SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிடி ஆளை, போடு வழக்கை, இது தூத்துக்குடி ‘ஸ்டைல்’

2018-08-19@ 01:02:19

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2  ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத குற்ற வழக்குகள், திருட்டு வழக்குகள்,  கொள்ளை, வழிப்பறி என 2  ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் வசூலில் மட்டுமே குறியாக  உள்ளனர். ஒரு  வழக்கில் ஒருவர் சிக்கினால் அவர் மீது இருக்கும் வழக்குகளில் சிலவற்றையும் சேர்த்து விடுகின்றனர். ஆடு மேய்த்தது போலாச்சு, அண்ணனுக்கு  பொண்னு பார்த்ததும் போல ஆச்சு என்று கையில் கிடைத்தவர்கள் மீது  இருக்கும் வழக்குகளை எல்லாம் முடிக்க சூப்பர் வேகம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம் ஒரு செல்போன் பறிப்பில் மாட்டிய தூத்துக்குடி கல்லூரி  மாணவர் வேல்முருகன் மீது இலவச இணைப்பாக மேலும் இரு வழக்குகளை  சேர்த்துக் கொண்டனர். இதனால் அந்த மாணவர் ஜாமீனில் வந்ததும் தற்கொலை  செய்து கொண்டார். ஆனாலும் தூத்துக்குடி போலீசார்  திருந்தியபாடில்லை. இதனால் தூத்துக்குடி போலீசிடம் சிக்குபவர்கள் மேலும் பல வழக்குகளை தட்டி விடுவார்களோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மாங்கனி சிட்டி ஐ.எஸ். அதிகாரிகளை டோஸ் விட்டு கதறவைத்த கரைவேட்டி
எதிரியின் கோட்டைக்குள் புகுந்து, ரகசியங்களை ெதரிந்து அத்திட்டத்தை முறியடிக்கும் பணியை நுண்ணறிவு பிரிவு போலீசார் செய்து வருகின்றனர்.  அவ்வாறு புகுந்த போலீசை ஆளுங்கட்சி கரைவேட்டி கட்டிய முக்கிய புள்ளி ஒருவர், கண்ணில் விரலை விட்டு ஆட்டிய சம்பவம் சேலத்தில்  நடந்துள்ளது. மாமூல் வாங்குவதில் மோதிக்கொள்ளும் சேலம் போலீஸ் ஸ்டேஷன்களில் கொண்டலாம்பட்டி மிக முக்கியமானது. கடந்த சில  வாரங்களுக்கு முன்பு மாமூலுக்காக புரோக்கர்களிடம் பேசிய ஆடியோ வெளியான விவகாரத்தில், எஸ்.எஸ்.ஐ உள்பட 4 பேர் அதிரடியாக இடம்  மாற்றப்பட்டனர். இதற்கு நுண்ணறிவு பிரிவு ஏட்டுதான் காரணம் என, இதில் பாதிக்கப்பட்ட ஒருவர்,  ஆளுங்கட்சி கரைவேட்டி முக்கிய புள்ளியின்  உதவியாளரிடம் முறையிட்டுள்ளார். இதனை கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற கரைவேட்டி முக்கிய புள்ளி, நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளை  போனில் பிடி பிடி என பிடித்து விட்டாராம். அரசுக்கு எதிரானவர்களுடன் கூட்டணி வைத்துள்ள ஏட்டுவை உடனடியாக தூக்கியே ஆக வேண்டும் என  உத்தரவிட்டாராம். இதனால் ஆடிப்போன அதிகாரிகள், நுண்ணறிவு பிரிவு ஏட்டை தூக்கி அடித்துவிட்டார்கள். இதனால் யாரிடம் தான் பழகுவது என்று  இடிந்து போய் இருக்கிறார்களாம் நுண்ணறிவு பிரிவு ஏட்டுக்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-11-2018

  15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 129JawaharlalNehru

  நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

 • 2018TiruvannamalaiDeepam

  திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

 • israelfire

  காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

 • singaporeasianmodi

  சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்