SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரன்சியில் குளிக்கும் இரண்டு துறையினரை பார்த்து மற்ற அதிகாரிகள் பொறாமைப்படுவது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2018-08-20@ 03:14:20

‘‘பர்த் டேவுக்கு என்ன ஸ்பெஷல்... ஓட்டலுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க...’’ சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘காபி குடிச்சுட்டே பேசலாம்னுதான். எனக்கு பர்த் டே இல்ல... சிறைப்பறவைக்கு தான் பர்த் டே...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சிரிக்காதீங்க... சொல்ல வந்த விஷயத்தை சொல்லுங்க...’’ என்று சீரியஸானார் பீட்டர் மாமா. ‘‘கணவர் இறந்த துக்கத்துல சிறைப்பறவை இருக்காங்க... இதனால தன் பிறந்த நாளை பற்றி அவர் யோசிக்கவே இல்லையாம்... இருந்தாலும் தன்னை பார்க்க  வந்த ஆர்கே நகர்காரரிடம் நலம் விசாரித்தாராம்... அப்டியே மன்னையில் இருப்பவரின் கட்சி போணியாகுமான்னு கேட்டாராம்... அதுக்கு ஆர்கே நகர்காரர், ‘ அவங்களுக்கு பெரிய அளவுல மவுசு இல்ல... மன்னை மண்ணை விட்டால் அவங்களுக்கு ஆதரவாளர்கள் கிடையாது... உங்க தயவால தமிழகம்  முழுவதும் நமக்கு கிளைகள் அதிகமா உருவாகிட்டு இருக்கு...

நமக்கு பயந்தே அதிமுக செயற்குழு கூட்டம் தேதியை கூட தள்ளிப்போடறாங்கனு சொன்னாராம்...  அப்போ சிறைப்பறவை, கரன்சியை தேவையில்லாம வாரி இறைக்காதே... இப்போ இருக்கிற கட்சிக்காரங்களை நம்ப முடியாது... தேர்தல் வரும்போது மொத்தமா  சேர்த்து கவனிச்சுடலாம்... அதே மாதிரி தேவையில்லாத விஷயத்துல தலையிட்டு மீண்டும் கோர்ட், கேஸ்னு அலையாதே... அது கட்சிக்கு கெட்ட பெயரும்  ஏற்படுத்திவிடும்னு சொன்னாராம்... எல்லாவற்றையும் கேட்டுட்டு கட்சியை இன்னும் தீவிரமா நடத்த பணம் தேவைன்னு சொன்னாராம்... அதை நான்  பார்த்துக்கிறேன்... நம்ம ஆளுங்க கிட்ட சொல்லி அனுப்புறேன்... பணம் தொடர்பான எந்த விஷயத்துலேயும் நீ நேரடியா டீல் பண்ணாதேன்னு சொல்லி  அனுப்பிட்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தமிழ்நாட்டுல ரெண்டு துறை அதிகாரிகளை பார்த்து மற்ற துறை அதிகாரிகள் அதிர்ச்சியில இருக்காங்களாமே, உண்மையா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ம்.. நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையை சேர்ந்த அதிகாரிகள் நல்லா கல்லா கட்டறாங்களாம்... எந்தப்பக்கம் பார்த்தாலும் கோடிக்கணக்கில்தான் டெண்டர்  விடறாங்களாம்... தமிழ்நாடு முழுவதும் இந்த டெண்டர் பணிகள் வேகமாக நடக்க ஆரம்பிச்சு இருக்காம்... மாநில அரசும் இந்த இரண்டு துறைகளுக்குதான்  முன்னுரிமை தருதாம்... அந்த துறையில பெரும்பாலான அதிகாரிகள் கரன்சியில குளிக்கிறாங்களாம்.. இதை பார்க்கும் மற்ற துறையினர் அதிருப்தியில  இருக்காங்களாம்... எல்லா நிதியையும் தூக்கி ரெண்டு துறைகளுக்கே கொடுத்தா, மற்ற துறைகள் மூலம் மக்கள் பயன்பெறவில்லையா...

குடிநீர்வடிகால் வாரியம்,  மின்வாரியம், உள்ளாட்சி துறைனு பல துறைகள் பணமே இல்லாமல் தள்ளாடி கொண்டு வருது... மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படுவது நல்லதல்ல...  மற்ற துறைகளையும் அரசு கவனிக்க வேண்டும். அந்த துறைகளுக்கும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்க வேண்டும்னு வருத்தப்படறாங்க...’’ என்றார்  விக்கியானந்தா. ‘‘மதுரை மாவட்டத்துல என்ன நிலைமை...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்துல தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விளையாட்டு விடுதி இருக்கு... இங்கு கால்பந்து வீரர்கள் 34 பேர்  உள்ளனர். கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற ஒருவரைத்தான் வீரர்களுக்கு பயிற்சி தர நியமிச்சுருக்காங்களாம்... 2 வருசமா இதே  நிலைமைதான்.. அவரு வரலைன்னா, வீட்ல இருந்து யாராவது ஒருவர் வந்து பயிற்சி அளிப்பாங்களாம்.... கோச் வந்தாலும் சரி... வராட்டினாலும் சரி... அமவுண்ட்  கரெக்டா அக்கவுண்ட்ல செட்டிலாயிடுமாம்... விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெற்ற வீரர்களைத்தான் மாநிலம் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு  போட்டிகளில் தேர்ந்தெடுப்பாங்க... சமீபத்துல விளையாட்டு விடுதி வீரர்கள் பயிற்சியாளர் இல்லாமல் விளையாடிக்கிட்டு இருந்தாங்க...

ஒரு வீரர் பந்தை  உதைக்கும்போது, எதிர்பாராதவிதமாக அவரது ஷூ அடியில் உள்ள ஆணி போன்ற பகுதி எதிர் வீரரின் வயிற்றுப்பகுதியை கிழிச்சுருச்சாம்... உடனே அந்த வீரரை   விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை சேர்ந்தவர்கள் தூக்கிச்சென்று மருத்துவமனையில் சேர்த்திருக்காங்க... டாக்டர்கள் அந்த வீரரின் பித்தப்பையில்  அடிபட்டிருக்கு...  ஆபரேஷன் செஞ்சுத்தான் ஆகுணும்னு சொல்லி பண்ணியும் முடிச்சுட்டாங்க... இப்ப அந்த வீரர் குணமடைந்து விளையாட்டு விடுதிக்கு  திரும்பிட்டாரு... ஆனா அந்த பையனுக்கு செரிமானத்துல எதிர்காலத்துல பிரச்னை வரும்னு டாக்டர்கள் ஒரு பிட்டை சேர்த்து போட்டாங்களாம்...இந்த மாதிரி  எல்லாம் விளையாட்டு ஆணையம் இருந்தால், நம்மாளுக எப்படி ஒலிம்பிக்ல தங்கம் வாங்குவாங்க... ரொம்ப கஷ்டம்..’’ என்று வேதனையுடன் சொன்னார்  விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • BiharProtestBrainFever

  பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

 • YamagataEarthQuake18

  வடமேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..: ரிக்டர் அளவுக்கோலில் 6.8 ஆக பதிவானதால் மக்கள் பீதி!

 • RaptorsShootingToronto

  கனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்!

 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்