SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வசூலில் டிஎஸ்பியை தூக்கியடிக்கும் எஸ்ஐ

2018-08-19@ 01:02:17

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட திருப்பாலைக்குடியில் எஸ்ஐயாக ‘மறைந்த முன்னாள் அமைச்சரின் பெயர்  கொண்டவர்’ இருக்கிறார். இவர் இப்பகுதி மணல் மாபியாக்களுடன் கை கோர்த்துக்கொண்டு, டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் இல்லாத நேரத்தில்  மணல் கடத்தல் கும்பலுக்கு, உதவி புரிந்து வருவதாக தொடர் புகார்கள் குவிந்து வருகின்றன. இதன்மூலம் ஒரு இரவுக்கு குறைந்தது ரூ.25 ஆயிரம்  வரையிலும் வருமானம் பெறுகிறார் என்கின்றனர். மேலும். இன்ஸ்பெக்டர் எங்கேயாவது ‘ரெய்டு’ சென்றால், அதையும் தனக்கு  வேண்டப்பட்டவர்களிடம் தகவல் தெரிவித்து தப்பிக்க வைத்து வருவாய் பார்த்து விடுகிறாராம். ‘‘இவரை கூட வச்சுக்கிறது சோத்துப் பொட்டலத்து  பக்கத்துல பூனைய சேத்து வைக்கிறது மாதிரி இருக்கு.. வருமானத்துல ஒரு டிஎஸ்பி சம்பாதிக்கிறதையும் தாண்டி சம்பாதிக்கிறாரு...’’ என சக  போலீசார் புலம்பி வருகின்றனராம்... கடந்த 2 மாதத்தில் ஒரு மணல் வழக்கு மட்டுமே, திருப்பாலைக்குடி போலீஸ் ஸ்டேஷனில் பதிவு  செய்யப்பட்டிருக்கிறது.

டீலிங் ஏட்டுகளுக்கு எஸ்பி டோஸ்...
மாங்கனி மாவட்டம் கொளத்தூர் போலீஸ் லிமிட்டில், கடந்த ஆடிப்பெருக்கு நாளில், தடையை மீறி சேவல் சண்டை நடந்துச்சாம். காசை  வாங்கிக்கொண்டு, ரகசியமாக நடத்த அனுமதி கொடுத்த இன்ஸ்., திடீருனு அந்த பக்கம் போனாராம். போலீஸ் வருவதை பார்த்ததும், அங்கிருந்தவர்கள்  தங்களின் வாகனங்களை போட்டுவிட்டு ஓட்டம் பிடிச்சாங்களாம். உடனே பார்வையாளர்கள் விட்டுச்சென்ற 13 டூவீலர்களை கைப்பற்றி, ஸ்டேஷனுக்கு  எடுத்து வந்து, வழக்கு போடாமல் இருக்க வேண்டும் என்றால் 5 ஆயிரம், 10 ஆயிரம் கொடுங்கனு இன்ஸ்., உள்பட சிலர் காசு பாத்திருக்காங்க. இந்த  தகவல் விஜிலென்ஸ் காதுக்கு சென்று, அவர்கள் வலை விரித்து இன்ஸ்., மற்றும் ஒரு ஏட்டை கையும் களவுமாக கைது செய்து, சிறையில் அடைத்து  விட்டார்கள்.

இந்த விஷயத்துல சேவல் சண்டை நடந்தது பற்றியும், எடுத்து வந்த டூவீலரை கொடுக்க இன்ஸ்., காசு பார்த்தது பற்றியும் ஸ்டேஷன் தனிப்பிரிவு  ஏட்டு (எஸ்பி ஏட்டு), மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிட்டயும், எஸ்பியிடமும் சொல்லவே இல்லியாம். விஜிலென்ஸ் வந்து கைது செய்யும் வரை,  இவ்வளவு விஷயம் நடந்துருக்கு... ஆனால், ஒரு தகவலை கூட சொல்லவில்லையே என எடுத்த எடுப்புலேயே எஸ்பி ஏட்டை சஸ்பெண்ட் செய்து  உத்தரவிட்டாரு மாவட்ட எஸ்பி. இதுபோதாதற்கு மற்ற ஸ்டேஷன்களில், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்களுடன் டீலிங் ைவத்திருக்கிற தனிப்பிரிவு  ஏட்டுகளுக்கு கடும் டோஸ் விட்டுருக்காரு எஸ்பி. இதனால், மாங்கனி மாவட்ட தனிப்பிரிவே ஆடி போயிருக்காம். விரைவில், சில ஏட்டுகளை  மாற்றவும், எஸ்பி முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கு....


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-11-2018

  21-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • bathnatural

  சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

 • puegovolconoerupt

  கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

 • delhiproblem

  டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

 • colombiacarfestival

  கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்