SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக செயற்குழு கூட்டம் திடீர் திடீரென தள்ளிப்போகும் ரகசியம் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2018-08-19@ 03:15:22

‘‘என்ன விக்கி, பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கே நேரம் சரியாக இருக்காமே... பாடம் சொல்லித் தர ஞாபகம் இல்லையாமே...’’ என்று சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘ஆமாம், நானும் ேகள்விபட்டேன்... பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் போர்ஷன்களை முடிக்காமல் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஹோம்ஒர்க்காக கொடுத்து கஷ்டப்படுத்தறாங்களாம்... பாடம் நடத்தாமலேயே ஹோம்ஒர்க் கொடுப்பது என்ன நியாயம்னு பெற்றோர் பல பள்ளிகளில் சண்டை போடுவதை பார்க்க முடிகிறது... அதற்கு ஆசிரியர்களோ, எங்களுக்கே சிலபஸ் புரியல... புரிஞ்சா நாங்க ஏன், நடத்தாத பாடத்தை ஹோம்ஒர்க்காக எழுதச் சொல்லப்போறோம்னு புலம்பறாங்களாம்...

எப்போது ஆசிரியர்களின் பயிற்சி முடிவது... எப்போது பாடத்தை நாங்க கற்பிப்பதுன்னு ஆசிரியர்களும் டென்ஷனில் இருக்காங்களாம்... அப்புறம் கவுன்சலிங் என்ற பேர்ல நிறையபேர் வேறு பள்ளிகளுக்கு மாற்றலாகி போய்டாங்களாம்... பொதுத்தேர்வு விரைவில் வர உள்ள சூழலில் காலியாக உள்ள இடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் மாணவ, மாணவிகள் வெளியில் பணம் கொடுத்து டியூசன் போக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்காங்க... இதனால மாணவர்களின் பெற்றோர், டியூசனுக்கு செலவழிக்கிறதுக்கு நாங்க எங்க பிள்ளைங்கள தனியார் பள்ளியிலேயே சேர்த்து இருப்போமேன்னு புலம்பறாங்களாம்...’’ என்று அரசு பள்ளிகளில் தற்போது நடந்து வரும் விஷயங்களை வேதனையுடன் பகிர்ந்து கொண்டார் விக்கியானந்தா.
‘‘அதிமுக செயற்குழு கூட்டம் தள்ளிட்டே போகுதே ஏன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இன்னும் கொஞ்சம் களையெடுக்க வேண்டி இருக்காம்... ஸ்லீப்பர் செல்களை ஏதாவது காரணம் காட்டி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கவும் நடவடிக்கை நடந்துட்டு இருக்காம்... எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உள்பட சில இன்னும் சில நாட்களில் முடிந்த பிறகு சந்தோஷமாக செயற்குழுவை கூட்டிடலாம்னு பேசிக்கிறாங்க... இந்த செயற்குழு கூட்டத்துல அதிமுக உள்கட்சி தேர்தல் தொடர்பான முக்கியமான அறிவிப்பு வெளியாகும்னு சொல்றாங்க... இப்போதைக்கு கட்சியின் பேஸ்மன்ட்டை சரி செய்துட்டு பிறகு உள்கட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று கட்சி தொண்டர்கள் இடையே பரபரப்பாக பேசப்படுதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பணம் கொடுத்தால் வேலூர்ல அரசு வேலையை விலைக்கு வாங்கலாமா...’’ ஆச்சர்யத்துடன் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ரேஷன் கடைகளில் காலியாக உள்ள மேற்பார்வையாளர், எடையாளர் பணியிடங்களுக்கு வேலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் செய்து இருந்தாங்க... கூட்டுறவு துறையில் பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் சிலரும் தங்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தாங்க... ஆனால் கூட்டுறவு துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் ரேஷன்கடையில ேவலை வேணுமா, ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் கொடுத்தா அப்பாயின்மென்ட் ஆர்டர் ரெடின்னு கறாரா சொல்றாராம்... இதுல சந்தோஷப்பட்ட தற்காலிக பணியாளர்கள் உட்பட பலர்  வட்டிக்கு கடன் வாங்கி வேலைக்காக பணம் கொடுத்தாங்க... இத்தனை ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக உழைத்து வரும் நமக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இல்லை போலும் என்று சக ஊழியர்களிடம் புலம்பி வர்றாங்க... கருணை அடிப்படையில் வேலை தாங்கனு கேட்டா... இந்த துறையில இருக்கிறவங்க கருணை காட்டினா நானும் காட்டுறேன்னு அந்த அதிகாரி நக்கல் அடிக்கிறார் என்று சொல்லி புலம்பினர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மன்னார்குடி குடும்பத்துக்குள்ள பெரிய பிரளயமே நடக்குதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மன்னை குடும்பத்துல ரெண்டு குரூப்தான் ரொம்ப வெயிட்டான குரூப்... ரெண்டும் அரசியல் கட்சி தொடங்கிட்டாங்க... இப்போ பிரச்னை என்னென்னா... சொத்து பாகப்பிரிவினை தான் இடைஞ்சலா இருக்காம்... எல்லோருக்கும் சேர வேண்டிய பணத்தை எடுத்து இஷ்டத்துக்கு ஆர்கேநகர்காரர் செலவிடறாராம்... உன் பங்குல நீ செலவு செய்துக்கோ, என் பங்கை பிரிச்சு கொடுன்னு சிறைப்பறவை, ஆர்கேநகர்காரர் கிட்ட கேட்டா, பங்கா, கட்சி, நிறுவனங்கள் வளர்ச்சி உள்பட எதுலேயும் உங்க பங்கு இல்ல... நான் கட்சிக்காக ஜெயிலுக்கு போயிட்டு வந்து இருக்கேன்... அதனால சல்லிகாசு கொடுக்க முடியாதுன்னு சொல்றாராம்... ஆரம்பத்துல என் பங்கும் அரசியல்ல இருந்தது... நாங்க கட்சியின் விழுதுகள் வெளியில தெரியமாட்ேடாம்... உன்னைப்போல தப்பு செஞ்சுட்டு புதுச்சேரியில பதுங்கி இருக்கவும் மாட்டோம்னு மன்னை எதிர்தரப்பு பதிலடி கொடுக்குதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அப்போ இன்னொரு பூகம்பம் இருக்குனு சொல்லு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இடைத்தேர்தல்ல திருப்பரங்குன்றத்துல ஜெயிச்சே காட்டுவேன்னு இப்போதே ரகசியமாக அதிமுக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களை தன் பக்கம் சேர்க்க ஆரம்பிச்சுட்டாராம்... கரன்சியும் முதல்கட்டமா சப்ளை ஆகி இருக்காம்... இது தன் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை வர கொடுத்த டோக்கன் அட்வான்ஸ் தானாம்... ஆர்கேநகர்ல ஜெயிச்சது அதிர்ஷ்டம்னு சொல்றவங்க வாயை மூட திருப்பரங்குன்றம் வெற்றி பயன்படும்... அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தங்கள் பக்கம் வருவாங்கனு கால்குலேஷன் போடுறாராம் ஆர்கேநகர்காரர்...’’ என்று சொல்லி சிரித்தார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்