SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராணுவ உதவியுடன் கொள்ளிடம் பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

2018-08-19@ 00:41:45

சென்னை: கொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின்  வலியுறுத்தியுள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக ஒருலட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் காவிரியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் காட்டாற்று வெள்ளம்போல் தண்ணீர் சீறிப்பாய்கிறது. இந்தநிலையில் கொள்ளிடம் இரும்பு  பாலத்தில் 2 நாட்களுக்கு முன்பு திடீரென விரிசல் ஏற்பட்டது.
இதனால் அந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இருப்பினும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், ராணுவ  உதவியுடன் கொள்ளிடம் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில், போக்குவரத்தை மட்டும் தடை செய்துவிட்டு அதிமுக  அரசு அமைதி காப்பது கண்டனத்துக்குரியது. மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ராணுவ உதவியுடன்  உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்