SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இந்தியாவின் முதல் ஹைப்பர் கார் அறிமுகம்

2018-08-19@ 01:02:09

ஜாகுவார் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவன கார்களின் டிசைன் பிரிவில் பணிபுரிந்த சங்கி வஸிராணி என்ற இந்தியர் புதிய ஹைப்பர் காரை  வடிவமைத்துள்ளார். அதேநேரத்தில், இந்தியாவில் ஹைப்பர் கார்களை உருவாக்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அமெரிக்காவில்  வைத்து உருவாக்கி இருக்கிறார். ஐரோப்பாவில் நடந்து வரும் குட்வுட் ஸ்பீடு பெஸ்டிவல் ஆட்டோமொபைல் திருவிழாவில் இந்த கார் தற்போது  பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. ‘’வஸிராணி ஷூல்’’ என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ஹைப்பர் கார், ஒரு ஹைப்ரிட் ரக மாடல் ஆகும்.  டர்பைன் மற்றும் மின் மோட்டார் துணையுடன் இயங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் உருவாக்கத்திற்கு, போர்ஸ் இந்தியா பார்முலா அணி பெரும் ஒத்துழைப்பை நல்கி இருக்கிறது. அதுபோன்று, இந்த காரின் டர்பைன் மற்றும்  கியர்பாக்ஸ்களை உருவாக்குவதற்கு இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் தொழில்நுட்ப உதவியை வழங்கி இருக்கிறது. மிச்செலின் மற்றும் பிரெம்போ  ஆகிய நிறுவனங்களும் இந்த ஹைப்பர் உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கி இருக்கின்றன.

இந்த காரின் நான்கு சக்கரங்களிலும் தலா ஒரு  மின் மோட்டார் வீதம் 4 மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. டார்க் வெக்டரிங் தொழில்நுட்பத்தில் இயங்குவதால், ஒவ்வொரு மின்மோட்டாரும்  சக்கரத்திற்கு தேவைப்படும் சக்தியை மிக துல்லியமாக வழங்குகிறது. இந்த காரின் பேட்டரி வெறும் 300 கிலோ மட்டுமே எடை கொண்டது. மைக்ரோ  டர்பைன் மூலமாக பேட்டரியை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் டர்பனை இயக்க விசேஷ விமான  எரிபொருள் தேவையில்லை. சாதாரண பெட்ரோலில் இயங்கும் என்பது மிக சிறப்பு. கூடுதல் பேட்டரிகள் தவிர்க்கப்பட்டு இருப்பதால், காரின் எடையும் வெகுவாக குறைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரேக் பிடிக்கும்போதும் பேட்டரி  சார்ஜ் ஆகும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் நுட்பமும் இந்த காரில் உள்ளது. இதனால், இந்த ஹைப்பர் கார் ரேஞ்ச் குறித்து அதிக கவலை கொள்ள தேவை  இருக்காது என்கிறது வஸிராணி ஆட்டோமோட்டிவ் நிறுவனம். இந்த கார் முழுக்க முழுக்க சிறந்த கையாளுமை கொண்ட ஹைப்பர் காராக  வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • teslacar_won

    விபத்து சோதனையில் 5 நட்சத்திரம் பெற்ற டெஸ்லா மாடல் 3 கார்

  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்