேரமாகும்.160 கேள்விகள் (MCQ முறையில்) கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 மதிப்பெண் வழங்கப்படும், எதிர்மறை மதிப்பெண் கிடையாது. சேர்க்கைக்கு தகுதி பெற அதிகபட்ச கட் ஆஃப் (Cut Off) மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத்தேர்வில் குறைந்த பட்சம் 25% மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே சேர்க்கைக்கு (Counselling) அனுமதிக்கப்படுவர். எஸ்.டி. / எஸ்.சி. பிரிவுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் எதுவும் இருக்காது.

2019ஆம் ஆண்டின் மே முதல் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தரவரிசையை அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பார்வையிடலாம். மேலும் 2019 ஜூன் 2ஆம் வாரம் (Counselling) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2018

    20-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்