SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

செப்.5 முதல் சிடிஎம்ஏ சேவை ரத்து : சென்னை மண்டல பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

2018-08-18@ 01:12:46

சென்னை: ஜி.எஸ்.எம் சேவையை தற்போது அதிகமானோர் பயன்படுத்தி வருவதால் பழைய தொழில்நுட்பமான சி.டி.எம்.ஏ தொழில்நுட்ப சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர் சேவையானது மிகவும் குறைவாக இருந்து வந்தது. இதேபோல், இந்த சி.டி.எம்.ஏ சேவைக்காக கூடுதல் செலவு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், செப்டம்பர் 5ம் தேதி முதல் இந்த சி.டி.எம்.ஏ தொழில்நுட்ப அடிப்படையிலான தொலைபேசி இணைப்பு சேவையை திரும்ப பெறுவதாக சென்னை மண்டல பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மண்டல பி.எஸ்.என்.எல் வெளியிட்ட செய்தி குறிப்பு: செப்டம்பர் 5ம் தேதி முதல் சி.டி.எம்.ஏ தொழில்நுட்பம் அடிப்படையிலான தொலைபேசி இணைப்புகள் திரும்ப பெறப்படுகின்றன. பி.எஸ்.என்.எல் சென்னை மண்டலத்தை பொறுத்தவரை சி.டி.எம்.ஏ தொலைபேசி இணைப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்.லின் பிறவகை தொலைபேசி இணைப்புக்கு தங்கள் எண்ணை மாற்றிக்கொள்ள வேண்டும். 4429, 4427 என தொடங்கும் 8 இலக்க எண் உள்ள இணைப்பு, 9183 என தொடங்கும் 10 இலக்க எண் கொண்ட சி.டி.எம்.ஏ இணைப்பு பெற்றவர்கள் அருகாமையில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொள்ளலாம். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்