SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவ செலவை விட அதிக வசூல்

2018-08-19@ 01:02:13

நெல்லை மாநகர விபத்து தடுப்பு பிரிவில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையின் கீழ் இரு எஸ்ஐக்கள், நான்கு சிறப்பு எஸ்ஐக்கள் மற்றும் 14 போலீசார்  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாநகர பகுதியில் தினமும் விபத்துக்களில் வாகன சேதங்கள், விபத்துக்களில் படுகாயம் அல்லது உயிர்  பலிகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இது தொடர்பான வழக்குகளை நெல்லை மாநகர விபத்து தடுப்பு பிரிவு போலீசாரே கையாண்டு வருகின்றனர்.  இதில் விபத்துக்களில் வாகனங்கள் மட்டும் சேதமடைந்தாலும், ஆட்களுக்கு காயம் ஏற்பட்டாலும் அல்லது உயிரை இழந்தாலும் விபத்துக்குள்ளான  வாகனங்களையும், விபத்திற்கு காரணமான வாகனங்களையும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு மற்றொரு வாகனத்தில் கொண்டும் செல்லும்  செலவை உரிமையாளர்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் செய்வர். ஆனால் வழக்கு போடுவதற்கோ, வழக்கு போடாமல் இரு தரப்பினரும் பேசி  சமாதானமாக செல்வதற்கோ இரு தரப்பினரிடமும் இருந்து ஒரு தொகையை நேரிடையாக வாய் கூசாமல் கறந்து விடுகின்றனராம் இரண்டு எஸ்ஐகள்.  இதனால் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவ செலவை விட இதற்கு செலவு அதிகமாவதாக கூறி குமுறுகின்றனர்.

நீயா புடிச்சா கேஸ்... நானா புடிச்சா டிரான்ஸ்பர்...!
கோவை புறநகர் பகுதியான துடியலூர், பன்னிமடை பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. பழைய வாடிக்கையாளர்களை தவிர்த்து, புதிய  வாடிக்கையாளர்களை பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பொட்டலங்களை கைவிட்டு, தற்போது டீசன்ட்டாக சிகரெட்டில் கஞ்சா நிரப்பி விற்க  துவங்கிவிட்டனர். இதற்கு, கல்லூரி மாணவர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், விற்பனை ஜோராக நடக்கிறது. பன்னிமடை  பகுதியில் ஆட்டோவில் சென்றபடி, கஞ்சா சிகரெட் விற்பனை தாராளமாக நடக்கிறது. துடியலூர் போலீசார் இதை கண்டுகொள்வதில்லை. காரணம்,  மாமூல்தான் என்கிறார்கள் இப்பகுதி மக்கள். இந்த தகவல், புதிதாக பொறுப்பேற்ற கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் கவனத்துக்கு சென்றது.  அவர், துடியலூர் போலீஸ் இன்ஸ்ெபக்டர், சப்-இன்ஸ்ெபக்டர்களை அழைத்து, ‘’நீயா புடிச்சா கேஸ்... நானா புடிச்சா டிரான்ஸ்பர்... இதில் எது  வசதி...?’’ என எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘’ஏதோ ெகாஞ்சம் மாமூல் வந்துகிட்டு இருக்கு... அதுக்கும் இந்த ஆள் ஆப்பு வெச்சிருவாரு  போலவே...’’ என துடியலூர் போலீசார் புலம்புகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-04-2019

  26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • srilanka_chri11

  கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

 • india_medals11

  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

 • pudin_russiaa1

  வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்