SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வணிகமாவதை தடுக்கவே நீட் தேர்வு என கூறிவிட்டு மருத்துவ இடங்களை நிகர்நிலை பல்கலை விற்பதை அனுமதிப்பது என்ன நியாயம்?: மத்திய அரசுக்கு ராமதாஸ் கேள்வி

2018-08-19@ 01:01:47

சென்னை: மருத்துவக் கல்வி வணிகமாவதை தடுக்க தான் நீட் தேர்வு கொண்டு வந்ததாக கூறும் மத்திய அரசு நிகர்நிலைப்   பல்கலைக்கழகங்கள் மருத்துவ இடங்களை விற்க  அனுமதிப்பது எந்த வகையில் நியாயம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:  தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள அகில  இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை இரண்டு கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில் (3ம்  கட்டம்) கலந்தாய்வு தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இதில் நிரப்பப்படாத இடங்கள் வரும் 26ம் தேதிக்கு பிறகு தனியார் நிகர்நிலை  பல்கலைக்கழகங்களிடமே ஒப்படைக்கப்பட்டு, சில வரையறைக்குட்பட்டு, அவற்றின் விருப்பப்படி நிரப்பி கொள்ள அனுமதிக்கப்படும். இதை பயன்படுத்தி மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை விற்பனை செய்யும் முயற்சியில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டிருக்கின்றன.  2ம் கட்ட கலந்தாய்வின் இறுதியில் நாடு முழுவதும் 3042 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆண்டுக்கு 11,600 ரூபாயும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அதிகபட்சமாக ₹4  லட்சமும் மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ₹25 லட்சம் வரை கட்டணமாக  வசூலிக்கப்படுகிறது.

நீட் தேர்வில் 300க்கும் கூடுதலான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் பணம் இல்லாததால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர முடியாமல்  வெளியேறும் நிலையில், 100 மதிப்பெண் எடுத்தவர்கள் தங்களிடமுள்ள பணத்தைக் கொண்டு அப்படிப்பில் சேருவார்கள். மருத்துவக் கல்வியின்  தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிக மயமாக்கப்படுவதை தடுக்கவும் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக கூறிக் கொள்ளும் மத்திய  அரசு, மற்றொருபுறம் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கொல்லைப்புற வழியாக மருத்துவப் படிப்பு இடங்களை விற்க அனுமதிப்பது எந்த வகையில்  நியாயம்? இது நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தை சிதைப்பது மட்டுமின்றி மருத்துவக் கல்வியின் தரத்தையும் குறைத்து விடும்.நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாத இடங்களை மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக அறிவித்து அந்தந்த மாநில அரசுகளிடம்  ஒப்படைப்பது தான் சரியானதாக இருக்கும். ஆண்டு கல்விக் கட்டணமும் ₹4 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும். எனவே, தமிழகத்தில் நிரப்பப்படாமல்  போகும் 700 க்கும் மேற்பட்ட மருத்துவ, பல் மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக அறிவித்து தமிழக அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்க  வேண்டும். இதை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்