SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எகிறப்போகிறது விலை

2018-08-18@ 00:26:08

டா லருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஜனவரி மாதம் முதல் குறைந்து கொண்டே வந்துள்ளது. தற்போது டாலருக்கு நிகரான மதிப்பு 70.40 ஆக குறைந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள் முதல் ஆட்டோமொபைல் பாகங்கள் வரை விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில கார் நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் உற்பத்தியின் மீதான விலையை ஏற்றிவிட்டனர். விவசாய பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையும் உயர்வதால், உணவு பொருட்களின் விலையும் உச்சத்தை தொடக்கூடும். இந்திய பண மதிப்பு குறைந்ததால் கச்சா எண்ணெய் இறக்குமதி விலையும் உயரும். இதனால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 60  காசு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பண மதிப்பிழப்பு திட்டம் வெளிநாடுகளில் எப்படி தோல்வியை தழுவியதோ அதே போன்று இந்தியாவிலும் முழு தோல்வியை தழுவியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலைவாசி உயர்வு மேலும் அதிகரித்துள்ளதே தவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதால் ஏற்றுமதி, இறக்குமதி கடுமையாக பாதிக்கும். அன்னியசெலாவணி மூலம் வரும் வருவாய் குறையும். வங்கிகளில் கடன் வட்டி வகிதம் உயரும். இதனால் வங்கிக்கடன் வசூலாவதில் சிக்கல் ஏற்படும். வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதலாக செலவழிக்க வேண்டியதிருக்கும். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக அமையும். அங்கொன்று, இங்கொன்றாக நடந்து வந்த சிறு, குறு தொழில் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பண மதிப்பு குறைந்துள்ளதால் இந்திய நகரத்தில் வாழும் நடுத்தர குடும்பங்கள் தான் பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மோடி தலைமை யிலான பாஜ அரசின் பொருளாதார கொள்கை மீதான தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இந்திய பணத்தின் மீதான மதிப்பு குறைந்துள்ளது சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு மட்டும் தான் சாதகமாக அமைந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை பெட்ரோல், டீசல் விலையை வைத்து தான் அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அப்படியிருக்க ஆயில் விலை உயரும் போது அனைத்து பொருட்களின் மீதான விலை உயர்வும் தவிர்க்க முடியாதது ஆகிவிடும். நேரடி விலை ஏற்றம், மறைமுக விலை ஏற்றம், மாநில வரி, சேவை வரி, ஜி.எஸ்.டி என்று பொருட்களின் இறுதி விலை விண்ணை தொடும். எனவே மத்திய அரசு பொருளாதார ஸ்திரத்தன்மை மீது கவனம் செலுத்தி விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொழில்துறையினர் முதல் சராசரி மனிதன் வரையிலான எதிர்ப்பார்ப்பாக உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-11-2018

  14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • kumbamelawork

  அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

 • karwasaathhus

  கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

 • statuevisitors

  உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

 • californiafire

  கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்